நெல்லையில் ஓட்டல் தகராறில் விரோதம்: தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - பா.ஜனதா பிரமுகர் உள்பட 4 பேர் மீது வழக்கு

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). தி.மு.க. பிரமுகரான இவரது அண்ணன் அப்பகுதியில் ஒரு ஓட்டல் நடத்தி வருகிறார்.பா.ஜ.க. பிரமுகரான ராஜேஷ் (40) என்பவர் நேற்று இரவு கண்ணன் ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.
நெல்லையில் ஓட்டல் தகராறில் விரோதம்: தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - பா.ஜனதா பிரமுகர்  உள்பட 4 பேர் மீது வழக்கு
Published on

நெல்லை:

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). தி.மு.க. பிரமுகரான இவரது அண்ணன் அப்பகுதியில் ஒரு ஓட்டல் நடத்தி வருகிறார்.

அரிவாள் வெட்டு

அதே பகுதியை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகரான ராஜேஷ் (40) என்பவர் நேற்று இரவு கண்ணன் ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது கண்ணன், ராஜேஷ் இடையே தகராறு ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். நள்ளிரவில் கண்ணன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டினர். இதில் காயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

4 பேர் மீது வழக்கு

இதுதொடர்பாக கண்ணன் சந்திப்பு போலீசில் புகார் செய்தார். அதில் தன்னை ராஜேஷ், ராஜேஷின் மனைவியான முன்னாள் மேயர் புவனேஸ்வரி, புவனேஸ் வரியின் அண்ணன் நாகஜோதி, உறவினர் கிருஷ்ணகுமார் ஆகிய 4 பேர் தாக்கி அரிவாளால் வெட்டியதாக கூறி இருந்தார்.

அதன்பேரில் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே நாகஜோதியும், தன்னை கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com