கேரளாவில் அரசுப் பள்ளி, கல்லூரிகளுக்கு மதம் சார்ந்த பெயர்கள் வைக்கப்படாது என முடிவு

அரசாங்கத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் மதச்சார்பற்றதாக இருக்கவேண்டும்இந்த முடிவு எதிர்காலத்தில் தொடங்கப்படும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்
கேரளாவில் அரசுப் பள்ளி, கல்லூரிகளுக்கு மதம் சார்ந்த பெயர்கள் வைக்கப்படாது என முடிவு
Published on

கேரளாவில் அரசு சார்பில் இனிமேல் தொடங்கப்படும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு

மதம் சார்ந்த பெயர்கள் வைக்கப்படாது என கேரள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் மதச்சார்பற்றதாக இருப்பதையும், சமத்துவம் மற்றும் அரசியலமைப்பு மதிப்புகளை பிரதிபலிப்பதையும் உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த முடிவு எதிர்காலத்தில் தொடங்கப்படும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், தற்போதுள்ள அரசு கல்வி நிறுவனங்களின் பெயர்களைப் பாதிக்காது என்றும் கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com