இந்தியா
இந்தியாவில் Apple Pay செயலி விரைவில் அறிமுகம்
- ஜிபே, போன்பே ஆப்களை தான் பெரும்பாலான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர்.
- ICICI, HDFC, Axis வங்கிகளுடன் ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தை
இந்தியாவில் கோடிக்கணக்கானோர் UPI பணபரிவர்த்தனைகளை தினந்தோறும் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக ஜிபே, போன்பே ஆப்களை தான் பெரும்பாலான இந்தியர்கள் பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்கின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் Apple Pay செயலியை விரைவில் அறிமுகம் செய்வதற்கு ஏதுவாக, ICICI, HDFC, Axis வங்கிகளுடன் ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026ம் ஆண்டின் பிற்பகுதியில் ஆப்பிள் பயனர்களுக்கு இந்தச் செயலி பயன்பாட்டுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.