திருப்பூர் அருேக மூதாட்டியை கற்பழித்து கொல்ல முயன்ற வாலிபர் கைது

மதுபோதையில் நுழைந்த ஒரு வாலிபர், மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றார்.மூதாட்டியை கொன்று விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
கோப்பபுடம்.
கோப்பபுடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 55 வயது மூதாட்டி தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு மூதாட்டி வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் மதுபோதையில் நுழைந்த ஒரு வாலிபர், மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றார். அவர் சத்தம் போடவே மூதாட்டியை கொன்று விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருமுருகன்பூண்டி போலீசார் விசாரித்தனர். விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தூத்துக்குடி ஸ்ரீவை குண்டத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 20) என்பது தெரியவந்தது. தோட்டத்து அருகே உள்ள தறிகுடோனில் லோடுமேனாக வேலை செய்து வந்த அவர் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ரமேசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com