நடிகர் ரெடின் கிங்ஸ்லி குழந்தையை கொஞ்சிய திருமாவளவன்

2023-ம் ஆண்டு சின்னத்திரை நடிகையான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
நடிகர் ரெடின் கிங்ஸ்லி குழந்தையை கொஞ்சிய திருமாவளவன்
Published on

நெல்சன் இயக்கத்தில் வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியவர் ரெடின் கிங்ஸ்லி . இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. இந்த படத்தில் தனது நகைச்சுவையினால் அனைவரையும் கவர்ந்தார். இப்படத்திற்கு பின்னர் நகைச்சுவை நடிகராக தொடர்ந்து நடித்து வந்தார் ரெடின்.

நடிகர் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தில் இவரது நகைச்சுவை அனைவரையும் கவர்ந்தது. அதன்பின்னர் விஜயுடன் 'பீஸ்ட்' மற்றும் ரஜினியுடன் 'ஜெயிலர்' படத்தில் நடித்து இருந்தார்.

இதனிடையே கடந்த 2023-ம் ஆண்டு சின்னத்திரை நடிகையான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், விசிக தலைவர்திருமாவளவனை ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா தம்பதி சந்தித்துள்ளனர். அப்போது ரெடின் கிங்ஸ்லி குழந்தையை திருமாவளவன் தூக்கி கொஞ்சினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com