தமிழ்நாடு

போரூர் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரெயில் பாதையில் மின்மயமாக்கல்

Published On 2024-05-23 08:31 GMT   |   Update On 2024-05-23 08:31 GMT
  • கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் - பூந்தமல்லி வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
  • ரெயில் பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பதற்காக, பூந்தமல்லியில் மெட்ரோ பணிமனை அமைக்கப்பட உள்ளது.

சென்னை:

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம், 118.9 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம் ஒன்றாகும்.

இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்டபாதையாகவும் அமைக்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலைங்களும் இடம் பெற உள்ளன.

தற்போது, உயர்மட்ட, சுரங்கப்பாதை பணி, மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணி ஆகிய பணிகள் பல்வேறு இடங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் - பூந்தமல்லி வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில் வழித்தடத்தில் பூந்தமல்லி - போரூர் இடையே உயர்மட்ட மின்பாதைக்கான உபகரணங்கள் நிறுவும் பணி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், பூந்தமல்லி - போரூர் இடையே உயர்மட்ட மின்பாதைக்கான உபகரணங்கள் நிறுவும் பணி தொடங்கியுள்ளது.

பூந்தமல்லி - போரூர் பாதையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உயர்மட்ட மின்பாதைக்கான உபகரணங்கள் நிறுவுவதிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.

ரெயில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பதற்காக, பூந்தமல்லியில் மெட்ரோ பணிமனை அமைக்கப்பட உள்ளது. இங்கு பெரும்பாலான உயர்மட்ட மின்பாதைக்கான உபகரணங்கள் நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்து இது தொடர்புடைய மற்ற பணிகள் தொடங்கப்படும். வரும் ஆகஸ்ட் மாதம் மெட்ரோ ரெயில்கள் வரும்போது, பரிசோதனைகள் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறினர்.

Tags:    

Similar News