search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்ஜெட்டுடன் ஜனாதிபதியை சந்தித்த நிதி மந்திரி
    X
    பட்ஜெட்டுடன் ஜனாதிபதியை சந்தித்த நிதி மந்திரி

    பட்ஜெட் தாக்கலுக்கு முன் ஜனாதிபதியை சந்தித்தார் நிதி மந்திரி

    மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 29ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்ற வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதம் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்ப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக பட்ஜெட் அடங்கிய பையுடன் நிதித்துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இணை மந்திரி அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அப்போது பட்ஜெட் தாக்கல் தொடர்பாக ஜனாதிபதியிடம் நிதி மந்திரி எடுத்துரைத்தார். அதன்பின்னர் அனைவரும் அங்கிருந்து பாராளுமன்றத்திற்கு புறப்பட்டு வந்தனர். 
    Next Story
    ×