என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "PM Modi"
- மிச்சாங் புயலில் சிக்கி சென்னையில் 17 பேர் உயிரிழந்தனர்.
- மிச்சாங் புயலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
புதுடெல்லி:
மிச்சாங் புயல் எதிரொலியால் சென்னையில் கடந்த இரு தினங்களாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது.
சென்னையில் கனமழையால் மழைநீரில் மூழ்கி, மரங்கள் மற்றும் சுவர்கள் விழுந்து என வெவ்வேறு நிகழ்வுகளில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்தது.
இந்நிலையில், மிச்சாங் புயலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மிச்சாங் சூறாவளியால் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். புயலால்பாதிப்பு அடைந்தவர்களுடன் எனது பிரார்த்தனைகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அயராது உதவிவருகின்றனர். நிலைமை முழுமையாக சீராகும் வரை தங்கள் பணியை அவர்கள் தொடர்வார்கள் என பதிவிட்டுள்ளார்
- புயல் சேதங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
- சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட மத்திய அரசின் குழுவினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.
சென்னை:
மிச்சாங் புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மிச்சாங் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதங்களை சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் மிச்சாங் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கிட கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (5-12-2023) அன்று கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய மிச்சாங் புயலால் பெய்த வரலாறு காணாத பெருமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக அதிக மழைப்பொழிவு பெறப்பட்டது. இதன்காரணமாக, இந்த 4 மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் விளக்கமாகக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டிற்கு. இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ.5,060 கோடியினை உடனடியாக வழங்கிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மிச்சாங் புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது. முழு விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின், விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு, கூடுதல் நிதி கோரப்படும் என தெரிவித்துள்ள முதலமைச்சர், சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட மத்திய அரசின் குழுவினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் இட ஒதுக்கீடு, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த மசோதா) ஆகிய மசோதா மீது விவாதம் நடைபெற்றது.
- திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சவுகாதா ராய் சில கருத்துக்களை தெரிவித்தார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இன்று காலை இந்திய நாட்டின் பொருளாதார சூழ்நிலை என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் இட ஒதுக்கீடு, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த மசோதா) ஆகிய மசோதா மீது விவாதம் நடைபெற்றது.
அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சவுகாதா ராய் சில கருத்துக்களை தெரிவித்தார். அதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு நாட்டிற்கு இரண்டு பிரதமர்கள், இரண்டு அரசியலமைப்பு, இரண்டு கொடிகள் எப்படி இருக்க முடியும். இதை செய்தவர்கள், தவறு செய்துள்ளனர். நம்நாட்டில் ஒரே பிரதமர், ஒரே கொடி, ஒரே அரசியலமைப்பு என நாங்கள் 1950-ல் இருந்து கூறி வருகிறோம். அதை செய்துள்ளோம்.
இவ்வாறு அமித் ஷா குறிப்பிட்டார்.
- 4 மாநிலங்களில் மூன்றில் பா.ஜனதா ஆட்சி அமைக்க இருக்கிறது.
- காங்கிரஸ் கட்சியிடம் இருந்து இரண்டு மாநிலங்களில் ஆட்சியை பறித்துள்ளது பா.ஜனதா
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நேற்று 4 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் பா.ஜனதாவுக்கு பலத்த அடி கொடுக்கப்படும் என எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. ஆனால் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட நிலையில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரசிடம இருந்து ஆட்சியை பறித்தது.
தெலுங்கானாவில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மிசோரமில் 3 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலை விட ஐந்து மாநிலங்களிலும் அதிக இடங்களை பிடித்துள்ளது.
இதனால் எதிர்க்கட்சிகளால் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி கூறுகையில் ''மக்கள் நலனுக்கான அர்ப்பணிப்பு இருக்கும்போது, ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பலை என்பது பொருத்தமற்றதாகிவிடும். சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மக்கள் நலன், நாட்டின் ஒளிமயமான எதிர்காலம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது.
குளிர்காலம் காலதாமதமாகிறது. ஆனால், அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது. பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகிய நான்கு 'சாதிகளுக்கு' அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற கொள்கையில் செல்பவர்களுக்கு அமோக ஆதரவு கிடைக்கிறது" என்றார்.
- மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் சூழலில் உள்ளது.
- தெலுங்கானாவுடனான எங்களின் பந்தம் பிரிக்க முடியாதது, மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.
இந்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.
இதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் சூழலில் உள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளையும், நன்றியும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள், இந்திய மக்கள் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியலில் மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. அவர்களின் நம்பிக்கை பாஜகவின் மீது உள்ளது.
இந்த அனைத்து மாநிலங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், குறிப்பாக தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் மற்றும் நமது இளம் வாக்காளர்கள், பாஜக மீது தங்கள் அன்பையும் நம்பிக்கையையும் ஆசீர்வாதத்தையும் பொழிந்ததற்காக நான் மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் நலனுக்காக தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்று உறுதியளிக்கிறேன்.
இத்தருணத்தில், உழைக்கும் கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றிகள். நீங்கள் அனைவரும் ஒரு அற்புதமான முன்மாதிரியை அமைத்துள்ளீர்கள். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்குடன் நாங்கள் முன்னேறி வருகிறோம். நாம் நிறுத்தவோ சோர்வடையவோ வேண்டியதில்லை. இந்தியாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இன்று நாம் இணைந்து இந்த திசையில் ஒரு வலுவான அடியை எடுத்து வைத்துள்ளோம்.
தெலுங்கானாவின் என் அன்பு சகோதரிகளே மற்றும் சகோதரர்களே, பாஜக மீது உங்கள் ஆதரவுக்கு நன்றி. கடந்த சில ஆண்டுகளாக, இந்த ஆதரவு அதிகரித்து வருகிறது. வரும் காலங்களிலும் இந்த போக்கு தொடரும்.
தெலுங்கானாவுடனான எங்களின் பந்தம் பிரிக்க முடியாதது, மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம். ஒவ்வொரு பாஜக நிர்வாகியின் தீவிர முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
- பாராளுமன்றத்தில் நாளை திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி. மெகுபா மோய்த்ராவுக்கு எதிராக அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் வருகிற 22-ந்தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த டெல்லியில் நேற்று மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் 23 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
மொத்தம் 19 நாட்கள் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் 15 நாட்கள் அலுவல் நாட்களாக இருக்கும். இந்த 15 நாட்களில் மொத்தம் 21 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த கூட்டத்தொடர் தான் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 17-வது பாராளுமன்றத்தின் நிறைவு கூட்டத்தொடர் ஆகும். எனவே இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
4 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி இருக்கிறது. இது நாளை தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் எதிரொலிக்கும். இதன் காரணமாக பாரதிய ஜனதா, காங்கிரஸ் இடையே பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் வகையில் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
அதுபோல காஷ்மீர் சீரமைப்பு சட்டமசோதா, பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, தபால் துறை சட்ட மசோதா போன்றவற்றிலும் ஆளுங்கட்சிகளுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. எனவே இந்த கூட்டத்தொடர் அனல் பறக்கும் வகையில் இருக்கும்.
பாராளுமன்றத்தில் நாளை திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி. மெகுபா மோய்த்ராவுக்கு எதிராக அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது. எம்.பி.க்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை குழு அளித்துள்ள அந்த அறிக்கை மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க தொழில் அதிபர்களிடம் லஞ்சம் பெற்றதாக திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி. மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. அவரது பதவி பறிக்கப்படலாம் என்று கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியானது.
இதன் காரணமாக நாளைய கூட்டத்தில் அவர் மீது தாக்கல் செய்யப்படும் அறிக்கை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் எம்.பி. பதவி பறிக்கப்பட்டால் பாராளுமன்ற கூட்டத்தொடரில் மேலும் அனல் பறக்கும் சூழ்நிலை உருவாகும்.
- தி.மு.க ஆட்சி அமைத்ததும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
- தன்னலம் பார்க்காமல் சுயநலம் பார்க்காமல் செயல்படுபவர்கள் தி.மு.க.வினர் தான்.
ஊட்டி:
ஊட்டியில் நடந்த இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
இந்தியாவிலேயே கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கிய ஒரே கட்சி தி.மு.க. தான். தி.மு.க.வில் எத்தனை அணிகள் இருந்தாலும் முதன்மையான அணி இளைஞரணி தான்.
நாட்டிலேயே இளைஞரணி என்பது முதன் முதலில் தி.மு.க.வில் தான் தொடங்கப்பட்டது.
2 மாதத்திற்கு முன்பு மதுரையில் மாநாடு நடந்தது. ஒரு மாநாடு எப்படி நடக்க கூடாது என்பதற்கு அந்த மாநாடே உதாரணம். மதுரையில் நடந்தது கேலிக்கூத்தான மாநாடு.
பா.ஜ.க.வினருக்கு எங்கு சென்றாலும் என் ஞாபகம் தான். என்னை பற்றியே பேசி கொண்டிருக்கின்றனர். நான் ஒரு அரங்கத்தில் பேசினேன். அதில் பிறப்பால் அனைவரும் சமம் என்று மட்டுமே பேசினேன். ஆனால் நான் பேசாததை பேசியதாக திரித்து கூறி வருகின்றனர்.
எங்கு போனாலும் தி.மு.க.வை பற்றி பேசுவதே அமித்ஷாவுக்கு வேலையாக உள்ளது. பொய் குற்றச்சாட்டுகளை சொல்வதில் அமித்ஷா வல்லவர். அதுபோல பிரதமரும் இதையே பேசி வருகின்றனர்.
ஒட்டுமொத்த தமிழ்நாடும் கலைஞரின் குடும்பம் தான்.
தன்னலம் பார்க்காமல் சுயநலம் பார்க்காமல் செயல்படுபவர்கள் தி.மு.க.வினர் தான்.
தி.மு.க ஆட்சி அமைத்ததும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தி.மு.க. அளித்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பள்ளி மாணவர்களின் பசியை போக்கிய ஆட்சி தான் தி.மு.க. மாணவ சமுதாயத்தினருக்கு பல்வேறு நலத்திடங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம். தமிழ்நாட்டு குழந்தைகளின் பாதுகாவலராக தி.மு.க அரசு உள்ளது.
மத்திய அரசு 9 வருடங்களில் செய்த ஊழல்களை சி.ஏ.ஜி. அறிக்கையில் அம்பலமாகிவிட்டது. மத்திய அரசால் பலன் அடைந்தது என்று பார்த்தால் அது அதானி குடும்பம் மட்டுமே. கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சியாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு உள்ளது. 2021 சட்டமன்ற தேர்தல் போன்று, 2024 பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தவறு நடந்தால் அதை விசாரிக்க வேண்டும்.
- விசாரணை நடத்த பல வழி முறைகள் உள்ளன.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் மாளிகையில் அசாம் மாநில உதய தினம் இன்று காலை கொண்டாப்பட்டது. விழாவில் கவர்னர் தமிழிசை பங்கேற்றார். பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னர், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை என அனைத்தும் பா.ஜ.க.வில் சேர்த்து விடுகின்றனர். வேறு எல்லாவற்றையும் பாஜகவில் சேர்த்து விடுங்கள்.
தமிழக போலீசை தி.மு.க. போலீஸ் என அழைக்கலாமா? அமலாக்கத்துறையில் ஒரு பிரச்சினை நடந்துள்ளது.
ஒரு அமைச்சர் வீட்டுக்கு சென்றார்கள். அமைச்சர் வீட்டிலிருந்து கட்டி, கட்டியாக, பெட்டி, பெட்டியாக எடுத்தார்கள். அதேபோல அனைத்து தமிழக அமைச்சர்கள், முதலமைச்சர் வீடுகளுக்கும் சோதனைக்கு செல்வோம் என்று கூறினார்களா? இலாகா இல்லாமல் ஒரு அமைச்சர் உள்ளார். அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

அதற்காக அனைத்து அமைச்சர்கள் மீதும் குற்றம் சொல்ல முடியுமா? எல்லா துறையிலும் பிரச்சினை இருக்கலாம், பிரச்சினைக்குரிய அதிகாரிகள் இருக்கலாம். ஒரு நபருக்காக துறையே மோசமானது, எல்லோரும் லஞ்சம் வாங்குவார்கள், அது மத்திய அரசு அமைப்பு, நாங்கள் மாநில அரசு அமைப்பு எனவே, மத்திய அரசு நிறுவனத்தில் புகுந்து சோதனை நடத்துவோம் என கூறலாமா?
இந்த பிரச்சினையில் தமிழக அரசு தவறான முன்னுதாரணத்தை எடுத்து செல்கிறது. தவறு நடந்தால் அதை விசாரிக்க வேண்டும். விசாரணை நடத்த பல வழி முறைகள் உள்ளன. அதற்கென தனியாக அதிகாரிகள் உள்ளனர்.
மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் இணக்கமாக செயல்பட வேண்டும். ஒருவர் தவறு செய்தால் அவர் எந்த துறையாக இருந்தாலும் தவறுதான்.
கடந்த கால மத்திய காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் அமைச்சர்கள் மீது எவ்வளவோ ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் ஒரு ஊழல் குற்றச்சாட்டும் ஒருவர் மீதும் கூற முடியாத அளவுக்கு இத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
அங்கே சில அதிகாரிகள் செய்யும் தவறுக்கு அரசு மீது குறைகூறுவதா? தமிழகத்தில் வேங்கைவயலில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நாங்குநேரியில் ஒரு பிரச்சினை நடந்தது. இதனால் தமிழகம் முழுவதும் பட்டியலின மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என முத்திரை குத்த முடியாது. சுப்ரீம்கோர்ட்டு கவர்னரும், முதலமைச்சரும் அமர்ந்து பேச வேண்டும் என தெரிவித்துள்ளது.
புதுவையில் முதலமைச்சருடன் இணைந்து செயல்படுகிறேன். எனக்கு புறக்கணிக்கும் பழக்கம் இல்லை, அரவணைக்கும் பழக்கம்தான் உள்ளது. மருத்துவக்கல்வி விவகாரத்தில் கவர்னர் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் என எதிர்கட்சித்தலைவர் சிவா கூறுகிறார்.
நான் என்ன கட்டப்பஞ்சாயத்து செய்கிறேன்? எந்த விவகாரத்துக்கும் கவர்னர்தான் காரணமா?
வெறும் வாய்க்கு கவர்னர்தான் அவலா? எதிர்கட்சித்தலைவர் சிவா கவர்னரையே எதற்கெடுத்தாலும் மென்று வருகிறார். அவருக்கு கொஞ்சம் அவல் வாங்கி கொடுங்கள். அதை மெல்லட்டும்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.
- கவர்னராக பதவியேற்ற நாள் முதல் புதுவையை என் குழந்தையாக பார்த்து பணியாற்றி வருகிறேன்.
- தேர்தலில் போட்டியிடுவது என்பது தற்போது வரை சஸ்பென்சாகவே இருக்கட்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நாகாலாந்து உதயநாள் விழா நடந்தது.
கவர்னர் தமிழிசை தலைமையில் நடந்த விழாவில் புதுவை பல்கலைக்கழகம், ஜிப்மரில் படிக்கும் நாகாலாந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களோடு இணைந்து கவர்னர் தமிழிசை நடனமாடினார்.
பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னரும், முதலமைச்சரும் அமர்ந்து பேசினால் பல தீர்வுகள் கிடைக்கும் என நான் தொடர்ந்து கூறி வருகிறேன். இந்த கருத்தை உச்சநீதிமன்றம் தற்போது பதிவு செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எம்.எல்.ஏ.க்கள் அவர்கள் தொகுதியில் நடக்கும் விழாவில் அவர்களை அழைக்க வேண்டும் என கூறுகின்றனர்.

அவர்கள் தங்கள் தொகுதி பிரச்சினைகளை முதலில் தீர்க்க வேண்டும். அதைவிட்டுவிட்டு நிகழ்ச்சிக்கு ஏன் அழைக்கவில்லை என அரசியல் செய்யக்கூடாது. நிகழ்ச்சிக்கு அழைக்காத கலெக்டரிடம் கேள்வி கேட்க வேண்டும். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்ல முடியும்?
கவர்னராக பதவியேற்ற நாள் முதல் புதுவையை என் குழந்தையாக பார்த்து பணியாற்றி வருகிறேன். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, நான் புதுவையிலேயே உள்ளேன் என கூறுகிறார். அந்தளவுக்கு புதுவையின் மீது கவனம் செலுத்துகிறேன்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக விரைவில் அறிவிப்பேன். தற்போது கவர்னராக இருப்பதால் அதுகுறித்து பேச முடியாது. தேர்தலில் போட்டியிடுவது என்பது தற்போது வரை சஸ்பென்சாகவே இருக்கட்டும்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.