search icon
என் மலர்tooltip icon
    • மதுபோதையில் நுழைந்த ஒரு வாலிபர், மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றார்.
    • மூதாட்டியை கொன்று விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

    திருப்பூர் :

    திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 55 வயது மூதாட்டி தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு மூதாட்டி வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் மதுபோதையில் நுழைந்த ஒரு வாலிபர், மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றார். அவர் சத்தம் போடவே மூதாட்டியை கொன்று விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருமுருகன்பூண்டி போலீசார் விசாரித்தனர். விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தூத்துக்குடி ஸ்ரீவை குண்டத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 20) என்பது தெரியவந்தது. தோட்டத்து அருகே உள்ள தறிகுடோனில் லோடுமேனாக வேலை செய்து வந்த அவர் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ரமேசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து சிறையில் அடைத்தனர்.

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம் :

    கரூர் அருகே வேலப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி ரேஷ்மா என்ற நஸ்ரின்(வயது 30). இவர் தனது 8 வயது மகன் சர்வேஷ், 7 வயது மகன் மித்ரன் மற்றும் தாயார் ஆகியோருடன் பல்லடத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வருவதற்காக கரூரிலிருந்து கோவை செல்லும் அரசு பஸ்சில் பயணித்துள்ளார்.அப்போது பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த அறிமுகமில்லாத பெண்கள் வெயிலுக்கு குடிக்குமாறு ஜூஸ் கொடுத்துள்ளனர்.

    நஸ்ரின் ஜூசை குடிக்காமல் தனது 2 குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். பஸ் பல்லடம் அருகே வந்த போது ஜூஸ்சை குடித்த சர்வேஷ் மற்றும் மித்ரன் ஆகிய இரண்டு குழந்தைகளும் மயங்கி விழுந்துள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் தெரிவித்தார். அவர்கள் பல்லடம் பஸ் நிலைய நேரக்காப்பாளர் ராஜாவிடம் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர் பல்லடம் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தார். இதற்குள் பல்லடம் பஸ் நிலையத்திற்கு அந்த பஸ் வந்தது. அதிலிருந்து சிறுவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பஸ்சில் பயணிக்கும் போது முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து, அவர்கள் கொடுக்கும் உணவு பொருட்களையோ, குளிர்பானங்களையோ வாங்கி குடித்தால் என்ன மாதிரியான நிலைமை ஏற்படும் என்பதற்கு இச்சம்பவமே உதாரணம். கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு பெண்கள் கொடுத்த ஜூஸ்சை குடித்து குழந்தைகள் மயக்கமடைந்த சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 29ந் தேதி வசூல் ஆன ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் பைக் ஆர்சி புக் ஆகியவற்றை டேபிளில் வைத்து பூட்டிவிட்டார்.
    • பைனான்சின் கண்ணாடி கதவை மட்டும் பூட்டிவிட்டு சட்டரை பூட்டாமல் வெளியே சென்று விட்டார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள தாசவநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் சுபாஷ். இவர் வெள்ளகோவிலில், பழைய பஸ் நிலையம் அருகே ஆட்டோ பைனான்ஸ் நடத்தி வருகின்றார்.

    இவர் ஜூலை மாதம் 29ந் தேதி வசூல் ஆன ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் பைக் ஆர்சி புக் ஆகியவற்றை டேபிளில் வைத்து பூட்டிவிட்டு, பைனான்சின் கண்ணாடி கதவை மட்டும் பூட்டிவிட்டு சட்டரை பூட்டாமல் வெளியே சென்று விட்டார். பிறகு வந்து பார்த்தபோது கண்ணாடி கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார், உடனே உள்ளே சென்று டேபிளை பார்க்கும்போது டேபிளினுடைய பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.2 லட்சம் மற்றும் ஆர் .சி. புக் காணாமல் போனது தெரிய வந்தது. உடனே அக்கம் பக்கம் விசாரித்து பார்த்தும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை,

    இது குறித்து வெள்ளகோவில் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ராஜமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்த ஈரோடு, எல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் சந்தோஷ் (வயது 24)என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் இந்த திருட்டுக்கு பயன்படுத்திய பைக்கை கைப்பற்றி சந்தோஷை காங்கேயம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமறைவாக இருந்த 2 பேரை வெள்ளகோவில் போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்த போது வெள்ளகோவிலில் ஜூலை மாதம் நடந்த திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட ஈரோடு, கோணவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் மணிகண்டன் (38) என்பது தெரியவந்தது .உடனே மணிகண்டனை கைது செய்து காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவர் மீது திருப்பூர் ஈரோடு, சேலம், மதுரை, விழுப்புரம், கரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட வீடு புகுந்து திருடிய வழக்கு நிலுவையில் உள்ளது.

    நீதிபதி திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட மணிகண்டனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றும் ஒருவரை வெள்ளகோவில் போலீசார் தேடி வருகின்றனர்.

    • வெள்ளகோவில் -மூலனூர் ரோட்டில் இருந்து சைக்கிளில் வெள்ளகோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
    • கிரேன் வாகனம் சைக்கிள் மீது மோதியதில் முத்துசாமி பலத்த காயம் அடைந்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள நாச்சிபாளையம், பச்சப்பாளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி (வயது 65) . இவர் நேற்று மாலை வெள்ளகோவில் -மூலனூர் ரோட்டில் இருந்து சைக்கிளில் வெள்ளகோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    பின்னால் வந்த கிரேன் வாகனம் சைக்கிள் மீது மோதியது. இதில் முத்துசாமி பலத்த காயம் அடைந்தார். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் முத்துசாமியை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முத்துசாமி இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    ×