இந்தியா

சாலையோர உணவகத்தின் தூய்மையை பாராட்டிய அமெரிக்க பயணி

Published On 2024-05-23 08:34 GMT   |   Update On 2024-05-23 08:34 GMT
  • உணவகத்தில் குப்பைகளை தனித்தனியாக போடுவதற்காகவே தனித்தனி தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
  • வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரம் தூய்மைக்கு பெயர் பெற்றது. நாட்டின் சிறந்த தூய்மை நகரம் என்ற பெருமையை தொடர்ந்து 8 ஆண்டுகளாக பெற்று வரும் இந்த நகரத்தின் பகுதிகளை தூய்மையாக பராமரிப்பதில் பொது மக்களின் பங்களிப்பும் முக்கியமானது.

இதுதொடர்பான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் அமெரிக்காவை சேர்ந்த மேக்ஸ் மெக்பார்லின் என்பவர் இந்தூர் நகரத்திற்கு வந்திருந்த போது அங்குள்ள ஒரு சாலையோர உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு சுகாதாரம் மற்றும் தூய்மையை பராமரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வீடியோவில் காட்சிப்படுத்தி தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

அந்த உணவகத்தில் குப்பைகளை தனித்தனியாக போடுவதற்காகவே தனித்தனி தொட்டிகள் வைக்கப்பட்டிருப்பதையும், மக்கள் கைகளை கழுவுவதற்காக சிறிய பேஷின் இருக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. ஒரு நபர் தவறாக தெருவில் உணவை கொட்டும் போதும் அங்கு சென்ற மற்றொரு நபர் அதை எடுத்து குப்பை தொட்டியில் போடும் காட்சிகளும் உள்ளது.

இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News