search icon
என் மலர்tooltip icon

    வேட்பாளர்கள் - 2021

    பாராளுமன்ற கூட்டம் 15-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்த நிலையில் 2 நாட்கள் முன்னதாக 13-ந் தேதி முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஜனவரி 29 தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. 

    இந்தநிலையில் இந்த கூட்டத்தை 2 நாட்கள் முன்னதாக 13-ந் தேதி முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    குடியரசு துணை தலைவரும், மேல்சபை தலைவருமான வெங்கைய்யா நாயுடுவின் இல்லத்தில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் இது தீர்மானிக்கப்பட்டது. மார்ச் 8-ந் தேதி பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது.
    கடந்த ஆண்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 6.48 கோடியாக உயர்ந்திருப்பதாக நிதி மந்திரி தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம்போல் இந்த ஆண்டும் பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா? என்பதுதான் சாமானிய மக்களின் கேள்வியாக இருந்தது. 

    கடைசியாக, 2014-15ம் ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதற்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளில், வருமான வரி செலுத்துவதில் குறிப்பிட்ட சில மாற்றங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

    கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபோதும், தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் செய்யவில்லை. மாறாக, வரி சதவீதம் குறைக்கப்பட்டது. இது வரி செலுத்துவோருக்கு ஆறுதலாக அமைந்தது.

    இந்த ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டிலும், தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் 75 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கு மட்டும் நிபந்தனைளுடன் வரிக்கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கடந்த ஆண்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 6.48 கோடியாக உயர்ந்திருப்பதாகவும், 2014ஆம் ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 3.31 கோடியாக இருந்தது என்றும் கூறினார். ஆனால், தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் தொடர்பான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது, மாத சம்பளம் பெறுவோருக்கு கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 
    2021-22 நிதியாண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை 6.8% ஆக இருக்கும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    வருமான வரி தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க புதிய குழு அமைக்கப்படும். சில நிபந்தனைகளின் கீழ் மூத்த குடிமக்களுக்கு வருமான வரி ரத்து செய்யப்படும். 

    நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், மூத்த குடிமக்கள் மீதான சுமையை குறைக்கிறோம். மாத வருவாயாக, ஓய்வூதியம் மற்றும் வட்டியை மட்டுமே நம்பியுள்ள 75 வயதுக்கு மேற்பட்டோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

    வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்பும் போது இரட்டை வரி விதிப்பு முறைக்கு ஆளாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இரட்டை வரிவிதிப்பை அகற்றுவதற்கு புதிய விதிகள் கொண்டு வரப்படும்.  

    நாட்டின் நிதி பற்றாக்குறை 2020-2021 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருக்கும் என்றும், 2021-22 ஆண்டில் 6.8 சதவீதமாக ஆக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 

    இவ்வாறு அவர் பேசினார்.
    கொரோனா காலத்தில் 80 கோடி மக்களுக்கு தடையின்றி உணவு வழங்கப்பட்டுள்ளது என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் இன்று 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    * இதுவரை இல்லாத நோய் தொற்று காலத்தில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன்.

    * கொரோனா பொது முடக்கத்தால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. ஆனாலும் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க கொரோனா நிதி உதவியை பிரதமர் வழங்கினார். உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

    * பொது முடக்கத்தை உரிய நேரத்தில் அமல்படுத்தாமல் இருந்திருந்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். பெருமளவு உயிரிழப்புகள் பொது முடக்கத்தால் தடுக்கப்பட்டன. இதற்காக பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    * இந்தியாவில் தடுப்பூசி மருந்துகளை உருவாக்கி பயன்படுத்தி வருகிறோம். இது இந்தியாவின் சாதனை ஆகும். 2 தடுப்பூசி மருந்துகள் விரைவில் வர இருக்கின்றன.

    * கொரோனா காலத்தில் 80 கோடி மக்களுக்கு தடையின்றி உணவு வழங்கப்பட்டுள்ளது.

    * 2021-ம் ஆண்டிலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடரும்.

    சுய சார்பு இந்தியா திட்டம் நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரூ.27 லட்சம் கோடிக்கு ஊக்க திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    * சுயசார்பு திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லும் அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெறும்.

    * பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்தியா தயார் நிலையில் உள்ளது. பிரதமரின் புதிய சுயசார்பு ஆரோக்கிய திட்டம் ரூ.64 ஆயிரத்து 180 கோடியில் தொடங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி அடைந்த வெற்றி, நமது வலிமையை காட்டுகிறது என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பாராளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்து பேசி வருகிறார். இந்த பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட் ஆகும். பட்ஜெட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, உடனே இணையத்தில் வெளியிடப்படுகிறது.

    பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு டெல்லியில் மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று காலை நடந்தது. இதில், பாராளுமன்றத்தில் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வதற்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

    நிர்மலா சீதாராமன் பேசும்பொழுது, இதுவரை இல்லாத வகையில், ஒரு நாட்டை அல்லது நாட்டின் ஒரு பகுதியை பேரிடர் தாக்கிய காலத்தில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தயாராகி உள்ளது. ஆனால், கொரோனா பாதிப்புகளில் இருந்து நாம் உறுதியுடன் போராடி மீண்டு வந்துள்ளோம் என்று மத்திய நிதி மந்திரி கூறியுள்ளார்.

    தொடர்ந்து அவர் பேசும்பொழுது, கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு நிவாரண திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்தியா நம்பிக்கை நாடாக திகழ்கிறது.

    ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி அடைந்த வெற்றி, நமது வலிமையை காட்டுகிறது. உலக நாடுகளால் நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா பார்க்கப்படுகிறது என அவர் பேசினார்.

    * மூன்று ஆத்ம நிர்பார் பாரத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

    * பொதுமக்களுக்கு 27.1 லட்சம் கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

    * பெரும் தொற்று ஏற்படும் என நாம் கற்பனை செய்து பார்க்கவில்லை.

    * கொரோனா தடுப்பூசி கிடைக்க பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு நன்றி என அவர் தெரிவித்து உள்ளார்.
    உஜ்வாலா திட்டத்தின் கீழ் மேலும் ஒரு கோடி பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் இன்று 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    2022-ம் ஆண்டுக்குள் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு விற்கப்படும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் மேலும் ஒரு கோடி பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்.

    100 மாவட்டங்களில் குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்படும்.

    வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை தொடரும். விவசாயக் கடன் இலக்கு இந்த நிதியாண்டில் ரூ.16.5 லட்சம் கோடியாக உயர்த்தப்படுகிறது. வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 1.5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. நெல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மொத்த தொகை 2020-21ல் ரூ .1.72 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 5 முக்கிய இடங்களில் மீன்பிடி மையங்கள் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    தமிழகத்தில் சாலைப் பணிகளுக்காக மத்திய பட்ஜெட்டில் 1.03 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் இன்று 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    * தமிழகத்தில் சாலைப் பணிகளுக்கு 1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு. 3,500 கி.மீ தொலைவில் சாலைகள் அமைக்கப்படும்.

    * சென்னை மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்திற்கு ரூ.63246 கோடி ஒதுக்கீடு

    * ரெயில்வே துறை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.1.10 லட்சம் கோடி
    * காற்று மாசை கட்டுப்படுத்த 22.17 கோடி
    * பொது போக்குவரத்து பேருந்து வசதிகளை மேம்படுத்த ரூ.18 ஆயிரம் கோடி
    * மின் துறைக்கு ரூ. 3.05 லட்சம் கோடி ஒதுக்கீடு

    * புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முகமைக்கு ரூ.1500 கோடி 
    * காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் திட்டப்பணிகளுக்கு ரூ.2217 கோடி ஒதுக்கீடு
    * சூரிய ஒளி மின் சக்தி உற்பத்தி கழகத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு
    * பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதன திட்டங்களுக்கு ரூ.20000 கோடி ஒதுக்கீடு.
    கொரோனாவைக் கட்டுப்படுத்த மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் இன்று 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    6 தூண்கள் என்ற அடிப்படையில் மத்திய பட்ஜெட் அமைக்கப்பட்டுள்ளது. சுயசார்பு இந்தியா திட்டத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளன. சுகாதார கட்டமைப்புக்கு நிதி ஒதுக்கீடு இந்த பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுயசார்பு சுகாதார திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.64180 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

    தற்காப்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை ஆகிய 3 அம்சங்களில் சுகாதாரத்துறை கவனம் செலுத்துகிறது. இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்.

    கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும். கொரோனாவைக் கட்டுப்படுத்த மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.

    கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.35000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற தூய்மை திட்டத்திற்கு 1.41 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    பாராளுமன்ற மக்களவையில் 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 29ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்ற வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதம் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்ப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். இது அவர் தாக்கல் செய்த 3வது பட்ஜெட் ஆகும்.

    முன்னதாக, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இணை மந்திரி அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறை குழுவினர் இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அவரிடம் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக எடுத்துரைத்தனர். அதன்பின்னர் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இணை மந்திரி அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் பாராளுமன்றத்திற்கு புறப்பட்டனர். முதலில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இந்தியாவில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, உடனே இணையத்தில் வெளியிடப்படுகிறது. 

    கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், நாடு இதுவரை காணாத நீண்ட ஊரடங்கு, பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு, தொழில், வர்த்தக நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு, பொருளாதார பின்னடைவு மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில், நிலையான பொருளாதார மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் கொள்கை அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

    குறிப்பாக வழக்கம்போல், இந்த ஆண்டும் பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா? என்பதுதான் சாமானிய மக்களின் கேள்வியாக இருக்கிறது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகுமா? என்று தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

    கடைசியாக, 2014-15ம் ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதற்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளில், வருமான வரி செலுத்துவதில் குறிப்பிட்ட சில மாற்றங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 29ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்ற வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதம் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்ப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக பட்ஜெட் அடங்கிய பையுடன் நிதித்துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இணை மந்திரி அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அப்போது பட்ஜெட் தாக்கல் தொடர்பாக ஜனாதிபதியிடம் நிதி மந்திரி எடுத்துரைத்தார். அதன்பின்னர் அனைவரும் அங்கிருந்து பாராளுமன்றத்திற்கு புறப்பட்டு வந்தனர். 
    நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 29ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்ற வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதம் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்ப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது. அப்போது, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்கிறார். 

    மத்திய நிதி மந்திரியாக நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் இதுவாகும். 

    வழக்கமாக பெட்டியினுள் வைத்து பட்ஜெட் உரை பேப்பர்கள் கொண்டுவரப்படும். இந்த நடைமுறையை மாற்றி கடந்த முறை சிவப்பு நிற துணியால் செய்யப்பட்ட பையில் நிதியமைச்சர் நிர்மலா பட்ஜெட் பேப்பர்களை எடுத்து வந்தார். இந்த தடவை முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்கிறார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் அறிமுகப்படுத்தப்படுகிறது. காகிதத்தில் அச்சிடப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. 

    பட்ஜெட் தொடர்பான அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து பட்ஜெட் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசானது ஒரு இடைக்கால பட்ஜெட்டுடன் சேர்த்து தாக்கல் செய்யும் ஒன்பதாவது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
    மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், நாடு இதுவரை காணாத நீண்ட ஊரடங்கு, பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு, தொழில், வர்த்தக நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு, பொருளாதார பின்னடைவு மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.

    இந்த தருணத்தில் 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார்.

    இந்த பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட் ஆகும். பட்ஜெட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, உடனே இணையத்தில் வெளியிடப்படுகிறது.

    இந்த பட்ஜெட் தொடர்பாக எழுந்துள்ள கேள்விகள் இவை:-

    * கொரோனாவால் பாதிக்கப்பட்ட சாமானிய மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமா?

    * பொருளாதார சரிவை மீட்டெடுக்கிற வகையில் அரசு திட்ட செலவினங்களை அதிகரிக்கும் வகையில் சுகாதாரம், உள்கட்டமைப்பு, ராணுவம் போன்றவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா?

    * வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில், கிராமப்புறங்களை மேம்படுத்தும் வகையில் செலவினங்கள் அதிகரிக்கப்படுமா?

    * அன்னிய நேரடி முதலீடுகளை இன்னும் அதிகளவில் கவரக்கூடிய வகையில் விதிமுறைகள் எளிதாகுமா?

    * சராசரி வரி செலுத்துவோர் கைகளில் பணப்புழக்கத்துக்கு வழி பிறக்குமா?

    * வருமான வரியில் சலுகைகள் அறிவிக்கப்படுமா? வரி விகிதங்களில் மாற்றம் வருமா?

    * கொரோனா வைரஸ் பெயரால் கூடுதல் வரி (செஸ்) விதிக்காமல் இருப்பார்களா?

    இப்படி கேள்விகள் நீளுகின்றன.

    பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் அரசு முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கொரோனா வைரஸ் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி கண்டுபிடித்து, அவற்றை போடுகிற சூழல், ஒரு சிறப்பான எதிர்காலத்துக்கு நம்பிக்கை அளிக்கிறது.

    இந்த தருணத்தில் நிலையான பொருளாதார மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் கொள்கை அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

    மத்திய பட்ஜெட் பற்றி அக்குட் தர நிர்ணயம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கருத்து தெரிவிக்கையில், “உள்கட்டமைப்பில் பொது மற்றும் தனியார் முதலீடுகள் மூலம் குறிப்பிடத்தக்க உந்துதலை கொடுக்க வேண்டும். தொழில்துறை, சேவைகள், விவசாயத்துறை ஆகியவற்றில் பெரிய அளவிலான வெளிநாட்டு முதலீடுகளுக்கு உதவ வேண்டும். வரி வருவாயில் சமரசம் செய்து கொள்ளாமல், தனியார் நுகர்வுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். சுகாதாரம் மற்றும் கல்வி துறையில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும” என கூறியது.

    பொருளாதார ஆராய்ச்சி பகுப்பாய்வாளர் கார்கிராவ், “வரவிருக்கும் பட்ஜெட்டின் எதிர்பார்ப்புகள் முக்கியமாக உள்கட்டமைப்பு மேம்பாடு, முதியோருக்கு சலுகைகள், நுகர்வோர் பயன்பாடு அதிகரிக்க திட்டம், உள்நாட்டு உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவித்தார்.
    ×