என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP"

    • இன்று 100 ஆவது முறையாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்
    • 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி நியமனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி நியமனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசை முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  

    "கடந்த 2013 ஆம் ஆண்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற சுமார் 40 ஆயிரம் இளைஞர்களுக்கு, இன்று வரை பணி வழங்கப்படவில்லை. இது குறித்துப் பல முறை அவர்கள் கோரிக்கை வைத்தும், அறவழிப் போராட்டங்கள் நடத்தியும், திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. தனது 2021 தேர்தல் அறிக்கையில், வாக்குறுதி எண் 177 ல், இவர்களுக்குப் பணி வழங்குவோம் என்று பொய் கூறி ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, இன்று வரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் துரோகம் செய்து வருகிறது.

    இது வரை, 99 போராட்டங்கள் நடத்தியும், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பெரும் ஏமாற்றத்திலும், விரக்தியிலும் உள்ள இளைஞர்கள், இன்று 100 ஆவது முறையாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். தகுதித் தேர்வுக்குப் பின்னரும் மற்றொரு போட்டித் தேர்வு நடத்தும் அரசாணை 149ஐக் கைவிட்டு, 2013 ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரடி பணி நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு பாஜக சார்பில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம், அவர்கள் போராட்டத்தில் நேரடியாகக் கலந்து கொண்டு எங்கள் ஆதரவை வெளிப்படுத்தினோம். தொடர்ந்து தமிழ்நாடு பாஜக, அவர்கள் கோரிக்கைகளுக்குத் துணை நிற்கும்

    போலி வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்ற புதிதாக ஒரு தேர்தல் அறிக்கை குழு அமைப்பதை விட்டு விட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக, 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி நியமனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், திமுக அரசையும் வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற சென்னது பாஜக அல்ல நீதிமன்றம்.
    • விரைவில் டெல்லி சென்று பியூஷ் கோயலை சந்திக்க உள்ளேன்.

    சென்னை:

    சுனாமி நினைவு தினத்தையொட்டி சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் பா.ஜ.க. சார்பில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பா.ஜ.க. துணைத்தலைவர் குஷ்பு, செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்பட பலர் கடலில் பால் ஊற்றி வழிபட்டார்கள்.

    பின்னர் குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடுமா என விசிக தலைவர் திருமாவளவன் கேட்டுள்ளார்.

    திருமாவளவன் மனநிலை இதுதான், இதுவே கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடினால் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடுமா என அவரால் கூற முடியுமா? இந்து மெஜாரிட்டி அதிகமாக உள்ளதால் தொடர்ந்து மண்டையில் கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களது கூட்டணியில் இருப்பவர்கள் கோவிலுக்கு போவார்கள், பட்டை பூசுவார்கள், தீபம் ஏற்றுவார்கள், வீட்டில் பூஜை நடத்துவார்கள் இதையெல்லாம் நாலு சுவற்றுக்குள் நடக்கும் மக்களுக்கு தெரியாது என நினைப்பார்கள்.

    வருகிற தேர்தலில் எந்த கோவிலுக்கும் போக வேண்டாம், எந்த சர்ச், மசூதி பள்ளிவாசலிலும் திருமாவளவன் நிற்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற சென்னது பாஜக அல்ல நீதிமன்றம். மகாத்மா காந்தி பெயர் மாற்றம் குறித்து ப.சிதம்பரம் விமர்சிக்கிறார்.

    அவர்கள் ஆட்சி காலத்தில் ராஜீவ்காந்தி பெயரில் திட்டங்களை கொண்டு வந்தார்கள். ஆனால் நாங்கள் மோடி பெயரை எந்த திட்டத்துக்காவது சூட்டினோமா? ராகுல் காந்தி வாக்கு இயந்திரத்தில் தவறு உள்ளது என கூறினார் ஆனால் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அப்படி எதுவும் இல்லை என கூறினார். காங்கிரசில் உள்ள பல நபர்கள் வாக்கு இயந்திரத்தில் எந்த குளறுபடிகளும் இல்லை என கூறி வருகிறார்கள். சொல்வதற்கு வாய் உள்ளது என வாய்க்கு வந்தபடி எதையும் கூற கூடாது. யோசித்து பேச வேண்டும்.

    விஜயும் சீமானும் ஆர்.எஸ்.எஸ் பிள்ளைகள் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறுகிறார்.

    அப்போ திருமாவளவன் யாரின் பிள்ளை, தி.மு.க. வின் பிள்ளையா, காங்கிரஸ் பிள்ளையா? அ.தி.மு.க. கூட்டணியில் பாஜகவுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது என்ற வதந்திகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. விரைவில் டெல்லி சென்று பியூஷ் கோயலை சந்திக்க உள்ளேன். விரைவில் பா.ஜ.க. மாநில தலைவர் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒரு நல்ல அறிவிப்பை வெளியிடுவார்கள். பா.ஜ.க. கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக வந்த கணக்குகள் வதந்தி மட்டுமே என்றார். 

    • மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 10 வேட்பாளர்களின் பெயர்களையாவது விஜயால் சொ்லல முடியுமா?.
    • இந்தியாவையே நாளை பிடித்து விடுவேனு கூட விஜய் சொல்லலாம்.

    தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் தொடக்கத்தில் நடைபெற இருக்கிறது. திமுக கூட்டணி, அதிமுக- பாஜக கூட்டணி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இதற்கிடையே நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து அதற்கான பணியை தொடங்கியுள்ளார்.

    அவர் மக்களை சந்திக்கும்போதெல்லாம் தமிழகத்தில் திமுக- தவெக இடையில்தான் கூட்டணி எனப் பேசி வருகிறார். இந்த தேர்தலில் அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முதலில் அதிமுக கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால், பாஜக-வுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அறிவித்ததால் அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை. மேலும், விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என தவெக அறிவித்தது. இதனால் எடப்பாடி பழனிசாமியும் தவெக உடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. இதனால் அதிமுக-வினர் விஜய் மற்றும் விஜய் கட்சியை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர். பாஜக-வினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன் "இந்தியாவையே நாளை பிடித்து விடுவேனு கூட விஜய் சொல்லலாம். ஆனால், இது சினிமா அல்ல. தவெக-வுக்கு கட்டமைப்பு கிடையாது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 10 வேட்பாளர்களின் பெயர்களையாவது விஜயால் சொல்ல முடியுமா?" என நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

    • எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது.
    • கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்!

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது!

    பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் - மாண்புமிகு பிரதமர் அவர்கள் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும்.

    மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் - ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒன்றிய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது.

    எனவே, நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்! என்று கூறியுள்ளார். 



    • கூட்டணி மட்டுமின்றி தொகுதி பங்கீடு தொடர்பாகவும் இரு கட்சிகளும் விரிவாக ஆலோசித்து உள்ளனர்.
    • கூட்டம் நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு மைதானம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிகளை உறுதிப்படுத்தும் வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    ஏற்கனவே 2021 தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. 2024 பாராளுமன்ற தேர்தலில் அந்த கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டது.

    இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலை பலமான கூட்டணியுடன் சந்திக்கும் வகையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பே அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணியை அமித்ஷா உருவாக்கினார்.

    முன்கூட்டியே உருவான இந்த கூட்டணி அரசியலில் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்துவதில் டெல்லி பா.ஜ.க. தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் மத்திய மந்திரி பியூஸ் கோயல் சென்னை வந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது மற்ற கட்சிகளை சேர்ப்பதில் உள்ள சிக்கல்கள் பற்றியும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

    கூட்டணி மட்டுமின்றி தொகுதி பங்கீடு தொடர்பாகவும் இரு கட்சிகளும் விரிவாக ஆலோசித்து உள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் இதே கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டு இருந்தன. ஆனால் இந்த தேர்தலில் பா.ஜ.க. 35 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி பியூஸ் கோயல் எடப்பாடி பழனிசாமியிடம் தங்கள் கட்சியின் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

    பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்று மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி குழுப்பிய போது அவர் உறுதியாக எதையும் கூறவில்லை. ஆனால் தனது தலைமையிலான இந்த காலகட்டத்தில் பா.ஜ.க. அதிகமான எண்ணிக்கையில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தெரிவித்தார்.

    முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அ.ம.மு.க., ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தற்போது அந்த கூட்டணியில் இல்லை. அதேபோல் தே.மு.தி.க.வும் தங்கள் நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. எனவே கூட்டணியை வலுப்படுத்துவது மற்றும் உறுதிப்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல்கள் நிலவுகின்றன.

    இதற்கிடையில் கூட்டணியை உறுதிப்படுத்தி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த பா.ஜ.க. திட்டமிட்டது.

    பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த அக்டோபர் மாதம் 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் பிரசார பயணத்தை தொடங்கினார். இந்த பிரசார பயணத்தை பல்வேறு மாவட்டங்களில் மேற்கொண்ட நயினார் நாகேந்திரன் அடுத்த மாதம் (ஜனவரி) 9-ந்தேதி புதுக்கோட்டையில் நிறைவு செய்கிறார். இந்த இரு விழாக்களையும் ஒரு சேர நடத்தவும் இந்த விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகிய இருவரையும் அழைக்கவும் முடிவு செய்து இருந்தார்கள்.

    ஆனால் பிரதமர் மோடியின் வருகை உறுதியாகவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு 9-ந்தேதி அமித்ஷா வருகை உறுதியாகி இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    கூட்டம் நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு மைதானம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இப்போதைக்கு கூட்டணி கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி மற்றும் சில கட்சி தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்பது உறுதியாகி இருப்பதாகவும், தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடப்பதால் எந்தெந்த கட்சிகள் வரும் என்பது கடைசி நேரத்தில்தான் தெரியவரும் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தார்கள்.

    • பிரதமர் மோடி 100 நாட்கள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி உள்ளார்.
    • தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் உள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்கிற சுற்றுப் பயண யாத்திரையை நேற்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டார்.

    நேற்று இரவு கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் நடந்த பிரச்சார நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    100 நாட்கள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறினார். ஆனால், 100 நாள் வேலை திட்டத்தில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கினர்.

    ஆனால், பிரதமர் மோடி 100 நாட்கள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி உள்ளார்.

    இதே போல், தி.மு.க. தேர்தல் அறிக்கை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிட வலியுறுத்தி செவிலியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால், இப்போது தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி தலைமையில் குழு அமைத்துள்ளனர். அந்த அறிக்கையில் கவர்ச்சி திட்டங்கள் இருக்காது என கனிமொழி கூறியுள்ளார்.

    தமிழகத்தில் நடப்பது போலியான ஆட்சி. கஞ்சா, நவநாகரிக போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக புழுங்குகிறது.

    பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு அகற்றப்பட வேண்டும். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் உள்ளது.

    பாலியல் வன்கொடுமையில் மக்களை காக்கவும், கஞ்சா போதையில் இருந்து மக்களை காக்க தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும். 42-வது மாவட்டமாக இங்கு வந்துள்ளேன். தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகி ஒரு ஆண்டு ஆகிறது. தமிழகத்தில் நல்லாட்சி அமைய இக்கூட்டணி உருவாகி உள்ளது.

    தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி பொங்கலுக்கு பிறகு பெரிய வலுவான கூட்டணியாக உருவாகும். நல்லதே நடக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 16 வயதான சிறுமி செங்காரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
    • 2019 ஆம் ஆண்டு செங்காருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரின் சிறைத்தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

    நீதிபதிகள் சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனிப்பட்ட பிணையில் செங்காரை ஜாமினில் விடுவித்துள்ளது.

    மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டைச்சுற்றி 5 கி.மீ. தூரத்திற்கு செங்கார் செல்லக்கூடாது என்றும், அப்பெண்ணையோ அல்லது அவரது தாயாரையோ அச்சுறுத்தக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது. வாரம் ஒருமுறை காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் ஜாமின் ரத்து செய்யப்படும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கடந்த 2017 ஆம் ஆண்டு 16வயதான சிறுமி செங்காரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு செங்காருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனிடையே இந்த குற்றத்திற்கு நீதிக்கேட்டு போராடியதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் இருக்கும்போது இச்சிறுமியின் தந்தை உயிரிழந்தார். இந்த காவல் மரண வழக்கிலும் செங்கருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் இதுதொடர்புடைய பிற வழக்குகள் அனைத்தும் ஆகஸ்ட் 1, 2019 அன்று உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் உத்தரபிரதேசத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்திலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில் செங்காரின் மேல்முறையீட்டில் டெல்லி உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்தது.

    இன்னலையில், செங்காருக்கு ஆயுள் தண்டனையை, டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்ததற்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

    மேலும், டெல்லி இந்தியா கேட் பகுதியில் அப்பெண், போராட்டத்தில் ஈடுபட போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்

    • அண்ணல் காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் உணர வேண்டும்!
    • ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும்!

    சென்னை:

    அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய பா.ஜ.க. அரசையும், ஒத்து ஊதும் அ.தி.மு.க.வையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை மேடவாக்கத்தில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    MGNREGA-வை மீட்டெடுக்கவும், தங்களது வாழ்வாதாரத்தைக் காத்துக்கொள்ளவும் தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்கள்!

    இது தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என்பதை, அண்ணல் காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் உணர வேண்டும்! ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும்! என்று கூறியுள்ளார்.


    • வழக்கு சென்னை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி செந்தில் குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
    • டி.ஆர்.பாலு, அண்ணாமலை இருவரும் நேரில் ஆஜராகவில்லை.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த போது அண்ணாமலை, 'தி.மு.க. பைல்ஸ்' என்ற பெயரில் தி.மு.க. அமைச்சர்கள் பலரின் சொத்து விவரங்களை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டார்.

    அதில், தி.மு.க. பொருளாளரும், எம்பி.யுமான டி.ஆர்.பாலு, அவரது மகனும் அமைச்சருமான டி.ஆர்.பி ராஜா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு 21 நிறுவனங்கள் சொந்தமாக உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

    மேலும் டி.ஆர்.பாலு மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    இது தன்னுடைய பெயருக்கும் மற்றும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி டி.ஆர்.பாலு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இந்த வழக்கில் டி.ஆர்.பாலுவின் 21 நிறுவனங்கள், சொத்துக்கள் தொடர்பாக அண்ணாமலை தரப்பில் குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி செந்தில் குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.ஆர்.பாலு, அண்ணாமலை இருவரும் நேரில் ஆஜராகவில்லை.

    இதையடுத்து இரு தரப்பிலும் ஆஜராகி இருந்த வக்கீல்கள் குறுக்கு விசாரணையை வேறு தேதிக்கு தள்ளி வைக்க நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதைத் தொடர்ந்து உத்தரவிட்ட நீதிபதி, குறுக்கு விசாரணையை ஜனவரி 20-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

    • காவல்நிலையத்தில் இருக்கும்போது பெண்ணின் தந்தை உயிரிழந்தார்
    • விசாரணை நீதிமன்றத்திலிருந்து டெல்லிக்கு வழக்குகள் மாற்றப்பட்டன

    உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரின் சிறைத்தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 

    நீதிபதிகள் சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனிப்பட்ட பிணையில் செங்காரை ஜாமினில் விடுவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டைச்சுற்றி 5 கி.மீ. தூரத்திற்கு செங்கார் செல்லக்கூடாது என்றும், அப்பெண்ணையோ அல்லது அவரது தாயாரையோ அச்சுறுத்தக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது. வாரம் ஒருமுறை காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் ஜாமின் ரத்து செய்யப்படும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

    கடந்த 2017 ஆம் ஆண்டு 16வயதான சிறுமி செங்காரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு செங்காருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனிடையே இந்த குற்றத்திற்கு நீதிக்கேட்டு போராடியதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் இருக்கும்போது இச்சிறுமியின் தந்தை உயிரிழந்தார். இந்த காவல் மரண வழக்கிலும் செங்கருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் இதுதொடர்புடைய பிற வழக்குகள் அனைத்தும் ஆகஸ்ட் 1, 2019 அன்று உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் உத்தரபிரதேசத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்திலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில் செங்காரின் மேல்முறையீட்டில் டெல்லி உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. 

    • மத்திய மந்திரி பியூஸ்கோயல் இன்று சென்னை வந்தார்.
    • எடப்பாடி பழனிசாமி இன்று மத்திய மந்திரி பியூஸ் கோயலை சந்தித்தார்

    தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. இதற்காக அனைத்துக்கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. இந்த தேர்தலில் எப்படியாவது தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.

    தமிழக பா.ஜ.க. தேர்தல் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ்கோயல் இன்று சென்னை வந்தார்.

    இதைத்தொடர்ந்து மதியம் ஒரு மணியளவில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த மத்தியமந்திரி பியூஸ்கோயலை சந்தித்தார். அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனு சாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் வந்து இருந்தனர். தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பி.எஸ். இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிடிவி தினகரன், ஓ.பி.எஸ்.ஆகிய இருவரையும் கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கும் இடங்களில் இருந்து டிடிவி தினகரன், ஓ.பி.எஸ் ஆகிய இருவருக்கும் இடங்கள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    அதாவது அதிமுகவுக்கு 170 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் மீதமுள்ளவற்றில் பாஜகவுக்கு 23 தொகுதிகளும் பாமகவுக்கு 23 தொகுதிகளும் தேமுதிகவுக்கு 6 தொகுதிகளும் அமமுகவுக்கு 6 தொகுதிகளும் ஒபிஎஸ்க்கு 3 தொகுதிகளும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்படவுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

    • மத்திய மந்திரி பியூஸ்கோயல் இன்று சென்னை வந்தார்.
    • எடப்பாடி பழனிசாமி இன்று மத்திய மந்திரி பியூஸ் கோயலை சந்தித்தார்.

    தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. இதற்காக அனைத்துக்கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. இந்த தேர்தலில் எப்படியாவது தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.

    தமிழக பா.ஜ.க. தேர்தல் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ்கோயல் இன்று சென்னை வந்தார்.

    இதைத்தொடர்ந்து மதியம் ஒரு மணியளவில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த மத்தியமந்திரி பியூஸ்கோயலை சந்தித்தார். அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனு சாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் வந்து இருந்தனர். தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இந்நிலையில், சென்னை தனியார் ஹோட்டலில் நடந்த பியூஷ் கோயல் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நிறைவு பெற்றுள்ளது. அதிமுக - பாஜக இடையே நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    ஏற்கனவே பா.ஜ.க. 80 தொகுதிகளை வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக அடையாளம் கண்டு வைத்து உள்ளது. இதில் இருந்துதான் கூட்டணியில் தொகுதிகளை கேட்கும் என்று கூறப்படுகிறது.

    ×