இந்தியா

ஆட்டோவில் ஏறிய வெளிநாட்டு பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர்

Published On 2026-02-27 13:47 IST   |   Update On 2026-02-27 13:47:00 IST
  • வீடு திரும்புவதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார்.
  • ஆட்டோவில் டிரைவருடன் ஏற்கனவே மேலும் இரண்டு நபர்கள் இருந்துள்ளனர்.

அரியானா மாநிலம் குருகிராமில் நேபாள நாட்டை சேர்ந்த 26 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறி உள்ளது.

அரியானாவின் குருக்ஷேத்திரா நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அப்பெண் பணியாற்றி வந்தார்.

தனது தோழியைச் சந்திப்பதற்காகச் கடந்த செவ்வாய்க்கிழமை குருகிராம் வந்துள்ளார். ஆனால் அங்கு தோழியை சந்திக்க முடியாத நிலையில் மது அருந்த சென்றுள்ளார்.

மது போதையில் இருந்த அந்தப் பெண், வீடு திரும்புவதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார். அந்த ஆட்டோவில் டிரைவருடன் அவனின் இரண்டு நண்பர்களும் இருந்துள்ளனர்.

பெண் போதையில் இருப்பதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மூவரும், அவரை நஹர்பூர் ரூபா பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு அறைக்குக் கடத்திச் சென்றனர்.

அங்கு மூன்று நபர்களும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

புதன்கிழமை காலை மயக்கம் தெளிந்து எழுந்தபோது, தான் ஒரு தெரியாத அறையில் இருப்பதையும் தனக்கு நேர்தத்தையும் உணர்ந்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.

பெண்ணின் புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். புதன்கிழமை இரவு முக்கியக் குற்றவாளியான ஆட்டோ டிரைவரைக் கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள மற்ற இரண்டு குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

Tags:    

Similar News