search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எதிர்க்கட்சிகளை காணாமல் போகச் செய்ய வேண்டும் - தூத்துக்குடியில் அமித் ஷா ஆவேசம்
    X

    எதிர்க்கட்சிகளை காணாமல் போகச் செய்ய வேண்டும் - தூத்துக்குடியில் அமித் ஷா ஆவேசம்

    தூத்துக்குடியில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளை காணாமல் போகச் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #AIADMK #EdappadiPalanisamy #BJP #PMModi #AmitShah
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள சங்கரப்பேரியில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் பிறந்த தமிழகத்தில் இருந்து பேசுவதில் பெருமிதம் அடைகிறேன்.

    பொன் ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 2 தமிழர்களுக்கு மத்திய அமைச்சரவையில் பதவி வழங்கி கவுரவித்துள்ளோம். தமிழகத்திற்கு பா.ஜ.க. அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளோம்.

    பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, விமான தாக்குதல் மூலம் தீவிரவாதிகளை அழித்துள்ளது. காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம், அதை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

    தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வரும். கனிமொழி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள்.

    காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மக்களும் மோடியை பிரதமராக்க வேண்டும் என விரும்புகின்றனர். பா.ஜ.க. கூட்டணி தமிழகத்தில் 30 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு சொல்கிறது. தமிழிசை சவுந்தரராஜனுக்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை என தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #AIADMK #EdappadiPalanisamy #BJP #PMModi #AmitShah
    Next Story
    ×