search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஜிட்டல் இந்தியா"

    • சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள்.
    • மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பல ஆங்கில நாளிதழ் செய்திகளை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?

    சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள்.

    சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.

    கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா?

    இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி.

    இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு?

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • சிறந்த தலைவர்கள் மாற்றத்திற்காக காத்திருக்க மாட்டார்கள்.
    • இந்தியாவில் 5 மில்லியன் ஜந்தன் வங்கி கணக்குகள் உள்ளன.

    திருச்சி:

    திருச்சி ஐ.ஐ.எம். நிறுவனத்தில் தலைமைத்துவம் குறித்த கருத்தரங்கு இன்று நடைபெற்றது.

    தற்போதைய போட்டிகள் நிறைந்த உலகில் தலைமைத்துவத்துடன் சிறந்து விளங்குவதற்கு தேவைப்படும் புதிய திறன்கள் மற்றும் பரிணாமங்கள் குறித்த கருப்பொருளில் இந்த கருத்தரங்கு நடைபெற உள்ளது.

    இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை விருந்தினராக பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிறந்த தலைவர்கள் மாற்றத்திற்காக காத்திருக்க மாட்டார்கள். அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். இந்தியாவில் ஊழல் ஒரு பிரச்சனையாக உள்ளது.

    ஒரு ரூபாய் அரசு ஒதுக்கினால், பயனாளிகளுக்கு 15 பைசா தான் சென்றடைகிறது. மீதமுள்ள, 85 பைசாவை ஊழல் செய்கிறார்கள். இதற்கான தீர்வாக, 'டிஜிட்டல் இந்தியா' கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்தியாவில் 5 மில்லியன் ஜந்தன் வங்கி கணக்குகள் உள்ளன. இதில் 56 சதவீதம் பெண்கள் இருக்கிறார்கள். இதனால் இவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் சென்றுவிடுவதால் இடையில் இருப்பவர்கள் முறைகேடு செய்ய முடிவதில்லை. சமீபத்தில் நடைபெற நிகழ்வில் தமிழகத்தில் பள்ளிக்கல்வி படிக்கும் கிராமப்புறத்தை சேர்ந்த ஒரு மாணவன், சூரியசக்தி மூலம் இஸ்திரி செய்யும் பெட்டியை கண்டுபிடித்துள்ளார். இதனால், பல டன் கரி சேமிக்கப்படும். சுற்றுச்சூழல் மாசு தவிர்க்கப்படும். அந்த மாணவனை நான் பாராட்டினேன்.

    முத்ரா திட்டத்தின் மூலம் பலரும் தொழில் தொடங்க வழிவகை ஏற்பட்டுள்ளது.

    மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை தீட்டி செயல்படுகிறது. அதனால் தான் பல மருத்துவமனைகள், சாலைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு நாடு மேம்பாடு அடைகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சரவைக் கூட்டத்தின் போது, டிஜிட்டல் இந்தியா திட்ட விரிவாக்கத்திற்கு பட்ஜெட் ஒதுக்கி பிரதமர் மோடி ஒப்புதல்.
    • 2.65 லட்சம் தனிநபர்கள் ஐடி துறையில் பயிற்சி பெறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

    டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், 14,903 கோடி ரூபாய் கணிசமான பட்ஜெட்டை ஒதுக்கி, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முன்முயற்சியின் விரிவாக்கத்திற்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இதுகுறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் விரிவாக்க கட்டம் அதன் முந்தைய மறு செய்கையின் சாதனைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் என்றும் அமைச்சரவைக் கூட்டத்தின் போது, 14,903 கோடி ரூபாய் கணிசமான பட்ஜெட்டில் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு பிரதமர் ஒப்புதல் அளித்தார்" என்றார்.

    இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பாராட்டத்தக்க 5.25 லட்சம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மறுதிறன் மற்றும் மேம்பாட்டிற்கு உட்படுத்தப்பட உள்ளனர். மேலும் 2.65 லட்சம் தனிநபர்கள் ஐடி துறையில் பயிற்சி பெறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

    மேலும், விரிவாக்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், ஒன்பது புதிய சூப்பர் கம்ப்யூட்டர்களின் விரிவாக்கம் தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷனின் (என்சிஎம்) கட்டமைப்பிற்குள் திட்டமிடப்பட்டுள்ளது.

    திட்டத்தின் வேகத்தை வலியுறுத்தி, என்சிஎம் ஏற்கனவே 18 சூப்பர் கம்ப்யூட்டர்களை வெற்றிகரமாக பயன்படுத்தியுள்ளதாக அமைச்சர் எடுத்துரைத்தார்.

    • உலக அரங்கில் நாட்டின் மதிப்பை உயர்த்துவதில் டிஜிட்டல் இந்தியாவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • ஒரு மைல்கல் நிகழ்வான ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்றிருக்கும்போது இது மிகவும் பொருத்தமானதாகிறது.

    டெல்லியில் நடந்த 7-வது டிஜிட்டல் இந்தியா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். இதில் டிஜிட்டல் நிர்வாகத்துறையில் சிறந்து விளங்கிய 22 அரசு நிறுவனங்களுக்கு அவர் விருதுகளை வழங்கி கவுரவித்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி, இந்தியா, மென்பொருள் தயாரிப்பு மையமாக மாற முயற்சிக்க வேண்டும் என கூறினார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:- உலக அரங்கில் நாட்டின் மதிப்பை உயர்த்துவதில் டிஜிட்டல் இந்தியாவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு மைல்கல் நிகழ்வான ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்றிருக்கும்போது இது மிகவும் பொருத்தமானதாகிறது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 5ஜி தொழில்நுட்பத்தை இந்தியா தொடங்கி இருக்கிறது.

    இது நிர்வாகத்தையும் மாற்றும். மக்களை மையமாக கொண்ட நிர்வாகத்துக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முக்கிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது, குறிப்பாக தொற்றுநோய்களின் போது, இது உலகின் பிற பகுதிகளுக்கும் பயனளிக்கிறது.

    இந்தியா, மென்பொருள் துறையில் தனது சக்தியை நிரூபித்திருப்பதை தொடர்ந்து, மென்பொருள் தயாரிப்பு மையமாக மாற முயற்சிக்க வேண்டும்.

    நாம் நடைமுறையில் உள்ள கொள்கைகளைப் பயன்படுத்தி, உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதன் மூலம் மென்பொருள் மற்றும் வன்பொருள் தயாரிப்புகளின் உலகளாவிய சக்தியாக நாட்டை நிலைநிறுத்துவதற்கு சூழலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இளம் தொழில்நுட்ப ஆர்வலர்கள் உள்ளூர்மயமாக்கப்பட்ட டிஜிட்டல் தீர்வுகளை உருவாக்க அதைப் பயன்படுத்தும் வகையில், அரசாங்கத் தரவை ஜனநாயகப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.

    கிராமத்தில் உள்ள தொழில்முனைவோர்களிடம் வீடியோ மூலம் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள 3 லட்சம் பொதுச்சேவை மையங்கள் மூலம் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது என கூறினார். #DigitalIndiaKiBaatPMKeSaath #DigitalIndia
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி கிராமத்தில் உள்ள தொழில்முனைவோர்களிடம் வீடியோ போன் மூலம் இன்று கலந்துரையாடினார். அப்போது பேசிய மோடி,

    டிஜிட்டல் இந்தியா திட்டம் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக கிராமங்களை, இளைஞர்களுடன் ஒன்றிணைக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது. இது கடந்த நான்கு ஆண்டுகளாக தனி மனிதனின் தேவையை எளிதாக பெற உதவுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் டிஜிட்டல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பல டிஜிட்டல் இந்தியா பயனாளிகள் தங்கள் அனுபவத்தை தெரிவித்துள்ளனர்.


    இந்த தொழில்நுட்பங்கள் மூலம் ரெயில் டிக்கெட்டுகள் பதிவு செய்யலாம், கட்டணாம் செலுத்தாலம் மற்றும் பல சேவைகளை எளிதாக செய்ய இது உதவுகிறது. இந்த சேவை அனைத்து துறைகளிலும் உள்ளது. அதற்காக பொதுசேவை மையங்களை வலுப்படுத்த வேண்டும்.

    இந்தியாவில் உள்ள 3 லட்சம் பொதுச்சேவை மையங்கள் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் அதிகரித்துள்ளது. தொழில்முனைவோர்கள் அதிகரித்துள்ளனர்.

    கிராமங்களில் இண்டெர்நெட் இணைப்பு அளிக்கப்பட்டதன் மூலம் பள்ளி மாணவர்கள் படிக்க மிகவும் வசதியாக உள்ளதாக பலர் தெரிவித்தனர். மேலும், வயதானவர்கள் தங்கள் பென்ஷன் பிரச்சனைகளை டிஜிட்டல் இந்தியாவின் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் எளிதாக சரிசெய்ய முடியும். பொருள் மற்றும் சேவை தொகையை எளிதாக செலுத்த வர்த்தகர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் பிகிம் செயலியை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். #DigitalIndiaKiBaatPMKeSaath #DigitalIndia

    ×