செய்திகள்

புனே நகரில் நடந்த ராகுல் பங்கேற்ற கூட்டத்தில் மோடியை புகழ்ந்த மாணவர்கள்

Published On 2019-04-06 11:25 GMT   |   Update On 2019-04-06 11:25 GMT
மராட்டிய மாநிலம் புனே நகரில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி முன்னிலையில் மோடியை புகழ்ந்து மாணவர்கள் கோ‌ஷம் எழுப்பினார்கள். #Congress #RahulGandhi #PMModi
புனே:

காங்கிரஸ் தலைவர் ராகுல் மாநிலம் வாரியாக சென்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

பிரசாரத்துக்கு இடையே கல்லூரிகளில் ஏற்பாடு செய்து நடத்தப்படும் மாணவர்களுடனான கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்கிறார்.

அந்த வகையில் நேற்று மராட்டிய மாநிலம் புனே நகரில் உள்ள கல்லூரியில் மாணவ-மாணவிகளுடன் ராகுல் கலந்துரையாடினார். நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, பண மதிப்பு இழப்பு உள்பட பல்வேறு பிரச்சனைகள் பற்றி ராகுலிடம் மாணவர்கள் கேள்விகளை எழுப்பினார்கள்.

அப்போது மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த ராகுல், பிரதமர் மோடியை விமர்சித்து பேசினார். அவர் கூறுகையில், “பிரதமர் மோடி எங்கள் மீது கோபத்தையும் வெறுப்புணர்வையும் வெளிப்படுத்துகிறார். ஆனால் நாங்கள் மோடி மீது வெறுப்பை காட்டுவதில்லை” என்றார்.

ராகுல் இவ்வாறு பேசியதும் மாணவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. மோடியை ஆதரித்தும், புகழ்ந்தும் மாணவர்களில் சிலர் கோ‌ஷமிட்டனர். மோடி, மோடி என்று அவர்கள் தொடர்ந்து கோ‌ஷம் எழுப்பினார்கள்.



இதை பார்த்த ராகுல் “நோ ப்ராப்ளம்” என்றார். பிறகு மாணவர்களை அமைதிப்படுத்தும் வகையில் ராகுல் பேசினார். அவர் கூறியதாவது:-

வெறுப்புணர்வை வெளிப்படுத்துவது என்பது கோழைத்தனம். நான் கோழை அல்ல. இந்த உலகமே வெறுப்புணர்வாக மாறினாலும் நான் கவலைப்பட போவதில்லை.

ஒரு போதும் நான் கோபத்துக்கும், வெறுப்புணர்வுக்கும் பின்னால் ஒளிந்து கொள்ள மாட்டேன். இந்த உலகில் அனைவரையும் நான் நேசிக்கிறேன். வெறுப்புணர்வால் தற்காலிகமாக கண்களை மூடிக்கொண்டு இருப்பவர்களையும் நான் நேசிக்கிறேன்.

இவ்வாறு ராகுல் பேசினார். #Congress #RahulGandhi #PMModi
Tags:    

Similar News