என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Purchases"

    • வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
    • ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டது என்று அமெரிக்கா தெரிவித்தது.

    அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளனர்.

    இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

    உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும். அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதற்கான எந்த அறிக்கையையும் இந்தியாவிடம் இருந்து தற்போதுவரை பெறவில்லை என தலைமை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.

    இதையடுத்து, அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தனது எக்ஸ் பதிவில், "ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் நுழையவும் இந்தியா ஒப்புக்கொண்டது" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்தியா எங்கு வேண்டுமானாலும் எண்ணெய் வாங்கட்டும் என்று ரஷியா தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக ரஷிய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "எந்த நாட்டிடன் இருந்தும் விருப்பத்திற்கேற்ப கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது. முந்தைய காலங்களிலும் பிற நாடுகளிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கியுள்ளது. இதில் புதிதாக எதுவும் இல்லை. ரஷ்யா ஒன்றும் கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் ஒரே நாடு கிடையாது என்பது எங்களுக்குத் தெரியும்

    • கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்படுகின்றன.
    • பருவம் தவறி பெய்யும் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் நிலை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லானது, கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்படுகின்றன.

    இதனால், மழைக் காலங்களிலும் பருவம் தவறி பெய்யும் மழையிலும் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் நிலையும்,வெயில் காலங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கி வைப்பதால் ஏற்படும் எடை குறைவால் நுகா்பொருள் வாணிபக் கழகத்திற்கும், அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது.

    எனவே, கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளில் சேமிக்க தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 50 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நிரந்தர சேமிப்புக் கிடங்கை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட குழுவின் சாா்பில் மாவட்ட துணைச் செயலாளா் செந்தில்குமாா் வலியுறுத்தி உள்ளார்.

    • தேங்காய் விலை குறைந்து வருவதை கட்டுப்படுத்த பேராவூரணி பகுதியில் தேங்காய் கொள்முதல் நிலையம் ஏற்படுத்தி தர வேண்டும்.
    • கூலி தொழிலாளர்களுக்கு அரசின் சலுகைகள் அனைத்தும் கிடைக்கும் வகையில் குடும்ப அட்டைகளை மாற்றி தர வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் கிராம கணக்குகளை ஆய்வு செய்து ஜமாபந்தி நிறைவு குடிகள் மாநாடு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. அசோக்குமார் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். முன்னதாக தாசில்தார் சுகுமார் வரவேற்றார்.

    கடைமடை பகுதி ஏரி, குளங்கள் நிரப்பி தர வேண்டும். தேங்காய் விலை குறைந்து வருவதை கட்டுப்படுத்த பேராவூரணி பகுதியில் தேங்காய் கொள்முதல் நிலையம் ஏற்படுத்தி தர வேண்டும். அரசு மருத்துவமனையில் ஸ்கேன் வசதி செய்து தரப்பட வேண்டும். தடையில்லா பேருந்து சேவை செய்து தர வேண்டும். கூலித் தொழிலாளர்களுக்கு அரசின் சலுகைகள் அனை த்தும் கிடைக்கும் வகையில் குடும்ப அட்டைகளை மாற்றி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் சார்பாக கருப்பையா, நைனா முகமது, சீனிவாசன் ஆகியோர் கூட்டத்தில் தெரிவித்தனர்.

    இதில் மாற்றுத்தி றனாளிகள், முதியோர், விதவை உதவித்தொகைகள், பட்டா மாற்றம் மற்றும் உட்பிரிவு, குடும்ப அட்டை 112 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கலெக்டர்பேசியதாவது,

    கடந்த 23 ந்தேதி முதல் நான்கு நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தியில் பெருமகளூர் உள்வட்டம், குருவிக்கரம்பை உள் வட்டம், ஆவணம் உள் வட்டம், பேராவூரணி உள் வட்டத்திற்குள் 800 மனுக்கள் பெறப்பட்டது. அவற்றில் 120 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. குடும்ப அட்டைகளை மாற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தையும் 10 நாட்களில் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேராவூரணி தவமணி, சேதுபாவாசத்திரம் கிருஷ்ணமூர்த்தி, பேரூரா ட்சி செயல் அலுவலர்கள் பேராவூரணி பழனிவேல், பெருமகளூர் புனிதவதி, மண்டல துணை வட்டாட்சி யர்மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் தரணிகா நன்றி கூறினார்.

    ×