தேனியில் இளம்பெண்கள் உள்பட 3 பேர் மாயம்

மகள், மகன் மற்றும் மற்றொருவரது மகள் உள்பட 3 பேர் மாயமாகினர்.போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.
தேனியில் இளம்பெண்கள் உள்பட 3 பேர் மாயம்
Published on

தேனி:

தேனி பாரஸ்ட் ரோடு 9-வது தெருவை சேர்ந்தவர் தவமணி மகள் யுவஸ்ரீ(17). இவர் பிளஸ்-2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவ த்தன்று யுவஸ்ரீ திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் அக்கம்பக்கத்தில் விசாரித்தும் கிடைக்காததால் தேனி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

ஜெயமங்கலம் அருகே மேல்மங்கலத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(30). இவரது மனைவி ஜெயபாரதி(22). மகன் திவாசன்(2), சிவக்குமார் கிரசர் நிறுவன த்தில் சூப்பர்வைசராக வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார்.

மீண்டும் வீடு திரும்பிய போது தனது மனைவி மற்றும் மகன் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் விசாரித்தும் கிடைக்காததால் ஜெயமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com