search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தாராபுரத்தில் பெண் இன்ஸ்பெக்டருக்கு தி.மு.க. பிரமுகர் மிரட்டல் - சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ
    X

    கொளத்துப்பாளையம் பேரூர் தி.மு.க. செயலாளர் மீசை துரை. இன்ஸ்பெக்டர் செல்லம்.

    தாராபுரத்தில் பெண் இன்ஸ்பெக்டருக்கு தி.மு.க. பிரமுகர் மிரட்டல் - சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ

    • போக்சோ வழக்கில் தொடர்புள்ள 16 வயது குற்றவாளியிடம், இன்ஸ்பெக்டர் விசாரணை செய்து கொண்டிருந்தார்.
    • ஒருமையில் தாறுமாறாக பேசியதாக கூறப்படுகிறது.

    தாராபுரம் :

    தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கடந்த மே 6 ந்தேதி போக்சோ வழக்கில் தொடர்புள்ள 16 வயது குற்றவாளியிடம், இன்ஸ்பெக்டர் செல்லம் விசாரணை செய்து கொண்டிருந்தார். அப்போது, தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்த கொளத்துப்பாளையம் பேரூர் தி.மு.க. செயலாளர் மீசை துரை, குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என இன்ஸ்பெக்டர் செல்லத்திடம் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்த போது, ஒருமையில் தாறுமாறாக பேசியதாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் செல்லத்துக்கும், துரைக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், துரை மட்டுமின்றி, அவரது ஆதரவாளர்களும், இன்ஸ்பெக்டர் செல்லத்தை தரக்குறைவாக திட்டியதாக தெரிகிறது.

    இந்த சம்பவங்கள் அடங்கிய வீடியோ வாட்ஸ் ஆப், உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×