தேனி அருகே பள்ளி மாணவி உள்பட 3 பேர் மாயம்

தேனி அருகே பள்ளி மாணவி உள்பட 3 பேர் மாயமானதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

உத்தமபாளையம் :

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பொட்டிபுரம் திம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் மகள் பிரியதர்ஷிணி (வயது 16). இவர் போடியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நாளை தேர்வு முடிவுகள் வெளி வர உள்ள நிலையில் தனது தோழியை பார்த்து வருவதாக கூறிச் சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனியைச் சேர்ந்த செல்வம் மகள் எமிமாள் (24). இவர் உத்தம பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமனார். அவரது சகோதரி அன்னை தெரசா கொடுத்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

உத்தமபாளையம் கோவிந்தன்பட்டி பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பன்னீர் மகன் அந்தோணி சலேத் (33). டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை. இது குறித்து அவரது மனைவி ரூபினி கொடுத்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com