என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பா.ஜ.க.வை எதிர்ப்பதில் ஒன்றிணைந்து இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்படும் விஜய் - திருமாவளவன்: தமிழக பா.ஜ.க.
- விஜய்யை இயக்கும் கொள்கை ஆசான் யார்?.
- தன் அரசியல் நடிப்பை வெளிப்படுத்தி வரும் திருமாவளவனும் இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.
சென்னை:
தமிழக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடிகர் விஜய் ஊழலையும், வாரிசு அரசியலையும் ஒழிப்பதற்காக அரசியலுக்கு வந்தேன் என்று ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் சத்தியம் செய்ததை மறந்தது ஏன்?. விஜய்யை இயக்கும் கொள்கை ஆசான் யார்?.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனைதான் கொள்கை ஆசான் என்று த.வெ.க. தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் அறிவித்ததின் பின்னணி என்ன?. அனைத்துக் கட்சிகளுக்கும் அறிவுரை சொல்லும் திருமாவளவன் நடிகர் விஜய்யை காங்கிரசோடு கைகோர்க்க வேண்டும் என்று மறைமுகமாக ஆதவ் அர்ஜூனா மூலம் அறிவுரை சொல்வது ஏன்?.
எதிர்எதிர் துருவங்கள் போல காட்டிக் கொண்டு பா.ஜ.க.வை எதிர்ப்பதில் மறைமுகமாக ஒன்றிணைந்து, இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்படும் அரசியல் நடிகர் விஜய்யும், ஒரு படத்தில் நடித்திருந்தாலும், தேர்தல் நேரத்தில் புதுப்புது அரசியல் கேரக்டராக, தன் அரசியல் நடிப்பை வெளிப்படுத்தி வரும் திருமாவளவனும் இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






