தேனி அருகே பள்ளி மாணவன் உள்பட 3 பேர் மாயம்

தேனி அருகே வெவ்வேறு பிரச்சினைகளில் பள்ளி மாணவன் உள்பட 3 பேர் மாயமாகினர்.புகாரின் பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி அருகே சமதர்மபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் சிவனேஷ்(30). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இறைச்சி கடை வைத்து நடத்தி வந்தார். குடிப்பழக்கத்தால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்று வெளியே சென்ற சிவனேஷ் மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் தேனி போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் கணேசன்(33). இவர் கேரளாவுக்கு கூலி வேலைக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கணேசனை தேடி வருகின்றனர்.

சின்னமனூரை சேர்ந்தவர் கண்ணன் மகன் மோகன்குமார்(16). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். சரிவர படிக்காமல் செல்போன் அதிகளவில் பயன்படுத்தியதால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் கோவித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார். நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் சின்னமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com