என் மலர்
நீங்கள் தேடியது "Thirumavalavan"
- கருத்தியல் ரீதியாக விடுதலை சிறுத்தைகளுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் தான் யுத்தம்.
- பா.ஜனதாவை அவரால் எதிர்க்க முடியுமா? அசைத்துக் கூட பார்க்க முடியாது.
சென்னை:
விடுதலைகள் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பா. ஜனதாவின் தீவிர எதிர்ப்பாளர் என்பது தெரிந்ததே. கருத்தியல் ரீதியாக விடுதலை சிறுத்தைகளுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் தான் யுத்தம். பாரதிய ஜனதாவை ஓட ஓட விரட்டுவோம் என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். இது தொடர்பாக பா. ஜனதா மூத்த தலைவர் எச். ராஜா கூறியதாவது:
திருமாவளவனிடம் என்ன கருத்து இருக்கிறது. அவரை பொறுத்தவரை ஒரு காலிடப்பா. அவரை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதவில்லை. பா.ஜனதாவை அவரால் எதிர்க்க முடியுமா? அசைத்துக் கூட பார்க்க முடியாது. பா.ஜனதா சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி பார்த்தார்கள். ஆனால் இன்று வட கிழக்கு மாநிலங்களில் நடந்திருப்பது என்ன? 90 சதவீதம் சிறுபான்மை மக்கள் வாழும் அந்த மாநிலங்களில் பெரும்பான்மை பலத்துடன் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகம் டெல்லியில் இருந்து ஆட்டி படைக்கிறது என்று ஒரு தவறான தகவலை பரப்பி பார்க்கிறார். ஏன் மக்களுக்கு புரியாதா? பிரதமர் மோடி ஒரு பிற்பட்ட சமூகத்தை சார்ந்தவர். ஜனாதிபதி முர்மு மலைவாழ் மக்கள் சமூகம், உள்துறை அமைச்சர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர். அப்படி இருக்கும்போது இவர் சொல்வதை மக்கள் எப்படி ஏற்பார்கள். பா.ஜனதா மீது இவர்கள் எப்படிப்பட்ட விமர்சனங்களை வைத்தாலும் அதை ஒவ்வொன்றாக மக்களே முறியடிப்பார்கள்.
இப்போது சனாதனம் எதிர்ப்பு என்று ஒன்றை சொல்கிறார். சனாதனம் என்றால் என்ன? தொன்மையானது என்பது தான்! இந்துக்கள் எதிர்ப்பு என்று சொல்கிறார். ஆனால் தேர்தல் நேரத்தில் சிதம்பரம் கோவிலில் சென்று பரிவட்டம் கட்டி தீட்சிதர்களிடம் ஆசி பெறுகிறார். இந்த வேடம் எதற்கு? என்று அவர் கூறினார்.
- அன்பிற்கும், ஆதரவுக்கும் நன்றி திமுக கூட்டணியில் வலிமையாக, நல்ல இணக்கத்துடன் இருந்து வருகிறோம்.
- ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவுக்கு அனுமதி அளிக்காத கவர்னர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அரசியல் வாழ்க்கை வரலாறு தொடர்பாக எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற புகைப்பட கண்காட்சி ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதை அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
இன்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் மற்றும் நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு, கண்காட்சி புத்தகத்தில் பாராட்டி எழுதினார்.
பின்னர் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
முதல்வரின் அயராத உழைப்பால் முன்னேறி இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த புகைப்பட கண்காட்சி அமைந்து இருக்கிறது.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுக கூட்டணிக்கு விசிக வர வேண்டும் என பேசி இருக்கிறார். அவருடைய அன்பிற்கும், ஆதரவுக்கும் நன்றி திமுக கூட்டணியில் வலிமையாக, நல்ல இணக்கத்துடன் இருந்து வருகிறோம். திமுக கூட்டணியை அகில இந்திய அளவில் கொண்டு செல்ல இருப்பதே அடுத்த கட்ட பணி.
ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவுக்கு அனுமதி அளிக்காத கவர்னர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் சட்டத்தின் காரணத்தை கூறும் கவர்னர் மனிதாபிமான அடிப்படையில் கூட முடிவு எடுப்பதற்கு ஏன் யோசிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை உருவாக்குவதற்காகவும் திட்டமிட்ட முறையில் பாஜகவும் அதனுடைய துணை அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.
- இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு மாநிலத்துக்கு உள்ளேயே புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தான் அதிகம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
'பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்டார்கள்' என்கிற பொய்யான செய்தியை வேண்டும் என்றே சமூக ஊடகங்களின் மூலமாகப் பரப்பி நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியவர்கள்மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். இது திட்டமிட்ட பயங்கரவாத சதி என்பதால் இதன் பின்னணியில் உள்ள அனைவர் மீதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்காகவும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை உருவாக்குவதற்காகவும் திட்டமிட்ட முறையில் பாஜகவும் அதனுடைய துணை அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. திமுக தலைமையிலான இந்த அரசில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்கிற தோற்றத்தை அவர்கள் உருவாக்கப் பார்க்கிறார்கள். அத்துடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இந்திய அளவில் அவப்பெயரை உருவாக்கவும் முயற்சிக்கிறார்கள்.

ஒருபுறம் தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்வது, இன்னொரு புறம் தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரைப் படுகொலை செய்கிறார்கள் என்று வதந்தி பரப்புவது என இரண்டு வகையில் சனாதன சக்திகள் இந்த சதி வேலையில் ஈடுபட்டிருக்கின்றன. எனவே, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சார்ந்த கூலித் தொழிலாளர்கள் குறித்து தமிழ்நாட்டில் செய்யப்படும் அவதூறுப் பிரச்சாரங்களைத் தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த இலட்சக் கணக்கானவர்கள் பிற நாடுகளிலும், பிற மாநிலங்களிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக உள்ளனர் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நமது அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 19 (1) (டி) அனைத்து குடிமக்களுக்கும் நாட்டின் எந்த ஒரு பகுதிக்கும் தடையின்றிச் செல்வதற்கும் உரிமை வழங்கியுள்ளது. 19(1) (இ) இந்திய குடிமக்கள் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் சென்று குடியிருப்பதற்கு உரிமை வழங்குகிறது. இவை இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளாகும். இந்த அடிப்படை உரிமை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு மாநிலத்துக்கு உள்ளேயே புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தான் அதிகம். மாநிலம் விட்டு மாநிலம் சென்று வாழ்கிறவர்கள் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 4% மட்டுமே ஆவர். உலக நாடுகளை ஒப்பிடும்போது மாநிலம்விட்டு மாநிலம் புலம்பெயர்வோர் இந்தியாவில் மிகவும் குறைவு என உலக வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. மாநிலம் விட்டு மாநிலம் சென்று பிழைக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக 1979 ஆம் ஆண்டு 'மாநிலங்களுக்கிடையே புலம்பெயரும் தொழிலாளர் சட்டம்' இயற்றப்பட்டது.
வெளிமாநிலத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் ஒப்பந்ததாரர்கள் மாநில அரசிடம் உரிமம் பெற வேண்டும். அவர்களை அழைத்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று அந்த சட்டத்தின் சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு நியாயமான கூலி மற்றும் சுகாதார வசதிகளையும், அந்தத் தொழிலாளர்களது குழந்தைகளின் கல்வி வசதியையும் அந்த ஒப்பந்ததாரர் செய்து தர வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு அழைத்துவரப்படும் தொழிலாளர்கள் ஒப்பீட்டளவில் மிக குறைவான சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள். அவர்களுடைய வேலை நேரமும் வரம்பற்றதாக உள்ளது. அவர்கள் கால்நடைகளைப் பட்டியில் அடைத்து வைப்பதுபோல சுகாதாரமற்ற சூழலில் வைத்து வேலை வாங்குகிறார்கள். அவர்கள் ஏறக்குறைய கொத்தடிமைகளைப் போலவே நடத்தப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசு அவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு சட்டப்படி அவர்களுக்குள்ள பிற உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காங்கிரசுடன் இணைந்து பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பது ஏற்கனவே எங்கள் தரப்பிலும் முன் வைக்கபட்ட கோரிக்கை தான்.
- அதானி வீழ்ந்து போகாமல் பாதுகாப்பதில் தான் மோடிக்கு அதிக அக்கறை இருக்கிறது.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய பார்வையோடு அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார். பா.ஜ.க.வை வரும் பாராளுமன்ற தேர்தலில் வீழ்த்த வியூகம் வகுத்து உள்ளார்.
மு.க.ஸ்டாலின் நேற்று பிறந்தநாள் விழா என்று மட்டும் இல்லாமல் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான அரசியல் பரப்புரையின் தொடக்கவுரையாகவும் பேசி உள்ளார்.
அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக உள்ள அணிகளை இணைக்கும் பணியில் முதலமைச்சர் ஈடுபடவேண்டும். நாடு முழுவதும் சுற்றுப்பயணமாக சென்று மாநில அரசியல் தலைவர்களை அவர் சந்திக்க வேண்டும்.
அகில இந்திய அளவில் மு.க.ஸ்டாலினின் பங்களிப்பு தேவை என்று பலரும் கூறி உள்ளனர். தி.மு.க. அதற்கான முன்னெடுப்பை எடுக்கும் என்பதற்கு உதாரணமாக மு.க.ஸ்டாலின் செயல்பட்டுள்ளார். பா.ஜ.க.வை வீழ்த்த மு.க.ஸ்டாலின் திடிரென எந்த முடிவும் எடுக்கவில்லை. அவர் இதற்கு முன்பாகவே வியூகம் வகுத்துவிட்டார்.
காங்கிரசுடன் இணைந்து பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பது ஏற்கனவே எங்கள் தரப்பிலும் முன் வைக்கபட்ட கோரிக்கை தான். சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் சாமானிய மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த அரசு கார்ப்ரேட்டுகளுக்கு ஆனது என்பதை அவர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர்.
அதானி வீழ்ந்து போகாமல் பாதுகாப்பதில் தான் மோடிக்கு அதிக அக்கறை இருக்கிறது. மக்களின் நலன் மீது இல்லை. இந்திய ஒன்றிய அரசு சமையல் விலை உயர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கிறோம்.
- காவல்துறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும்.
சென்னை :
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுக்க பா.ஜ.க. முயல்வதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் முதன்மை செயலாளர் உஞ்சை அரசன், துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, ரவிக்குமார் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சிந்தனை செல்வன், ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு, மாவட்ட செயலாளர்கள் இரா.செல்வம், வி.கோ.ஆதவன், ந.செல்லத்துரை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், ம.தி.மு.க. தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, சி.பி.ஐ. (எம்.எல்.) மாநில செயலாளர் பழ.ஆசைதம்பி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தொல்.திருமாவளவன் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் பா.ஜ.க. உள்ளிட்ட சனாதன சக்திகளால் வன்முறை தூண்டப்படுகிறது. சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து தி.மு.க. அரசுக்கு எதிரான ஒரு சூழலை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க. தலைவர்களின் பேச்சுக்கள் வன்முறையை தூண்டும் வகையில்தான் இருக்கின்றன.
தி.மு.க. ஆட்சியில் கி.வீரமணியின் காரை சூழ்ந்து அச்சுறுத்துவதை பார்க்கும் போது தமிழ்நாட்டில் காவல்துறை பா.ஜ.க. கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்று சந்தேகிக்க தோன்றுகிறது. தமிழகத்தில் காவல்துறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும்.
அரசியல் ரீதியாக என்ன பின்னடைவு ஏற்பட்டாலும் பா.ஜ.க., பா.ம.க. இருக்கும் இடத்தில் (கூட்டணியில்) நாங்கள் (வி.சி.க.) இருக்க மாட்டோம். அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை தி.மு.க. ஒருங்கிணைக்க வேண்டும் என்கிறோம். தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கிறோம்.
அண்மையில் நடைபெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஷ்கார் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் வரும் போது வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டது போன்று தமிழகத்திலும் தேர்தல் நெருங்க நெருங்க என்ன செய்யப் போகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. காரணம், அது நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையிடத்தில் இருந்து தான் முடிவு செய்யப்படும்.
இந்த ஆபத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சுட்டிக்காட்டத் தான் நாங்கள் இங்கு (வள்ளுவர்கோட்டம்) கூடி உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வெற்றிமாறன்.
- தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.
2007ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இவர் இயக்கிய ஆடுகளம், விசாரணை, அசூரன் ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளையும் மாநில விருதுகளையும் பெற்றார். தற்போது நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- வீட்டில் ஒருவருக்கு கட்டாய நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும்.
- சிஎஸ்ஆர் என்கிற பொதுநிதி அந்த பகுதியை சார்ந்த கிராமங்களின் மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் பேசியதாவது:
என்எல்சி நிர்வாகம் விரிவாக்க பணியில் ஈடுபட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் இதனால் இடம் பெயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக எனது தொகுதியில் காட்டு மன்னார்குடி வரையில் இதை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு போதிய இழப்பீடு தருவதற்கு தயாராக இல்லை. என்எல்சி விரிவாக்க பணிக்கு இடம் தருபவர்களுக்கு ஏக்கருக்கு 1 கோடி ரூபாயும், வீட்டில் ஒருவருக்கு கட்டாய நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அதுமட்டுமில்லாமல் சிஎஸ்ஆர் என்கிற பொதுநிதி அந்த பகுதியை சார்ந்த கிராமங்களின் மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். ஆனால் என்எல்சி நிர்வாகத்தினுடைய சிஎஸ்ஆர் நிதி என்பது வடஇந்திய மாநிலங்களில் குறிப்பாக பாஜக கட்சி ஆளும் மாநிலங்களில் பயன்படுத்தபடுவது நிறுத்தப்படவேண்டும்.
தமிழகத்தை சாராதவர்கள் ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பு பெறக்கூடிய நிலையும் இருக்கிறது. இந்த அவலத்தை போக்குவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிஎஸ்ஆர் நிதியை அந்த பகுதியை மேம்படுத்துவதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
- அன்னை சத்தியவாணி முத்து சுயமரியாதை இயக்கத்தில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர்.
- ஆதிதிராவிட மக்களுடைய கல்வி மேம்பாட்டுக்காகவும், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவரான அன்னை சத்தியவாணி முத்து பிறந்தநாள் நூற்றாண்டு 2023 பிப்ரவரி 15-ம் நாள் ஆகும். அந்நாளை அரசு விழாவாகக் கடைபிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
அன்னை சத்தியவாணி முத்து சுயமரியாதை இயக்கத்தில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர். அதன்பின்னர் 1949-ல் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய காலத்தில் இருந்தே பேரறிஞர் அண்ணாவோடு அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். 1957, 1967,1971 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தமிழ்நாட்டில் முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட இயக்கத்தைச் சேர்ந்த முதல் பெண்மணி அவர்தான். 1967-ல் பேரறிஞர் அண்ணா அமைச்சரவையிலும் அதன்பின்னர் 'சமத்துவப் பெரியார்' கலைஞரின் அமைச்சர வையிலும் அமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் பெண்மணியும் அவர்தான். 1979-ம் ஆண்டு சரண்சிங் பிரதமராக இருந்தபோது ஒன்றிய அமைச்சராகப் பொறுப்பேற்ற தமிழகத்தைச் சார்ந்த முதல் பெண்மணியும் அவரே ஆவார்.
ஆதிதிராவிட மக்களுடைய கல்வி மேம்பாட்டுக்காகவும், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர். அன்னை என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியவர். தந்தை பெரியாரைப் போலவே புரட்சியாளர் அம்பேத்கரையும் தனது தலைவராக ஏற்றுப் போற்றியவர்.
இத்தகைய பல்வேறு பெருமைகளைக்கொண்ட அன்னை சத்தியவாணி முத்துவின் பங்களிப்பைத் தமிழ்நாடு அரசு உரிய வகையில் அங்கீகரித்து அவரது நூற்றாண்டை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் மகளிர் கல்லூரி ஒன்றுக்கு அவரது பெயரை சூட்டவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பா.ஜ.க.வை பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்க்கிறார்கள்.
- பா.ஜ.க. தலையீட்டால் சசிகலா, தினகரன் ஓரங்கட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைத்தனர்.
ஆலந்தூர்:
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதாக கூறி, அதை கண்டித்து ஆலந்தூரில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் முகமது முனீர் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் சித்தீக், சையத் அலி முன்னிலை வகித்தனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், ஜமாஅத் தலைவர் பாக்கர், திருமுருகன் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசுகையில், பா.ஜ.க.வை பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்க்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகளாக ஒன்று சேர மறுக்கிறார்கள். அவர்களை ஓரணியில் திரள விடாமல் பாரதிய ஜனதா கட்சி செய்கிறது. அவர்களுக்கு எதிராக கூட்டணி சேரும் கட்சிகளை சிதறடித்து விடுவார்கள். அ.தி.மு.க. தற்போது மூன்று அணியாக சிதறி கிடப்பதற்கு பா.ஜனதா தான் காரணம். பா.ஜ.க. தலையிடாமல் இருந்து இருந்தால் சசிகலா தலைமையில் ஒரே அ.தி.மு.க.வாக இருந்து இருக்கும்.
பா.ஜ.க. தலையீட்டால் சசிகலா, தினகரன் ஓரங்கட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைத்தனர். தற்போது அவர்களையும் உடைத்து விட்டார்கள். தமிழ்நாட்டில் அரசியல் சித்து விளையாட்டு களமாக மாற்றுகின்றனர். அரசியல் ஆதாயத்துக்காக எந்த எல்லைக்கும் போவார்கள். அதற்குள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். தவறினால் மீண்டும் 2024-ல் ஆபத்து ஏற்படும் என கூறினார்.
- அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் இருப்பது, பா.ஜ.க.விற்கு சாதகமாக அமையும்.
- சாதிவாரிய கணக்கெடுப்புக்கான குரல், வட மாநிலங்களில் வலுவாக உள்ளது.
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-
தமிழக கவர்னர் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார். குறிப்பாக டெல்லி சென்று வந்ததில் இருந்து மாநில அரசிற்கு எதிரான போக்கை கடைபிடிக்காமல் அமைதியாக இருக்கிறார். மேலும் ஒரு பொறுப்பு கவர்னர் நியமிக்க இருப்பதாக தகவல் வருகின்றது.
அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் இருப்பது, பா.ஜ.க.விற்கு சாதகமாக அமையும். போட்டிபோட்டுகொண்டு காவடி தூக்குவது அ.தி.மு.க.விற்கும், தொண்டர்களுக்கும் நல்லதல்ல. பா.ஜ.க. வளர்வது, அ.தி.மு.க.விற்கு நல்லதல்ல. தமிழகத்திற்கும் நல்லதல்ல.
ஈரோடு இடைத்தேர்தலில், காங்கிரஸ் போட்டியிடுகிறது. தி.மு.க. சார்பிலான மதசார்பற்ற கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் பாடுபடும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. நிறைவேற்றப்படாமல் இருக்கும் பல கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கை இருக்கிறது.
சாதிவாரிய கணக்கெடுப்புக்கான குரல், வட மாநிலங்களில் வலுவாக உள்ளது. பீகாரில் இதுகுறித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என்றார்.