தமிழ்நாடு செய்திகள்

போக்சோ வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2026-02-27 20:11 IST   |   Update On 2026-02-27 20:11:00 IST
  • சகாதேவன் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை பிணமாக கிடந்தார்.
  • மனவேதனையில் இருந்த அவர் பலமுறை வீட்டில் அழுது உள்ளார்.

தருமபுரி அடுத்த வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சகாதேவன் (வயது55). ஏரியூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த இவர் கடந்த 2023 ஆண்டு அங்குள்ள ஒரு குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் சகாதேவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைக்க ப்பட்டனர். இதனால் அவரை பணிநீக்கம் செய்யப்பட்டது.

பின்னர் சகாதேவன் ஜாமீனில் வெளியே வந்தார். இதனால் மனவேதனையில் இருந்த அவர் பலமுறை வீட்டில் அழுது உள்ளார். குடும்பத்தினர் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

இதையடுத்து சென்னைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்ற அவர் நேற்றிரவு ஊருக்கு திரும்பினார்.

இந்த நிலையில் தருமபுரி ரெயில் நிலையம் அருகேயுள்ள மாந்தோப்பு என்கிற இடத்தில் மரத்தில் சகாதேவன் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதியில் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மரத்தில் தூக்கில் பிணமாக கிடந்த சகா தேவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தருமபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகா தேவனுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகன் உள்ளது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News