என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தேனி அருகே பள்ளி மாணவி உள்பட 3 இளம்பெண்கள் மாயம்
  X

  கோப்பு படம்

  தேனி அருகே பள்ளி மாணவி உள்பட 3 இளம்பெண்கள் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில பள்ளி மாணவி உள்பட 3 இளம்பெண்கள் மாயமாகினர்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

  தேனி:

  பெரியகுளம் தென்கரை சென்சேவியர் தெருவை சேர்ந்த ரவிக்குமார் மகள் மாலதி (வயது15). 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார். தென்கரை போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

  தேனி அல்லிநகரம் மச்சாள் தெருவை சேர்ந்த குப்புசாமி மகள் சத்யா( 20). இவர் கோவையில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து முடித்து விட்டு தற்போது தேனியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறி சென்ற சத்யா மாயமானார். தேனி ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சின்னமனூர் காந்திநகர காலனியை சேர்ந்த குமார் மகள் சோபனா (20). இவர் தட்டச்சு பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறார். சம்பவத்தன்று தட்டச்சு பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் மாயமானார். சின்னமனூர் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×