search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Member"

    • கோவில் திருவிழா தொடர்பாக தி.மு.க. பிரமுகர் மீது புகார் கொடுக்க பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    எரியோடு:

    எரியோடு அருகே கோவிலூர் தங்கச்சியம்மா பட்டியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல கிராமங்களுக்கு பாத்திய ப்பட்டதாகும்.

    கோவில் நாட்டாண்மை ஜெயக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரது மகன் பாலுமகேந்திரா பொறுப்பேற்று இந்த ஆண்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தொடங்கினார். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் வீரக்குமார் மற்றும் சிலர் கோவில் நிர்வாக பொறுப்பு அதே குடும்பத்திடம் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் பாலுமகேந்திரா குறித்து வீரக்குமார் அவதூறாக பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தனர். அதன்படி ஏராளமான வாகனங்களில் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எரியோடு போலீஸ் நிலையத்திற்கு புறப்பட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையி லான போலீசார் ஒத்தக்கடை பகுதியிலேயே பொது மக்களை தடுத்துநிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்ததால் கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • போக்சோ வழக்கில் தொடர்புள்ள 16 வயது குற்றவாளியிடம், இன்ஸ்பெக்டர் விசாரணை செய்து கொண்டிருந்தார்.
    • ஒருமையில் தாறுமாறாக பேசியதாக கூறப்படுகிறது.

    தாராபுரம் :

    தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கடந்த மே 6 ந்தேதி போக்சோ வழக்கில் தொடர்புள்ள 16 வயது குற்றவாளியிடம், இன்ஸ்பெக்டர் செல்லம் விசாரணை செய்து கொண்டிருந்தார். அப்போது, தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்த கொளத்துப்பாளையம் பேரூர் தி.மு.க. செயலாளர் மீசை துரை, குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என இன்ஸ்பெக்டர் செல்லத்திடம் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்த போது, ஒருமையில் தாறுமாறாக பேசியதாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் செல்லத்துக்கும், துரைக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், துரை மட்டுமின்றி, அவரது ஆதரவாளர்களும், இன்ஸ்பெக்டர் செல்லத்தை தரக்குறைவாக திட்டியதாக தெரிகிறது.

    இந்த சம்பவங்கள் அடங்கிய வீடியோ வாட்ஸ் ஆப், உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் ஆயாள்பட்டி கிராமத்தை சேர்ந்த தி.மு.க. தொண்டர் ராமர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
    • உயிருக்கு போராடி, வறுமை நிலையில் உள்ள அவரது தொண்டரின் குடும்ப சூழ்நிலை கருதி அவரின் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை கோரிக்கையை ஏற்று மருத்துவ செலவுக்காக ரூ.50,000 நிதியை ராமரின் உறவினர்களிடம் வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் ஆயாள்பட்டி கிராமத்தை சேர்ந்த தி.மு.க. தொண்டர் ராமர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். உயிருக்கு போராடி, வறுமை நிலையில் உள்ள அவரது தொண்டரின் குடும்ப சூழ்நிலை கருதி அவரின் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை கோரிக்கையை ஏற்று மருத்துவ செலவுக்காக ரூ.50,000 நிதியை ராமரின் உறவினர்களிடம் வழங்கினார்.

    அப்போது வக்கீல் தனசேகரன், மாவட்ட பிரதிநிதி சண்முகப்பாண்டியன் கிளைக் கழகப் பிரதிநிதி சவுந்தர் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர். தங்களின் தேவை அறிந்து சிகிச்சை செலவிற்காக நிதி வழங்கிய ராஜா எம்.எல்.ஏ.வுக்கு ராமரின் உறவினர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    • நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). தி.மு.க. பிரமுகரான இவரது அண்ணன் அப்பகுதியில் ஒரு ஓட்டல் நடத்தி வருகிறார்.
    • பா.ஜ.க. பிரமுகரான ராஜேஷ் (40) என்பவர் நேற்று இரவு கண்ணன் ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). தி.மு.க. பிரமுகரான இவரது அண்ணன் அப்பகுதியில் ஒரு ஓட்டல் நடத்தி வருகிறார்.

    அரிவாள் வெட்டு

    அதே பகுதியை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகரான ராஜேஷ் (40) என்பவர் நேற்று இரவு கண்ணன் ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது கண்ணன், ராஜேஷ் இடையே தகராறு ஏற்பட்டது.

    பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். நள்ளிரவில் கண்ணன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டினர். இதில் காயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    4 பேர் மீது வழக்கு

    இதுதொடர்பாக கண்ணன் சந்திப்பு போலீசில் புகார் செய்தார். அதில் தன்னை ராஜேஷ், ராஜேஷின் மனைவியான முன்னாள் மேயர் புவனேஸ்வரி, புவனேஸ் வரியின் அண்ணன் நாகஜோதி, உறவினர் கிருஷ்ணகுமார் ஆகிய 4 பேர் தாக்கி அரிவாளால் வெட்டியதாக கூறி இருந்தார்.

    அதன்பேரில் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே நாகஜோதியும், தன்னை கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அண்ணாநகரில் உள்ள தி.மு.க. பிரமுகர் பரமசிவம் வீட்டில் இன்று காலை மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்தது. #PetrolBomb
    சென்னை:

    அண்ணாநகர் தி.மு.க. பகுதி செயலாளராக இருப்பவர் பரமசிவம். டி.பி.சத்திரம் தர்மராஜா கோவில் தெருவில் இவரது வீடு உள்ளது.

    இன்று காலை 6 மணியளவில் பரமசிவத்தின் வீட்டுக்கு வந்த மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியது. வீட்டின் முன்பகுதியில் பெட்ரோல் நிரப்பிய பாக்கெட்டுகளையும், பாட்டில்களையும் வீசியதில் அது வெடித்து சிதறியது.

    இதில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த பரமசிவத்தின் கார் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் டி.பி.சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பரமசிவத்தின் வீட்டு முன்பு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெட்ரோல் குண்டுகளை வீசியது யார்? என்பது தெரியவில்லை. அவர்களை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர். பரமசிவம் வீட்டை சுற்றியுள்ள சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.



    பெட்ரோல் குண்டுகளை வீசியவர்களை பிடிக்க கீழ்ப்பாக்கம் உதவி கமி‌ஷனர் ஜெகதீஸ்வரன் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகிறார்கள்.

    அமைந்தகரை மஞ்சாங் கொள்ளை தெரு பகுதியில் நேற்று தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் தெகலான்பாகவிக்கு ஆதரவு திரட்டினர். இந்திய தவ்கீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த பெண்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் வாக்காளர் பட்டியலை வீடு வீடாக சரிபார்த்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்ட தி.மு.க.வினர், தவ்கீத் ஜமாத் பெண்களை தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக அமைந்தகரை போலீசில் பரமசிவம் உள்பட 10-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

    அதில் எஸ்.டி.பி.ஐ. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பெண்களை தி.மு.க.வினர் தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் நடந்தது. இதன் பின்னர் அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் தி.மு.க.வினரும், தினகரன் கட்சியினரும், எஸ்.டி.பி.ஐ. கட்சியினரும் நூற்றுக்கணக்கில் திரண்டிருந்தனர். இதனால் நள்ளிரவு வரையில் பரபரப்பு நிலவியது.

    இந்த நிலையில்தான் தி.மு.க. பிரமுகர் பரமசிவம் வீட்டில் இன்று காலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதனால் மோதல் சம்பவத்துக்கும், பெட்ரோல்  குண்டு வீச்சு சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #PetrolBomb
    தஞ்சையில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூ.7 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழஅலங்கம் சாமந்தான்குளம் பகுதியை சேர்ந்த பத்மநாபன் மகன் விஜய் (வயது34). இவர் தி.மு.க. நகர இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார்.

    சம்பவத்தன்று விஜய் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.10 லட்சத்தில் 7 லட்சத்தை கொள்ளையடித்தனர். மீதி 3 லட்சத்தை பீரோவில் வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த நிலையில் காலையில் விஜய் எழுந்தபோது பீரோ திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்தார். பீரோவை பார்த்தபோது அதில் வைத்திருந்த பணத்தை காணாதது கண்டு திடுக்கிட்டார்.

    இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் பூபதியின் தம்பி மகன் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே தி.மு.க. பிரமுகரின் மனைவி மற்றும் மாமியார் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.
    ராதாபுரம்:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சியை சேர்ந்தவர் மாயராமன். தி.மு.க. ஊராட்சி கழக செயலாளராக உள்ளார். இவரது மனைவி வைரமுத்து (வயது32). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை.

    வைரமுத்து அவரது பெற்றோருக்கு ஒரே மகள் ஆவார். இதனால் தங்களுக்கு குழந்தை இல்லாததை காரணம் காட்டி மாயராமன் வைரமுத்துவின் பெற்றோர் பெயரில் உள்ள பல லட்சம் மதிப்பிலான சொத்துக்களை எழுதி வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு மாயராமன் தனது மனைவியிடம் உனக்கு குழந்தை இல்லாததால் வேறு திருமணம் செய்யப்போகிறேன் என கூறி மிரட்டினாராம்.

    சொத்துக்களையும் எழுதிவாங்கிவிட்டு வேறு திருமணம் செய்யப்போவதாக மிரட்டியதால் வைரமுத்து மனவேதனை அடைந்தார். இதுபற்றி அவர் தனது தாய் பொன்னம்மாளிடம் கூறினார். இந்த நிலையில் கடந்தவாரம் மாயராமன் வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்ததாக தெரிகிறது.

    மேலும் இந்த விவரத்தை மாமியார் பொன்னம்மாள் மற்றும் மனைவி வைரமுத்துவுக்கு வக்கீல்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது வைரமுத்து மற்றும் பொன்னம்மாளுக்கு மேலும் மன வேதனையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மாயராமன் 2-வது திருமணம் செய்தது குறித்து ராதாபுரம் போலீசில் புகார் செய்தனர்.

    ஆனால் புகாரை போலீசார் வாங்க மறுத்ததோடு, குழந்தை இல்லை என்றால் அவர் வேறு திருமணம் செய்வதில் தவறு இல்லை எனக்கூறி உதாசீனமாக பேசியதாக தெரிகிறது. இதையடுத்து வைரமுத்துவும், அவரது தாய் பொன்னம்மாளும் நெல்லையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அதன்பேரிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இது அவர்களுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளனர். அதன்படி வைரமுத்துவும், பொன்னம்மாளும் நேற்று இரவு தங்களது வீட்டில் வைத்து வி‌ஷத்தை தின்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள அறையில் படுத்துக்கொண்டனர்.

    இதனிடையே இன்று காலை அவர்களது வீடு வெகுநேரம் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்தனர். அப்போது அங்கு தாய்-மகள் இருவரும் இறந்து கிடந்தனர். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், ராதாபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர்களது வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது அங்கிருந்து ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் தங்கள் சாவுக்கு மாயராமன் உள்ளிட்ட சிலர் காரணம் என சிலரது பெயரை குறிப்பிட்டு எழுதியிருந்தனர். அதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வைரமுத்து மற்றும் அவரது தாய் ஆகிய இருவரின் தற்கொலைக்கு காரணமானவர்களை போலீசார் கைது செய்யவேண்டும் என்று அவர்களது உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் நடவடிக்கை எடுக்கும் வரை இருவரது உடல்களையும் வாங்கமாட்டோம் என்று கூறியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    மேலும் இந்த விவகாரத்தில் காவல்துறை மாயராமனுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளதாகவும், போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்காது என்று உறவினர்கள் சோகத்துடன் தெரிவித்தனர். தாய்-மகள் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருவண்ணாமலை அருகே செல்போன் கடையில் புகுந்து ஊழியர்களை தி.மு.க. பிரமுகர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    தண்டராம்பட்டு:

    சென்னை விருகம்பாக்கம் பிரியாணி கடையில் கடந்த ஜூலை 28-ந் தேதி இரவு தி.மு.க. பிரமுகர் யுவராஜ் தனது ஆதரவாளர்களுடன் பிரியாணி வாங்க சென்றார். பிரியாணி தீர்ந்துவிட்டதாக கடை ஊழியர்கள் தெரிவித்தனர். அப்போது, தி.மு.க. பிரமுகர் யுவராஜ் ஆத்திரம் அடைந்து குத்துச்சண்டை வீரர் போல் ஊழியர்களின் முகத்தில் குத்திய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

    கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக யுவராஜ் உள்ளிட்டோர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர். இதன் பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு கடைக்குள் தி.மு.க. பிரமுகர்கள் புகுந்து ஊழியர்களை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடி குயிலம் பகுதியை சேர்ந்தவர் ரகுபதி (வயது 29). தண்டராம்பட்டு தி.மு.க. மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இவர், தனது செல்போனை பழுதுபார்க்க கோவிந்தராஜபுரத்தை சேர்ந்த கணேஷ் (26) என்பவருடன் தானிப்பாடி பஸ் நிலையத்தில் இருக்கும் மணிவண்ணன் என்பவரின் செல்போன் கடைக்கு வந்தார்.

    செல்போனை உடனடியாக சரி செய்யும்படி தி.மு.க. பிரமுகர் மிரட்டினார். கடை உரிமையாளர் மறுநாள் வந்து வாங்கிகொள்ளுமாறு கூறினார். இதனால், ஆத்திரமடைந்த தி.மு.க. பிரமுகரும், அவரது நண்பரும் சேர்ந்து நாற்காலிகளை எடுத்து கடை உரிமையாளரையும், ஊழியர் ஒருவரையும் தாக்கினர். கடை உரிமையாளர் மணிவண்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தலையில் ரத்தம் கொட்டியது. அவர் வலியால் துடித்தார். பின்னர் ரகுபதியும், அவரது நண்பரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    திமுக பிரமுகர் தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்ட செல்போன் கடை உரிமையாளர்.

    படுகாயமடைந்த கடை உரிமையாளர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தி.மு.க. பிரமுகர் கடைக்குள் புகுந்து தாக்கிய சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகளை கொடுத்து தி.மு.க. பிரமுகர் மீது தானிப்பாடி போலீசில் செல்போன் கடை உரிமையாளர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து, தி.மு.க. பிரமுகர் ரகுபதி மற்றும் அவருடைய நண்பர் கணேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த தாக்குதல் வீடியோ காட்சிகள், பிரியாணி கடை தகராறை போல் பூதாகரமாகி வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    கருணாநிதி மறைவையொட்டி, அவரது உருவப்படத்திற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர், பொதுமக்கள் மாலை அணிவித்தும், மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.
    பெரம்பலூர்:

    தி.மு.க.வின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். கருணாநிதி மறைவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கின. மேலும் அவர்கள் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.



    மேலும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். கருணாநிதி மறைவையொட்டி நேற்று அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதோடு மட்டுமின்றி தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதனால் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்க விடப்பட்டன. தி.மு.க. கட்சி கொடிகளும் கருணாநிதி மறைவையொட்டி அரை கம்பத்தில் பறந்தன. கருணாநிதி உயிரிழந்ததை தொடர்ந்து பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே உள்ள மாவட்ட தி.மு.க. கட்சி அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மாலை முதலே தொண்டர்கள் குவிந்தனர். அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி உயிரிழந்ததை தாங்கி கொள்ள முடியாமல் அங்கிருந்த தொண்டர்கள், மகளிரணியை சேர்ந்த தொண்டர்கள் கதறி அழுதது காண்போரையும் கண்கலங்க செய்தது. தி.மு.க.வின் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பிலும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டன.

    பெரம்பலூர் போஸ்ட் ஆபீஸ் தெருவில் ஒரு சிறுமி கருணாநிதியின் உருவப்படத்திற்கு பாசத்துடன் முத்தம் கொடுத்து மரியாதை செலுத்தியதை காண முடிந்தது. பெரம்பலூர் நகரில் பல்வேறு பகுதிகளில் கருணாநிதி உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அதற்கு கட்சி பாகுபாடின்றி பொதுமக்களும் தங்களது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினர்.

    கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பெரம்பலூர் மாவட்ட தலைமை அனைத்து நடிகர் ரசிகர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ரசிகர்கள் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம், பாலக்கரை, புதிய பஸ் நிலையம் வழியாக மாவட்ட தி.மு.க. கட்சி அலுவலகத்துக்கு வந்தன. அங்கு நகர தி.மு.க. சார்பில் அலங்கரிக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு ரசிகர்கள், தி.மு.க. தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஆசிரியர்கள் சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது.

    இதேபோல் தி.மு.க.வின் தோழமை கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில், அக்கட்சியினர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர். இதில் கட்சியின் மாநில செயலாளர் செங்கோலன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும் பெரம்பலூர் நகரில் பல்வேறு பகுதிகளில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக விளம்பர பதாகைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. பெரம்பலூர், ஆலத்தூர், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய தாலுகாவில் உள்ள கிராமங்களிலும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு கட்சியினர், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
    ராமேசுவரத்தில் மனநல காப்பகத்துக்கு இலவசமாக நிலம் வழங்கிய திமுக பிரமுகரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் பகுதிக்கு நாளுக்கு நாள் மன நோயாளிகள் வருகை அதிகரித்து வருகிறது.

    இவர்களை பாதுகாக்க போதுமான இட வசதிகள் இல்லாததால் ராமேசுவரம் நகர் முன்னாள் தி.மு.க. செயலாளர் ஜான்பாய் குடும்பத்தினரிடம் ராமேசுவரம் சுவாமி விவேகானந்தர் குடில் சுவாமி பிரணவானந்தர் நிலம் கேட்டு கோரிக்கை வைத்தார்.

    அதன் பேரில் ஜான்பாய் தனது குடும்பத்திற்கு சொந்தமான ராமேசுவரம் நகராட்சிக்கு உள்பட்ட செம்மடம் பகுதியில் 18 செண்ட் நிலப்பரப்பை இலவசமாக வழங்க முடிவு செய்தார்.

    மனநல காப்பத்திற்கு நிலத்தை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி ராமேசுவரம் ராமகிருஷ்ணபுரம் பகுதியிலுள்ள சுவாமி விவேகானந்தர் குடில் வளாகத்தில் நடைபெற்றது.

    ராமேசுவரம் ராம்கோ பொறுப்பாளார் வேடராஜன் தலைமை தாங்கினார். சுவாமி விவேகானந்தர் குடில் பிரணவானந்தர் வரவேற்றார். காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் ராஜா மணி முன்னிலை வகித்தார்.

    ஜான்பாய், அவரது மனைவி மும்தாஜ் ஆகியோர் மனோலயா நிர்வாக இயக்குனர் மணி கண்டனிடம் நிலம் வழங்குவதற்கான உறுதி தபாலை வழங்கினர்.

    பின்னர் நிகழ்ச்சியில் தொடர்ந்து மனநல காப்பகத்தில் தங்கியுள்ள 40-க்கும் மேற்பட்ட மன நோயாளிகளுக்கு புத்தாடை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் குமரேசன், மனோலயா முத்துராமன், முருகபூபதி, சமூக ஆர்வலர் தில்லை பாக்கியம், வழக்கறிஞர் ராஜசேகர், ராமகிருஷ்ணபுரம் கிராம தலைவர் நம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    ×