அங்க ஒரு குத்து.. இங்க ஒரு குத்து: இதுதான் பாஜகவின் வெளியுறவுக் கொள்கை - சு. வெங்கடேசன் கிண்டல்

யுனெஸ்கோவை குடியரசுத் தலைவர் உரையில் பாராட்டியது மோடி அரசுயுனெஸ்காகோவிற்கான நிதியை நிறுத்திய டிரம்ப் அரசுக்கும் பாராட்டு தெரிவிப்பார்கள்
அங்க ஒரு குத்து.. இங்க ஒரு குத்து: இதுதான் பாஜகவின் வெளியுறவுக் கொள்கை - சு. வெங்கடேசன் கிண்டல்
Published on

இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும். அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்" என்று தெரிவித்தார்.

இதையடுத்து, அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தனது எக்ஸ் பதிவில், "ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் நுழையவும் இந்தியா ஒப்புக்கொண்டது" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்கா - இந்தியா உறவை விமர்சித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தீபாவளிப் பண்டிகையை உலக பாரம்பரியங்களின் பட்டியலில் இனைத்ததற்காக யுனெஸ்கோவை குடியரசுத் தலைவர் உரையில் பாராட்டியது மோடி அரசு.

அதே யுனெஸ்காகோவிற்கான நிதியை நிறுத்திய டிரம்ப் அரசுக்கானப் பாராட்டை இன்றைய பட்ஜெட் விவாத்தில் ஆளுங்கட்சியிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

தென்னமரத்துக்கு ஒரு குத்து! ஏணிச் சின்னத்துக்கு ஒரு குத்து! இதுதான் பாஜகவின் வெளியுறவுக் கொள்கை" என்று கிண்டலாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com