search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 people missing"

    • மகள், மகன் மற்றும் மற்றொருவரது மகள் உள்பட 3 பேர் மாயமாகினர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி பாரஸ்ட் ரோடு 9-வது தெருவை சேர்ந்தவர் தவமணி மகள் யுவஸ்ரீ(17). இவர் பிளஸ்-2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவ த்தன்று யுவஸ்ரீ திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் அக்கம்பக்கத்தில் விசாரித்தும் கிடைக்காததால் தேனி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    ஜெயமங்கலம் அருகே மேல்மங்கலத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(30). இவரது மனைவி ஜெயபாரதி(22). மகன் திவாசன்(2), சிவக்குமார் கிரசர் நிறுவன த்தில் சூப்பர்வைசராக வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார்.

    மீண்டும் வீடு திரும்பிய போது தனது மனைவி மற்றும் மகன் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் விசாரித்தும் கிடைக்காததால் ஜெயமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    • தேனி அருகே பள்ளி மாணவி உள்பட 3 பேர் மாயமானதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம் :

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பொட்டிபுரம் திம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் மகள் பிரியதர்ஷிணி (வயது 16). இவர் போடியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நாளை தேர்வு முடிவுகள் வெளி வர உள்ள நிலையில் தனது தோழியை பார்த்து வருவதாக கூறிச் சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனியைச் சேர்ந்த செல்வம் மகள் எமிமாள் (24). இவர் உத்தம பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமனார். அவரது சகோதரி அன்னை தெரசா கொடுத்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம் கோவிந்தன்பட்டி பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பன்னீர் மகன் அந்தோணி சலேத் (33). டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை. இது குறித்து அவரது மனைவி ரூபினி கொடுத்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தேனி மாவட்டத்தில் வெவ்வேறு பிரச்சினைகளில் இளம்பெண் உள்பட 3 பேர் மாயமாகினர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் மகன் ஹரிநாத்கோகுல் (வயது24). இவர் அப்பகுதி யில் உள்ள தனியார் நிறுவன த்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று தனது தாயுடன் உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சென்ற போது இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    இதனால் ஹரிநா த்கோகுல் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து அல்லிநகரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேவனதாப்பட்டி அருகே ஜி.அம்சாபுரத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன் (39). இவரது மனைவி பிரியங்கா (27). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பாண்டியராஜன் லாரி டிரைவராக உள்ளதால் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வீடு திரும்பியபோது பிரியங்கா வீட்டில் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கும் கிடை க்காததால் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    கூடலூரை சேர்ந்த பிரபு (39). சலூன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தனது மகனுக்கு உணவு வாங்கி கொடுத்து விட்டு மாத்திரை வாங்குவதற்காக சென்றார். அதன்பின்ன ர்வீடு திரும்பவில்லை. இது குறித்து கூடலூர் வடக்கு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து மாயமான பிரபுவை தேடி வரு கின்றனர்.

    • தேனி அருகே வெவ்வேறு பிரச்சினைகளில் பள்ளி மாணவன் உள்பட 3 பேர் மாயமாகினர்.
    • புகாரின் பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே சமதர்மபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் சிவனேஷ்(30). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இறைச்சி கடை வைத்து நடத்தி வந்தார். குடிப்பழக்கத்தால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்று வெளியே சென்ற சிவனேஷ் மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் தேனி போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் கணேசன்(33). இவர் கேரளாவுக்கு கூலி வேலைக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கணேசனை தேடி வருகின்றனர்.

    சின்னமனூரை சேர்ந்தவர் கண்ணன் மகன் மோகன்குமார்(16). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். சரிவர படிக்காமல் செல்போன் அதிகளவில் பயன்படுத்தியதால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் கோவித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார். நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் சின்னமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.

    • தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில பள்ளி மாணவி உள்பட 3 இளம்பெண்கள் மாயமாகினர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    பெரியகுளம் தென்கரை சென்சேவியர் தெருவை சேர்ந்த ரவிக்குமார் மகள் மாலதி (வயது15). 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார். தென்கரை போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    தேனி அல்லிநகரம் மச்சாள் தெருவை சேர்ந்த குப்புசாமி மகள் சத்யா( 20). இவர் கோவையில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து முடித்து விட்டு தற்போது தேனியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறி சென்ற சத்யா மாயமானார். தேனி ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சின்னமனூர் காந்திநகர காலனியை சேர்ந்த குமார் மகள் சோபனா (20). இவர் தட்டச்சு பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறார். சம்பவத்தன்று தட்டச்சு பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் மாயமானார். சின்னமனூர் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    • தேனி அருகே பள்ளி மாணவிகள் உள்பட 3 பேர் மாயமாகினர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள கோபாலபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகள் சாந்தி (வயது14). 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவ த்தன்று வீட்டை விட்டு அருகில் இருந்த கடைக்கு சென்றவர் மாயமானார்.

    இது குறித்து அவரது தாய் சொர்ணம்மாள் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீ சார்அவரை தேடி வரு கின்றனர்.

    லோயர்கேம்ப் கடை வீதி ெதருவை சேர்ந்த பகவதிராஜ் மகள் பூஜா (17). 10-ம் வகுப்பு படித்து விட்டு படிப்பை பாதியில் நிறுத்தி வீட்டில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக அவரது பாட்டி மாரியம்மாள் வீட்டில் தங்கி இருந்தார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார். இது குறித்து அவரது தாய் பவானி கொடுத்த புகாரின் பேரில் குமுளி போலீசார் விசா ரித்து வருகின்றனர்.

    கூடலூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் பாஸ்க ரன். கூலி வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது மனைவி அம்சமணி கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    • தேனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மாயமாகினர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்

    தேனி:

    தேனி ஜீவானந்தம் நகர், எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் அழகர்(52). அவரது மனைவி பரமேஸ்வரி(42), மகன் அழகுராஜா(26). இவர்கள் 3 பேரும் பரமேஸ்வரியின் சகோதரி தனலட்சுமி என்பவருடன் ஆண்டிபட்டியிலிருந்து தேனி புதிய பஸ்நிலையத்திற்கு பஸ்சில் வந்தனர்.

    அங்கு தனலட்சுமி அவர்களை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது தனலட்சுமிைய செல்லுமாறும், பின்னால் வருவதாகவும் கூறியுள்ளனர். ஆனால் வெகுநேரமாகியும் 3 பேரும் வரவில்லை.

    அவர்கள் செல்போனுக்கு அழைப்பு விடுத்தபோது அது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    ×