தமிழ்நாடு

அரசு கலைக் கல்லூரிகள் ரேங்க் பட்டியல் 27-ந் தேதி வெளியாகிறது- முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 10-ந் தேதி தொடக்கம்

Published On 2024-05-23 08:40 GMT   |   Update On 2024-05-23 08:40 GMT
  • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாளாகும்.
  • முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3-ந் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

சென்னை:

தமிழ்நாடு முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாளாகும். ஏற்கனவே கடந்த 20-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டன.

வருகிற 27-ந் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இதைத் தொடர்ந்து முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 2-வது சுற்று ஜூன் 24 முதல் 29-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3-ந் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இந்த வருடமும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் சேருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் வணிகவியல், கணக்கு பதிவியல் பாடங்களில் 100-க்கு 100 எடுத்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டை விட போட்டி அதிகமாக உள்ளது. கடந்த வருடம் தேவையின் அடிப்படையில் 20 சதவீதம் இடங்கள் அதிகரிக்கப்பட்டன. அதுபோல இந்த ஆண்டும் குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News