உள்ளூர் செய்திகள்

விமானசேவை கட்டுப்பாட்டு அறையில் திடீர் தீவிபத்து

Published On 2024-05-23 09:04 GMT   |   Update On 2024-05-23 09:04 GMT
  • சென்னை வான்வெளியை கடந்து செல்லும் விமானங்கள் உட்பட அனைத்து விமான சேவைகளையும் இந்த மையம் கண்காணிக்கும்.
  • விமான நிலைய உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகளை ஒருங்கிணைக்கும் மிகவும் முக்கியமான கட்டுப்பாட்டு அறை 4-வது தளத்தில் உள்ளது. இது அதிக பாதுகாப்புமிக்க இடம் ஆகும். சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள், தரையிறங்கும் விமானங்கள், விமான நிலையத்தில் தரையிறங்காமல் சென்னை வான்வெளியை கடந்து செல்லும் விமானங்கள் உட்பட அனைத்து விமான சேவைகளையும் இந்த மையம் கண்காணிக்கும்.

இந்நிலையில் இந்த இந்த நிலையில் இங்குள்ள அறையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில், திடீரென தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால், விமான கட்டுப்பாட்டு அறைக்கோ, விமான சேவைகளுக்கோ எந்த பாதிப்பும் இல்லை.

மின்கசிவு காரணமாக அந்த அறையில் இருந்த பழைய பொருட்கள் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விமான நிலைய உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News