போடி அருகே ஊனத்தை கேலி செய்ததால் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

ஊனத்தை கேலி செய்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளி வாலிபரை சரமாரியாக வெட்டியதால் கைது செய்யப்பட்டார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

மேலசொக்கநாதபுரம்:

போடி அருகே சில்ல மரத்துப்பட்டியை சேர்ந்தவர் மோகன்(56). இவர் மாற்றுத்திறனாளி யாவார். அதேபகுதியை சேர்ந்த ரமேஷ்(39) என்ற வாலிபர் மோகனின் உடல் ஊனத்தை கேலி, கிண்டல் செய்து வந்தார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் மோகன் அவரது உறவினரை தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டிருந்தார். மோகன் தன்னைத்தான் திட்டுவதாக நினைத்து அருகில் இருந்த அரிவாளை எடுத்து ரமேசை சரமாரியாக வெட்டி ச்சாய்த்தார்.

இதில் படு காயமடைந்த ரமேஷ் போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com