தமிழ்நாடு செய்திகள்

அரசியலில் ஒதுங்குவதும் ஓய்வெடுப்பதும் தற்கொலைக்கு சமம்- ஆளூர் ஷாநவாஸ்

Published On 2024-06-15 20:12 IST   |   Update On 2024-06-15 20:12:00 IST
  • விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு.
  • சாதியவாத மதவாத சக்திகள் பிடித்துவிடக் கூடாது என்பதே தமிழ்நாட்டின் விருப்பம்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முடிவில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசியலில் ஒதுங்குவதும் ஓய்வெடுப்பதும் தற்கொலைக்கு சமம் என்று நாகப்பட்டினம் தொகுதி எம்எல்ஏவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளருமான ஆளூர் ஷாநவாஸ் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

திமுக Vs அதிமுக என்ற களத்தை சாதியவாத மதவாத சக்திகள் பிடித்துவிடக் கூடாது என்பதே தமிழ்நாட்டின் விருப்பம். அதற்கு முரணாகவே நடக்கிறது அதிமுக.

பாஜகவுக்கு வலு சேர்த்து அன்றும், பாமகவுக்கு வாய்ப்பளித்து இன்றும் களத்தை இழக்கிறது. அரசியலில் ஒதுங்குவதும் ஓய்வெடுப்பதும் தற்கொலைக்கு சமம்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News