தேனி அருகே பள்ளி மாணவிகள் உள்பட 3 பேர் மாயம்

தேனி அருகே பள்ளி மாணவிகள் உள்பட 3 பேர் மாயமாகினர்.போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி அருகில் உள்ள கோபாலபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகள் சாந்தி (வயது14). 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவ த்தன்று வீட்டை விட்டு அருகில் இருந்த கடைக்கு சென்றவர் மாயமானார்.

இது குறித்து அவரது தாய் சொர்ணம்மாள் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீ சார்அவரை தேடி வரு கின்றனர்.

லோயர்கேம்ப் கடை வீதி ெதருவை சேர்ந்த பகவதிராஜ் மகள் பூஜா (17). 10-ம் வகுப்பு படித்து விட்டு படிப்பை பாதியில் நிறுத்தி வீட்டில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக அவரது பாட்டி மாரியம்மாள் வீட்டில் தங்கி இருந்தார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார். இது குறித்து அவரது தாய் பவானி கொடுத்த புகாரின் பேரில் குமுளி போலீசார் விசா ரித்து வருகின்றனர்.

கூடலூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் பாஸ்க ரன். கூலி வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது மனைவி அம்சமணி கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com