search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசியலுக்கு வராத ரஜினியை விமர்சிப்பது தேவையற்றது- தம்பிதுரை
    X

    அரசியலுக்கு வராத ரஜினியை விமர்சிப்பது தேவையற்றது- தம்பிதுரை

    அரசியலுக்கு வராத ரஜினியை குறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது என்று கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். #ADMK #ThambiDurai #Rajinikanth
    கரூர்:

    கரூர் தென்னிலையில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரசை தனிமைப்படுத்த அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அப்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது. இப்போது வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என பா.ஜ.க.வை எதிர்த்து. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, சீதாராம் யெச்சூரி சந்தித்து பேசியுள்ளார். பா.ஜ.க. மதவாத கட்சி என்று சொல்கிற இடது சாரிகளும், தி.மு.க.வும் இணைந்துதான் அன்று பா.ஜ.க.வை காப்பாற்றினார்கள். இன்று மோடியை வீழ்த்துவோம் என்று சொல்வது அரசியல்.

    தி.மு.க. இந்தியாவை காப்பாற்றும் என்பது கேள்விக்குறியாகும். இலங்கை தமிழர்களை காப்பாற்ற முடியாதவர்கள் தி.மு.க. இலங்கையில் 1½லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது தி.மு.க. மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது. ஆனால் அவர்களால் இலங்கை தமிழர்களை காப்பாற்ற முடியவில்லை. இப்போது. கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து இந்தியாவை வலிமையாக்குவோம் என்று கூறுவது அரசியலுக்காக, தேர்தலுக்காக, பிரசாரத்துக்காக.


    அ.தி.மு.க. தமிழகத்தை காப்பாற்றவும், இந்தியாவை வலிமையானதாக மாற்றுவதற்காகவும் பாடுபடும். தேர்தல் நேரத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகள் சேர்ந்தால் கூட்டணி குறித்து யோசிப்போம் என துணை முதல்வர் கூறியுள்ளார். அரசியலுக்கு வராத ரஜினியை குறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது என்றார்.

    பின்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர், சிலையை முன்பே திறந்து வைத்து விட்டார்கள். இப்போது சிலையை மாற்றி வைக்கிறார்கள். இதற்கும் அழைப்பு வந்தது. ஆனால் மக்களிடம் மனு பெறும் நிகழ்ச்சி ஏற்கனவே திட்டமிட்டிருந்ததால் இன்று ஜெயலலிதாவின் புதிய சிலை திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்றார். #ADMK #ThambiDurai #Rajinikanth
    Next Story
    ×