search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எரியோடு அருகே தி.மு.க. பிரமுகர் மீது புகார் கொடுக்க திரண்ட பொதுமக்கள்
    X

    தி.மு.க. பிரமுகர் மீது புகார் கொடுப்பதற்காக திரண்ட கிராம மக்களை படத்தில் காணலாம்.

    எரியோடு அருகே தி.மு.க. பிரமுகர் மீது புகார் கொடுக்க திரண்ட பொதுமக்கள்

    • கோவில் திருவிழா தொடர்பாக தி.மு.க. பிரமுகர் மீது புகார் கொடுக்க பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    எரியோடு:

    எரியோடு அருகே கோவிலூர் தங்கச்சியம்மா பட்டியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல கிராமங்களுக்கு பாத்திய ப்பட்டதாகும்.

    கோவில் நாட்டாண்மை ஜெயக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரது மகன் பாலுமகேந்திரா பொறுப்பேற்று இந்த ஆண்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தொடங்கினார். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் வீரக்குமார் மற்றும் சிலர் கோவில் நிர்வாக பொறுப்பு அதே குடும்பத்திடம் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் பாலுமகேந்திரா குறித்து வீரக்குமார் அவதூறாக பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தனர். அதன்படி ஏராளமான வாகனங்களில் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எரியோடு போலீஸ் நிலையத்திற்கு புறப்பட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையி லான போலீசார் ஒத்தக்கடை பகுதியிலேயே பொது மக்களை தடுத்துநிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்ததால் கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×