search icon
என் மலர்tooltip icon
    • நவீன தேனீ வளர்ப்பின் முன்னோடியான அன்டன் ஜான்சா பிறந்தநாள் உலக தேனீக்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
    • மனித வாழ்க்கைக்கு தேனீ வளர்ப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தம்பதி தெரிவித்தனர்.

    நத்தம்:

    பல நூற்றாண்டுகளாக கடினமாக உழைக்கும் உயிரினமான தேனீக்கள் மக்கள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பயனளித்து வருகின்றன.

    ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவுக்கு மகரந்தத்தை எடுத்துச் செல்வதன் மூலம் தேனீக்கள் மற்றும் பிற மகரந்த சேர்க்கைகள் ஏராளமான பழங்கள், கொட்டைகள், மற்றும் விதைகளை உற்பத்தி செய்வதோடு மட்டு மல்லாமல் உணவு பாது காப்பு மற்றும் ஊட்ட ச்சத்திற்கு பங்களிக்கும் பல்வேறு வகைகளையும் சிறந்த தரத்தையும் உருவாக்குகின்றன.

    மகரந்த சேர்க்கை பொதுவாக சுற்றுச்சூழலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பல்லுயிர், விவசாயம் மற்றும் மனித நேயம் சார்ந்திருக்கும் துடிப்பான சுற்றுச்சூழல் அமைப்புகளை பராமரிக்க உதவுகிறது. மனித நல்வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்திற்கு முக்கியமான பல்வேறு வகையான தாவரங்களுக்கு மகரந்த சேர்க்கை தேவை ப்படுகிறது. உண்மையில் தேனீக்கள் மற்றும் பிற மகரந்த சேர்க்கைகள் பல பயிரிடப்பட்ட மற்றும் காட்டுத்தாவரங்களின் இனப்பெருக்கம் ஆகியவற்றின் முக்கியமான சுற்றுச்சூழல் சேவையை வழங்குகின்றன.

    ஒவ்வொரு ஆண்டும் உலக தேனீ தினத்தை அனுசரிப்பதன் மூலம் மக்களையும் உலகத்தையும் ஆரோக்கியமாக வைத்திரு ப்பதில் தேனீக்கள் மற்றும் பிற மகரந்த சேர்க்கைகள் வசிக்கும் முக்கிய பங்கு மற்றும் அவை இன்று எதிர்கொள்ளும் பல சவால்கள் குறித்து விழி ப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    நவீன தேனீ வளர்ப்பின் முன்னோடியான அன்டன் ஜான்சா பிறந்தநாள் உலக தேனீக்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஜான்சா ஸ்லோவேனி யாவில் உள்ள தேனீ வளர்ப்பவர்களின் குடும்ப த்திலிருந்து வந்தவர், அங்கு தேனீ வளர்ப்பு என்பது நீண்ட கால பாரம்பரிய த்துடன் ஒரு முக்கியமான விவசாய நடவடிக்கையாகும்.

    தற்போது தேனீக்கள் மகரந்த சேர்க்கைகள் மற்றும் பல பூச்சிகள் ஏராளமாக குறைந்து வருகின்றன. இந்த நாள் நம் அனைவருக்கும் நாம் அரசாங்கங்கள் நிறுவன ங்கள் அல்லது சிவில் சமூகத்திற்காக வேலை செய்தாலும் அல்லது அக்கறையுள்ள குடி மக்களாக இருந்தாலும் மகரந்த சேர்க்கைகள் மற்றும் அவற்றின் வாழ்விட ங்களை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அவற்றின் மிகுதியையும் பன்முக த்தன்மையையும் மேம்படுத்தும் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் செயல்களை ஊக்குவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இது குறித்து நத்தம் விவசாயி குணசேகரன் கூறுகையில்,

    கடந்த 2010-ம் ஆண்டு மதுரை வேளாண் அறிவியல் மையத்தில் தேனீ வளர்ப்பு பயிற்சி பெற்றேன். 2 காலி பெட்டிகளை வாங்கி தேனீக்கள் வளர்க்க ஆரம்பித்தேன். தேன் கிடைப்பதை விட பூக்களில் அயல் மகரந்த சேர்க்கைக்கு தேனீக்கள் அவசியம் என்பதை நிறைய மகசூல் பெற்ற அனுபவத்தில் உணர்ந்தேன். கதிர் கிராம தொழில்கள் ஆணையத்தின் ரூ.9.5 லட்சம் கடன் பெற்று தேனீக்கள் வளர்ப்பை தொழிலாக தொடங்கினேன். ரூ.2.90 லட்சம் மானியம் கிடைத்தது. இப்போது 1000 தேனீ பெட்டிகள் வைத்துள்ளேன். 300 பெட்டிகள் மூலம் தேர்ந்தெடுக்கிறது. 700 பெட்டிகளில் தேன் போக தேனீக்கள் உற்பத்தியாக பராமரிக்கிறேன்.

    தோட்டக்கலை வேளாண்மை துறைகளுக்கு தேனீக்களுடன் பெட்டிகளை விற்பனை செய்கிறேன். தேன், தேன் மெழுகு மகரந்தம் அனை த்துமே நல்ல விலைக்கு விற்கலாம். ஆண்டுக்கு 2 டன் தேன் உற்பத்தி செய்கிறேன். தேனீக்களை ஒரே இடத்தில் வைத்து வளர்க்க முடியாது ஒவ்வொரு மரம், செடிக்கும், பூக்கும் சீசன் மாறுபடுவதால் அதற்கேற்ப அவற்றை இடம்பெயர்த்த வேண்டும். எனது மனைவி மாரிய ம்மாளும் தற்போது தேனி வள ர்ப்பில் ஆர்வம் காட்டி வரு கிறார். மனித வாழ்க்கைக்கு தேனீ வளர்ப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    • மலைக்கோவிலில் இருந்து 200 அடியில் சிறிய அளவிலான பாறை உருண்டு தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களின் மீது விழுந்ததால் குழாய்கள் சேதம் அடைந்தது.
    • கோவில் ஊழியர்கள் உடைந்த தண்ணீர் குழாயை துரிதமாக செயல்பட்டு சரி செய்தனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். மலைக்கோவிலுக்கு கோடைகால நீர்தேக்கம் , பாலாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த தண்ணீர் பக்தர்களுக்கு குடிநீர், அன்னதான சேவைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    மலைக்கோவிலில் இருந்து 200 அடியில் சிறிய அளவிலான பாறை உருண்டு தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களின் மீது விழுந்ததால் குழாய்கள் சேதம் அடைந்தது. பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்ய தனி படிப்பாதையான திருமஞ்சன பாதை உள்ளது.

    இந்தப் பாதையின் அருகில் பாறைகள் உருண்டு விழுந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது, இதனால் பழனி மலை கோவிலுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. ஏற்கனவே தண்ணீர் உயர்நிலை நீர் தொட்டி தண்ணீர் கொள்ளளவு வைக்கப்பட்டுள்ள தண்ணீரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் கோவில் ஊழியர்கள் உடைந்த தண்ணீர் குழாயை துரிதமாக செயல்பட்டு சரி செய்தனர்.

    • க.விலக்கு பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை என புகார் எழுந்தது.
    • பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் ஒப்புதலுடன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    ஆண்டிபட்டி:

    தேனி அருகே க.விலக்கு பகுதியில் அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த ஆஸ்பத்தி ரிக்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாது கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 32 பேர் தலைகாய சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்து சிகிச்சை அளிக்க நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணத்துவம் பெற்ற டாக்டர்கள் கல்லூரி ஆஸ்பத்திரியில் தங்கியிருக்க வேண்டும்.

    ஆனால் 2018-ம் ஆண்டு பணியில் சேர்ந்த டாக்டர் சந்தானகிருஷ்ணன் தேனி மருத்துவக்கல்லூரிக்கு வருவதில்லை. வருகை பதிவிற்கான பயோமெட்ரிக் பதிவு செய்வதும் இல்லை என புகார் எழுந்தது. விபத்தில் பாதிக்கப்பட்டு தலைக்காய சிகிச்சைக்காக மதுரைக்கு பரிந்துரை செய்யப்படுபவர்களில் பலர் வழியிலேயே உயிரி ழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே அவர் மீது நட வடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து ஆஸ்பத்திரி மருத்துவத்துறை அதிகாரி கள் கூறுகையில்,

    டாக்டர் சந்தான கிருஷ்ணன் தேனி மருத்துவ க்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு முறையாக பணிக்கு வருவதில்லை என பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தனர். இதுகுறித்து விளக்க குறிப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால் இதற்கு முறையான பதிலை அளிக்காத அவர் நேரிலும் விளக்கம் அளிக்கவில்லை. இதனால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மேலும் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதால் டாக்டர் சந்தானகிருஷ்ணன் மீது பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் ஒப்புதலுடன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் முறையாக பணியாற்றாததால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.எனவே டாக்டர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றனர்.

    • பைக்கில் சென்றபோது தடுமாறி விழுந்ததில் அவ்வழியே வந்த அரசு பஸ் இவர்கள் மீது ஏறி இறங்கியது.
    • இதில் பூ வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் உள்ள எத்திலோடு ஊராட்சி, காமாட்சி புரத்தை சேர்ந்தவர் திருக்கோவில் (வயது34). அதே ஊரைச் சேர்ந்தவர் பழனிமுத்து (34). பூ வியாபாரிகளான இவர்கள் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்கிக்கொண்டு கொடை க்கானலில் விற்பனை செய்து வந்தனர்.

    நேற்று மோட்டார் சைக்கிளில் மணியகார ன்பட்டி அருகே இருவரும் சென்று கொண்டிருந்த போது பைக் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறியது. அப்போது அவ்வழியே வந்த அரசு பஸ் இவர்கள் மீது ஏறி இறங்கியது. இதில் திரு க்கோ வில் சம்பவ இட த்தில் உயிரி ழந்தார்.

    பழனி முத்து வுக்கு 2 கால்களும் துண்டான நிலையில் நிலக்கோட்டை அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைக்க ப்ப ட்டார். இது குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

    • கணவருடைய சகோதரர் அடிக்கடி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
    • புகாரின்பேரில் கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள குமணன்ெதாழு வெம்பூர் மேற்குதெருவை சேர்ந்த மணீஸ்வரன் மனைவி மேகலா(34). இவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் வாய்பேச இயலாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் கணவர் மணீஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து வரதட்சணை கேட்டு மேகலாவை கொடுமைப்படுத்தி வந்தனர்.

    வரதட்சணை வாங்கி வராததால் அடித்து உதைத்து குழந்தைகளை தங்கள் வசம் வைத்துக்கொண்டனர். மேலும் மணீஸ்வரனின் சகோதரர் கோவிந்தசாமி அடிக்கடி மேகலாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இதுகுறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மேகலா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வரதட்சணை கொடுமைப்படுத்திய கணவர் மணீஸ்வரன், அவரது சகோதரர் கோவிந்தசாமி, தந்தை வேலுச்சாமி, தாய் எட்டியம்மாள், உறவினர்கள் மகேஸ்வரி, கவிதா ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரையண்ட் பூங்காவில் அனைத்து செடிகளிலுமே சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக வண்ண வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
    • வெள்ளை, சிகப்பு, ஆரஞ்சு, இளஞ்சிகப்பு, மெரூன் ஆகிய வண்ணங்களில் பூத்துள்ள மலர்கள் முன்பு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    கொடைக்கானல்:

    கோடைவிடுமுறையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. அவர்களை கவரும் வண்ணமாக கோடைவிழா மலர்கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்காக மலர்கண்காட்சி வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக பல்வேறு பகுதி களில் இருந்து மலர்செடிகள் கொண்டுவரப்பட்டு பிரையண்ட் பூங்கா, செட்டியார்பூங்கா, ரோஜாபூங்கா உள்ளிட்ட இடங்களில் நடவு செய்து தோட்டக்கலைத்துறையினர் பராமரித்து வந்தனர்.

    தற்போது அனைத்து செடிகளிலுமே சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக வண்ண வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. பிரையண்ட் பூங்காவில் பல்வேறு ரோஜா வகைகள், டெல்பீனியம், ஹாலந்து ல்லா, தயாந்தஸ், சால்வியா, ஆப்ரிக்கன்மேரிகோல்டு உள்ளிட்ட பூக்கள் பல வண்ணங்களில் பூத்துள்ளது. வெள்ளை, சிகப்பு, ஆரஞ்சு, இளஞ்சிகப்பு, மெரூன் ஆகிய வண்ணங்களில் பூத்துள்ள மலர்கள் முன்பு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால் பிரையண்ட் பூங்காவில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது விதவிதமான வண்ணங்களில் பூத்துள்ள வில்லியம்மலர்கள் தனிமுத்திரை பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வருசநாடு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தார் சாலை அதிக அளவில் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறிவிட்டது.
    • வருசநாடு வாலிப்பாறை இடையே விடுபட்ட பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு முதல் வாலிப்பாறை வரை தார் சாலை அமைந்துள்ளது. இதில் குறிப்பிட்ட அளவிலான தார் சாலை பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அந்த பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

    இதனால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் வனத்துறையினர் குறிப்பிட்ட அளவிலான பகுதிக்கு மட்டும் தார் சாலை அமைக்க தற்போது வரை தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் மட்டும் தார் சாலை அதிக அளவில் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறியது.

    இதற்கிடையே கடந்த வாரம் வருசநாடு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தார் சாலை அதிக அளவில் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறிவிட்டது. எனவே இரவு நேரங்களில் பைக் விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் தார் சாலை சேதமடைந்த பகுதியில் ஆட்டோ, மினி வேன் உள்ளிட்ட சிறிய அளவிலான வாகனங்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

    குறிப்பாக வருசநாடு முருக்கோடை இடையே சாலை அதிக அளவில் சேதமடைந்து விட்டதால் ஆட்டோக்களில் பொதுமக்களை ஏற்றி செல்ல முடியவில்லை. இதனால் அந்த பகுதியில் பொதுமக்களை இறக்கிவிட்டு குறிப்பிட்ட தொலைவு நடந்த சென்று மீண்டும் ஆட்டோக்களில் ஏற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வனத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருசநாடு வாலிப்பாறை இடையே விடுபட்ட பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஊனத்தை கேலி செய்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளி வாலிபரை சரமாரியாக வெட்டியதால் கைது செய்யப்பட்டார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே சில்ல மரத்துப்பட்டியை சேர்ந்தவர் மோகன்(56). இவர் மாற்றுத்திறனாளி யாவார். அதேபகுதியை சேர்ந்த ரமேஷ்(39) என்ற வாலிபர் மோகனின் உடல் ஊனத்தை கேலி, கிண்டல் செய்து வந்தார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் மோகன் அவரது உறவினரை தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டிருந்தார். மோகன் தன்னைத்தான் திட்டுவதாக நினைத்து அருகில் இருந்த அரிவாளை எடுத்து ரமேசை சரமாரியாக வெட்டி ச்சாய்த்தார்.

    இதில் படு காயமடைந்த ரமேஷ் போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி அருகே பள்ளி மாணவி உள்பட 3 பேர் மாயமானதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம் :

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பொட்டிபுரம் திம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் மகள் பிரியதர்ஷிணி (வயது 16). இவர் போடியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நாளை தேர்வு முடிவுகள் வெளி வர உள்ள நிலையில் தனது தோழியை பார்த்து வருவதாக கூறிச் சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனியைச் சேர்ந்த செல்வம் மகள் எமிமாள் (24). இவர் உத்தம பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமனார். அவரது சகோதரி அன்னை தெரசா கொடுத்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம் கோவிந்தன்பட்டி பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பன்னீர் மகன் அந்தோணி சலேத் (33). டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை. இது குறித்து அவரது மனைவி ரூபினி கொடுத்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கோவில் திருவிழா தொடர்பாக தி.மு.க. பிரமுகர் மீது புகார் கொடுக்க பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    எரியோடு:

    எரியோடு அருகே கோவிலூர் தங்கச்சியம்மா பட்டியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல கிராமங்களுக்கு பாத்திய ப்பட்டதாகும்.

    கோவில் நாட்டாண்மை ஜெயக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரது மகன் பாலுமகேந்திரா பொறுப்பேற்று இந்த ஆண்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தொடங்கினார். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் வீரக்குமார் மற்றும் சிலர் கோவில் நிர்வாக பொறுப்பு அதே குடும்பத்திடம் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் பாலுமகேந்திரா குறித்து வீரக்குமார் அவதூறாக பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தனர். அதன்படி ஏராளமான வாகனங்களில் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எரியோடு போலீஸ் நிலையத்திற்கு புறப்பட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையி லான போலீசார் ஒத்தக்கடை பகுதியிலேயே பொது மக்களை தடுத்துநிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்ததால் கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • உத்தமபாளையம் போலீசார் தண்ணீர் தொட்டி தெரு, கோம்பை சாலையில் ரோந்து சென்றனர்.
    • பைக்கில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் போலீசார் கைது செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் போலீசார் தண்ணீர் தொட்டி தெரு, கோம்பை சாலையில் ரோந்து சென்றனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். போலீசாரை கண்டதும் 2 பேர் தப்பிஓடிவிட்டனர்.

    ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவரிடம் விசாரித்தபோது கஞ்சா விற்பனைக்காக கடத்திச்சென்றது தெரியவந்தது. இதனைதொடர்ந்து பிரதீபன்(35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பிஓடிய சதிரேஸ்வரன், அம்மாவாசி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு தேனி பைபாஸ் செல்லும் சாலையில் பெண் உள்பட அவரது கணவரும் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
    • பின்னால் வந்த மற்றொரு பைக்கில் வந்த மர்மநபர்கள் பெண்ணின் தாலிச்செயினை பறித்துச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தேனி:

    ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சுமதி(33). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 4 பேரும் மோட்டார் சைக்கிளில் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.

    அங்கு சாமி தரிசனம் செய்தபின்னர் பொழுதுபோக்கு அம்ச ங்களை பார்வையிட்டனர். பின்னர் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். குமுளி பைபாசில் இருந்து தேனி பைபாஸ் செல்லும் சாலையில் சென்றபோது பின்னால் மற்றொரு வாகனத்தில் வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க மர்மநபர் திடீரென சுமதியின் கழுத்தில் இருந்த 9 பவுன் தங்க தாலிக்கொடியை திருட முயன்றார்.

    ஆனால் அவர் நகையை இறுக்க பிடித்துக்கொ ண்டதால் பாதியளவை மட்டும் பறித்துக்கொண்டு கண்இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து வீரபாண்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து நகை பறித்துச்சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

    ×