செய்திகள்

பாமக இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெறாது- திருமாவளவன்

Published On 2019-02-07 04:29 GMT   |   Update On 2019-02-07 04:29 GMT
பா.ம.க. இடம்பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெறாது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். #VCK #Thirumavalavan #PMK #ADMK #BJP
சென்னை:

பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகித்து வருகிறது.

இந்த நிலையில் பா.ம.க. இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெறாது என்று அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக தொல். திருமாவளவன் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை கடந்த 2-ந் தேதி சந்தித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடந்த ‘தேசம் காப்போம்’ மாநாட்டில் கலந்து கொண்டதற்காக நன்றி தெரிவித்தேன்.

அப்போது அரசியலை பற்றி பொதுவான வி‌ஷயங்களை ஆலோசித்தோம். இந்த சந்திப்பின் போது தொகுதி ஒதுக்கீடு பற்றி பேசவில்லை. இதுவரை தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

தர்மபுரி இளவரசன் மரணத்தில் அவர் மீதும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மீதும் பா.ம.க. அவதூறு பரப்பினார்கள்.

எனக்கு மிரட்டல்களும் வந்தன. சமூகவலைதளங்களிலும் அவதூறு பரப்பினார்கள்.



நாங்கள் இரண்டு வி‌ஷயங்களில் தெளிவாக இருக்கிறோம். பா.ஜனதாவை எதிர்ப்பது மற்றும் பா.ம.க. இடம்பெறும் கூட்டணியில் இடம்பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

பா.ம.க. கூட்டணி தொடர்பாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுடன் பேசினாலும் முடிவில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இடம் பெறும் என்பதே எனது கருத்து.

அ.தி.மு.க. எந்த நெருக்கடியும் இல்லாமல் கூட்டணி அமைத்தால் அதில் கண்டிப்பாக பா.ஜனதா இடம்பெறும். ஆனால் பா.ஜனதா அரசு அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுத்து கூட்டணி வைக்கும். இதுதான் தி.மு.க. கூட்டணிக்கு கிடைக்கும் நன்மை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார். #VCK #Thirumavalavan #PMK #ADMK #BJP
Tags:    

Similar News