search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "opening ceremony"

    • நிகழ்ச்சிக்கு செஞ்சி ரோட்டரி சங்கத் தலைவர் பாஸ்கர் செய லாளர் மைக்கேல் ஜெரால்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • பேரூராட்சி கவுன்சிலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    செஞ்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் செஞ்சி ரோட்டரி சங்கம் மற்றும் 9-வதுவார்டு கவுன்சிலர் ஆகியோர் பங்களிப்புடன் ரூ15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடம் திறப்பு விழா நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறுபான்மை யினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு புதிய கழிவறை கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு செஞ்சி ரோட்டரி சங்கத் தலைவர் பாஸ்கர் செய லாளர் மைக்கேல் ஜெரால்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர்கள் செஞ்சி விஜய குமார் வல்லம் அமுதா ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் அரங்கஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன் , பேரூராட்சி உதவி செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் கார்த்திக், பேரூ ராட்சி துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல் மணி மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.5 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை, தரைமட்ட பாலம், படித்துறை கட்டப்பட்டுள்ளன.
    • நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலூர் யாதவர் வடக்கு, தெற்கு தெருக்களில் ஊராட்சி பொது நிதியில் சுமார் ரூ.5 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை, தரைமட்ட பாலம், படித் துறை கட்டப்பட்டுள்ளன. அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    இதில் ஊராட்சி மன்ற தலைவி அனுராதா ரவிமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய சாலை மற்றும் பாலங்களை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் பலவேசம் இசக்கிபாண்டி, மேலூர் தி.மு.க. கிளைச் செயலாளர் சுப்பிர மணி, அரசு ஒப்பந்த தாரர் மணி கண்டன், தீபம் கோபால், மணி, முருகேசன், ரங்கன் பண்ணையார், பரம சிவன், நம்பி, போல்ராஜ், வீர லட்சுமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • திறப்பு விழா நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது.
    • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் திட்ட விளக்க உரையாற்றுகிறார்.

    திருப்பூர் :

    திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்குகிறார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலா–ளர் ககன் தீப் சிங்பேடி திட்ட விளக்க உரையாற்றுகிறார்.

    புதிய கட்டிடத்தை திறந்து மருத்துவ சேவையை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.

    இதில் சுப்பராயன் எம்.பி., க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    • ரூ.3 கோடியே 76 லட்சத்து 49 ஆயிரத்து 673 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்
    • அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி பங்கேற்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த வசூர், பள்ளேரி மற்றும் கொண்டகுப்பம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி வசூர் கிராமத்தில் நேற்று சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.எஸ்.ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்து பேசினார்.

    முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டு 247 பயனாளிகள் மற்றும் 11 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3 கோடியே 76 லட்சத்து 49 ஆயிரத்து 673 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    இதில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு காண்பதற்காக இது போன்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம்கள் நடத்தப்படுகிறது.

    என்னுடைய தொகுதியை பொறுத்த வரையில் என்னால் இயன்ற பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன்.

    காட்பாடி தொகுதியில் பொன்னைஆற்றில் தற்போது ரூ.40 கோடி மதிப்பில், உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோன்று ரூ.18 கோடி மதிப்பில் செக் டேம் கட்டி வருகின்றோம்.

    இதனால் மழைக்கா லங்களில் வரும் தண்ணீர் அங்கேயே தேங்கி நிற்கும். அதனால் குடிநீர் பயன்பாட்டிற்கு தட்டுப்பாடு வராது. மேலும் மேல்பாடிக்கு செல்லும் பாலமும் கட்டப்பட்டு வருகிறது.

    ஆஸ்பத்திரி

    கடந்த தேர்தலின் போது எனக்கு வாக்களித்தால் ஒரு மருத்துவமனையினை கொண்டு வருவேன் என்று சொல்லியிருந்தேன். அதனை எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் வகையில் சேர்க்காடு கூட்டுரோடில் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று இங்குள்ள பிள்ளைகள் படிக்க வேண்டுமென்றால் வேலூர், வாலாஜா, ஆற்காட்டிற்கோ செல்ல வேண்டும். அந்த நிலை மாறவேண்டும் என்பதற்காக சேர்க்காடு கூட்டுரோட்டில் ஒரு கலைக் கல்லூரியும் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டின் இறுதிக்குள் மேற்குறிப்பிட்ட அனைத்துப் திட்டப் பணிகளும் திறக்கப்படும்.

    அதேபோன்று காவிரி கூட்டு குடிநிர் திட்டத்தினையும் இப்பகுதிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐல் ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு கொடுக்கப்படுகிறது. அதேபோன்று காட்பாடி தொகுதியில் சிப்காட் ஒன்றையும் ஆரம்பிக்க உள்ளோம்.

    அதில் காட்பாடி தொகுதி சுற்றுவட்டாரத்திலுள்ள மக்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும். விரைவில் முதல்-அமைச்சரால் சிப்காட் தொடங்கப்படும். இதுபோன்று மக்களின் கோரிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

    விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களை கொண்டு வந்து மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து வருகின்றார்கள்.

    குறிப்பாக மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், இல்லம் தேடிக் கல்வி. காலை உணவு, புதுமைப்பெண் இது போன்ற மகத்தான திட்டங்களை செயல்படுத்தியுள்ள காரணத்தினால் பெரும்பாலான பொதுமக்கள், மகளிர்கள், மாணவ மாணவியர்கள் பயனடைந்து வருகின்றனர்.

    மக்களின் கோரிக்கைகளை மனுவாக வழங்கிட ஏதுவாக முதல்வரின் முகவரி என்ற திட்டத்தினை துவக்கி அதில் பெறப்படும் மனுக்களுக்கு தகுதியின் அடிப்படையில் 100 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழு தலைவர் வெங்க ட்ரமணன், துணை தலைவர் ராதா கிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம். காட்பாடி ஒன்றியக் குழுத் தலைவர் வேல்முருகன், வாலாஜா தாசில்தார் நடராஜன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் சாந்தி, புஷ்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை அருகே இலவச கணினி மையம் திறப்பு விழா நடந்தது.
    • கிளாசிக் பவுண்டேசன் சார்பில் சிவராமன்செட்டியார்-தெய்வானைஆச்சி நினைவாக தொடங்கப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி அருகே உள்ள பி.அழகாபுரி கிராமத்தில் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச கணினி மையம் திறப்பு விழா நடந்தது. கிளாசிக் பவுண்டேசன் சார்பில் சிவராமன்செட்டியார்-தெய்வானைஆச்சி நினைவாக தொடங்கப்பட்ட இந்த கணினி மையம் திறப்பு விழாவிற்கு கிளாசிக் ஆதப்பன் தலைமை தாங்கினார்.

    ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.எல்.மணிவாசகம், மீனாட்சிசுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளித்தலைவர் வெள்ளையன்செட்டியார், ஆர்.எம்.மெட்ரிக்பள்ளி தாளாளர் எஸ்.எம்.பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கணினி மையத்தை சிவ.ராமநாதன் திறந்து வைத்தார். ஞானம் ஆதப்பன், மீனாள் ராமநாதன், ஐஸ்வர்யா, இந்துமதிபாலா ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

    பேராசிரியர்கள் சொக்கலிங்கம் நா.சுப்பிரமணியன், தேனப்பன், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் அழகுமணிகண்டன், சுரேஷ், காசிநகர சத்திர துணைத் தலைவர் மாணிக்கம்செட்டியார், ஏ.எல்.வெங்கடாசலம், முருகப்பன் ஆகியோர் பேசினர்.

    இந்த மையத்தில் கணினி பயில்வதுடன் சான்றிதழ் படிப்புகளான டி.ஓ.ஏ., சி.ஓ.ஏ, டி.சி.ஏ., டி.ஓ.எம்.டேலி, இ.ஆர்.பி, ஜி.எஸ்.டி, போன்றவற்றிற்கு குறைந்த கட்டணத்தில் பயிற்சியளிக்கப்படுகிறது. முன்னதாக ஏ.எல்.ஞானவேல் வரவேற்றார். முடிவில் கருப்பையா ராமநாதன் நன்றி கூறினார்.

    • விழாவிற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.
    • யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் புதிய ரேசன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள வீராணம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். பழனிநாடார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டு புதிய ரேசன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இதில் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன், வீராணம் ஒன்றிய குழு உறுப்பினர் ஷேக்முகமது, வீராணம் கிளை செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், அமானுல்லா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரையில் பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா நாளை நடக்கிறது.
    • பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தரமான முறையில் கிடைக்கும்.



    பாலகுருசாமி

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகர் வர்த்தக சங்க தலைவரும், சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் பாலகுருசாமி. இவர் மானாமதுரை புதிய பஸ் நிலையம் அருகில் கீழமேல்குடி ரோட்டில் பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் அமைத்துள்ளார்.

    இதன் திறப்பு விழா நாளை (9-ந்தேதி) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தமிழ்நாடு வர்த்தக சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா குத்து விளக்கேற்றி திறந்து வைக்கிறார்.

    இதில் வர்த்தக சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், மானாமதுரை நகர் வர்த்தகர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை வர்த்தக சங்க தலைவர், சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் பாலகுருசாமி செய்து வருகிறார்.

    புதிதாக திறக்கப்பட உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தரமான முறையில் கிடைக்கும்.

    • அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • பாலசுப்பிரமணியம், மற்றும் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மன்றம் துவக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். பல்லடம் தமிழ் சங்கத்தலைவர் ராம். கண்ணையன், அறம் அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி துணை முதல்வர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். போதை ஒழிப்பு மன்றத்தை துவக்கி வைத்து பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் பேசுகையில்:-

    தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்பு குறித்து அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.வரும் காலத்தில் போதைப் பொருள் இல்லா தமிழகமாக மாற்ற தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க இன்றைய மாணவர்கள் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். இந்த போதைப்பொருள் தடுப்பு குறித்து காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அனைவரும் கடைப்பிடித்து போதைப் பொருள் இல்லா தமிழகமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் அண்ணா துரை, பாலசுப்பிரமணியம், தமிழ்ச்சங்க செயலாளர் கருப்புசாமி, மற்றும் சுரேஷ், கல்லூரி பேராசிரியர் பாலசுப்பிரமணியம், மற்றும் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜெய பாரத் ஹோம்ஸ் சார்பில் டைட்டன் சிட்டி தொடக்க விழாவில் நடிகை ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி மதுரையில் இன்று மாலை நடக்கிறது
    • தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

    மதுரை

    ஜெயபாரத் ஹோம்ஸ் நிறுவனத்தின் சார்பில் மதுரை சூர்யா நகரில் டைட்டன் சிட்டி வீடு கட்டும் திட்டத்திற்கான தொடக்க விழா இன்று (5-ந் தேதி) மாலை நடக்கிறது. இதில் நடிகை ஆண்ட்ரியா பங்கேற்கிறார்.

    இதுகுறித்து ஜெயபாரத் ஹோம்ஸ் நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார் கூறியதாவது:-

    கட்டுமானத்துறையில் 27 வருடங்களாக உள்ளோம். 3-வது தலைமுறையாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். மதுரை சூர்யா நகர் பகுதியில் 11.5 ஏக்கரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்ட உள்ளது.

    இதற்கான தொடக்க விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. ஜெயபாரத் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் பி.ஜெயகுமார் தலைமை தாங்குகிறார். நிர்வாகி ஜெ.நிர்மலாதேவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

    தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எஸ்.எஸ்.எஸ். பார்க் தங்கும் விடுதி திறப்பு விழா நடந்தது.
    • கோவிலூர் எஸ்.எஸ்.சுப்பிரணியன்,பொறியாளர் முருகானந்தம் குடும்பத்தினர் திறப்பு விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா கோவிலூரில் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய எஸ்.எஸ்.எஸ். பார்க் தங்கும் விடுதி திறப்பு விழா குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அருளாசியுடன் நடந்தது.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கற்பகம் இளங்கோ, காரைக்குடி அ.தி.மு.க நகர செயலாளர் மெய்யப்பன்,தொழிலதிபர் சத்குரு தேவன் முன்னிலை வகித்தனர். கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி சுப்பிரமணியன் வரவேற்றார். தொழிபதிபர் படிக்காசு திறந்து வைத்தார்.

    சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்நாதன், மாங்குடி, ஆடிட்டர் ராஜகோபால், மாநில நல்லாசிரியர் வீரபாண்டியன், சென்னை ஏ.வி.எம். ஸ்டுடியோ மேலாளர் விஸ்வநாதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். லிப்ட் வசதியை முன்னாள் அமைச்சர் பாஸ்கரனும், ஜெனரேட்டரை ஐ.ஓ.பி. வங்கி மேலாளர் மனோஜ்குமாரும் தொடங்கி வைத்தனர்.

    ஆவின் சேர்மன் அசோகன், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி,ஒன்றிய செயலாளர்கள் ஜெயகுணசேகரன், சேவியர்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் ஒன்றிய செயலாளர் கோவிலூர் எஸ்.எஸ்.சுப்பிரணியன்,பொறியாளர் முருகானந்தம் குடும்பத்தினர் திறப்பு விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • காரைக்குடியில் சூரியா ஜூவல்லரி மார்ட் திறப்பு விழா நாளை நடக்கிறது
    • முதல் விற்பனையை அரிமா முன்னாள் மாவட்ட ஆளுநர்- தொழில்அதிபர் தங்கராஜ் தொடங்கி வைக்கிறார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் நருவிழி அம்பாள் மாடர்ன் ரைஸ்மில் உரிமை யாளரும், வித்யாகிரி கல்வி குழும தலைவருமான தொழில் அதிபர் லயன்கிருஷ்ணன் குடும்பத்தினரின் புதிய நிறுவனமான ''சூரியா ஜூவல்லரி மார்ட்'' காரைக்குடியில்

    நாளை (26-ந்தேதி) திறக்கப்படுகிறது.

    காரைக்குடி கல்லூரி சாலையில் உள்ள நருவிழி காம்ப்ளக்சில் நாளை திறப்பு விழா நடக்கிறது. இங்கு தங்கம், வைரம், வெள்ளி நகைகள் விற்பனை செய்யப் படுகிறது.

    தங்க நகை பிரிவை தொழில்அதிபர் படிக்காசும், வைரம் மற்றும் வெள்ளி விற்பனை பிரிவை சிங்கப்பூர் தொழில்அதிபர் செல்லப்பனும் திறந்து வைக்கிறார்கள். முதல் விற்பனையை அரிமா முன்னாள் மாவட்ட ஆளுநர்- தொழில்அதிபர் தங்கராஜ் தொடங்கி வைக்கிறார்.

    இதில் காரைக்குடி மற்றும் சுற்று வட்டார தொழில்அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், அரிமா சங்க நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்.திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை லயன்.கிருஷ்ணன் மற்றும் லயன் அருணகிரி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

    • பாலமுருகன்,துணை முதல்வர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • விழா நிறைவாக துணை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மகாலட்சுமி நன்றி கூறினார்.

    பல்லடம்:

    பல்லடம் மங்கலம் ரோட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்ட குழு துவக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் முனியன் தலைமை வகித்தார். பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித்திட்ட அதிகாரிகள் அண்ணாதுரை, பாலமுருகன்,துணை முதல்வர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் பேராசிரியர் பாலமுருகன் வரவேற்றார்.

    இதில் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் பேசுகையில், தமிழகத்தில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதில் நீங்களும் இணைவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. சிக்கண்ணா கல்லூரி இன்று பசுமையாய் காட்சியளிப்பதற்கு முழு காரணம் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களே. நாட்டு நலப் பணித்திட்டத்தில் இணைந்த நீங்கள் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து, சமுதாயத்தில் முன்மாதிரியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழா நிறைவாக துணை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மகாலட்சுமி நன்றி கூறினார்.

    ×