என் மலர்tooltip icon

    உலகம்

    ரூ.5 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக தனது 2 கால்களையும் அகற்றிய மருத்துவர்
    X

    ரூ.5 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக தனது 2 கால்களையும் அகற்றிய மருத்துவர்

    • உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் முழங்கால்களை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்த வீடியோக்களை பெற்றுள்ளார்.
    • மற்றொரு மருத்துவரின் உதவியுடன் தனது இரண்டு கால்களையும் அகற்றினார்.

    பிரிட்டனில் உள்ள ஒரு மருத்துவர் காப்பீட்டுத் தொகைக்காக தனது கால்களை அகற்றிய சம்பவம் அரங்கேறி உள்ளது. 5 லட்சம் பவுண்டுகள் (ரூ. 5.4 கோடி) கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இரண்டு முழங்கால்களுக்கும் கீழே உள்ள பகுதியை அகற்றினார்.

    நீல் ஹாப்பர் (49) என்ற அந்த மருத்துவர் தனது இரண்டு கால்களையும் வேண்டுமென்றே அகற்றியதாக காப்பீட்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளன. இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.

    உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் முழங்கால்களை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்த சில பிரீமியம் வீடியோக்களை நீல் ஒரு வலைத்தளத்திலிருந்து வாங்கியது கண்டறியப்பட்டது. அவற்றின் அடிப்படையில், அவர் மற்றொரு மருத்துவரின் உதவியுடன் தனது இரண்டு கால்களையும் அகற்றினார்.

    தனக்கு இரத்த நாளப் பிரச்சினை இருப்பதாகவும், முழங்கால்கள் அகற்றப்படாவிட்டால், அது உடல் முழுவதும் பரவும் என்றும் தங்களை நம்ப வைக்க முயன்றதாக காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளன.

    Next Story
    ×