கிரேன் மோதி முதியவர் சாவு

வெள்ளகோவில் -மூலனூர் ரோட்டில் இருந்து சைக்கிளில் வெள்ளகோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார். கிரேன் வாகனம் சைக்கிள் மீது மோதியதில் முத்துசாமி பலத்த காயம் அடைந்தார்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் அருகே உள்ள நாச்சிபாளையம், பச்சப்பாளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி (வயது 65) . இவர் நேற்று மாலை வெள்ளகோவில் -மூலனூர் ரோட்டில் இருந்து சைக்கிளில் வெள்ளகோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

பின்னால் வந்த கிரேன் வாகனம் சைக்கிள் மீது மோதியது. இதில் முத்துசாமி பலத்த காயம் அடைந்தார். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் முத்துசாமியை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முத்துசாமி இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com