இந்தியா

NCP-யின் தேசிய தலைவராக அஜித் பவார் மனைவி நியமனம்: மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் மகன்

Published On 2026-02-26 20:05 IST   |   Update On 2026-02-26 20:05:00 IST
  • அஜித் பவார் மறைவால் சுனேத்ரா மராட்டிய துணை முதல்வராக பதவி ஏற்றார்.
  • ஏற்கனவே மாநிலங்களவை எம்.பி.யாக இருந்ததால், அப்பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த அஜித் பவார் ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார். அப்போது அவர் துணை முதல்வராக இருந்தார். இதனால் அவரது மனைவி சுனேத்ரா பவார் துணை முதல்வராக பதவி ஏற்றார்.

அவர் ஏற்கனவே மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார். துணை முதல்வராக பதவி ஏற்றதால், சுனேத்ரா பவார் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த இடம் காலியாக உள்ளது.

இந்த நிலையில் அஜித் பவார்- சுனேத்ரா பவாரின் மகனான பார்த் அஜித் பவார் மாநிலங்களவை எம்.பி.-க்கு பரிந்துரைக்கப்படுவார் என பிரபுல் படேல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மும்பையில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் சுனேத்ரா பவார் அக்கட்சியின் தேசிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News