சினிமா

சமூக கருத்துக்களை நீக்க வேண்டியதில்லை: விஜய் மற்றும் `மெர்சல்' படக்குழுவுக்கு விஷால் பாராட்டு

Published On 2017-10-21 10:09 GMT   |   Update On 2017-10-21 10:09 GMT
`மெர்சல்' படத்தின் மூலம் மக்களுக்கு சமூக கருத்துக்களை சொல்லியிருக்கும் விஜய், அட்லி மற்றும் படக்குழுவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாக நடிகர் விஷால் கூறியிருக்கிறார்.
அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் மெர்சல்.

இப்படம் வெளியாவதற்கு முன்பே பல பிரச்சனைகளை சந்தித்த நிலையில், படம் வெளியான பின்னரும் மெர்சல் படத்திற்கு சோதனை வந்திருக்கிறது. படத்தில் ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா, பண மதிப்பிழப்பு உள்ளிட்ட சில வசனங்கள் மற்றும் காட்சிகளை நீக்க வலியுறுத்தி தமிழக பாஜக தலைவர் தமிழிசை வலியுறுத்தினார்.

இந்நிலையில், சர்ச்சைக்குள்ளான அந்த காட்சிகளை தயாரிப்பு தரப்பு நீக்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், படத்திற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களமிறங்கி இருக்கின்றனர். காங்கிரஸ், திமுக, மதிமுக உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்களும் மெர்சல் படத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில், படத்தை பார்த்துவிட்டு கருத்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறும் போது,

`மெர்சல்' படத்தின் மூலம் மக்களுக்கு சமூக கருத்துக்களை சொல்லியிருக்கும் விஜய், அட்லி மற்றும் படக்குழுவுக்கு பாராட்டுக்கள். தனிமனிதனாகவோ, படங்களிலோ தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவது கருத்து சுதந்திரமே. அதுதான் ஜனநாயக சட்டம் அனைவருக்கும் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரம். தான் நினைத்ததை சொல்லும் கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. அது திரைத்துறையினருக்கும் உண்டு.

ஹாலிவுட் படங்களில் கூட அந்நாட்டு அதிபர்களை கிண்டலடிக்கும் காட்சிகள் வைக்கப்படுகின்றன. எனவே வசனங்கள் காட்சிகளை நீக்க சொல்லி வற்புறுத்துவது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல். சென்சார் செய்யப்பட்ட படத்தை மீண்டும் சென்சார் செய்ய சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை.

இவ்வாறு கூறினார்.

Tags:    

Similar News