search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "toilet facility"

    • பாலமேடு பேரூராட்சியில் ரூ.29.60 லட்சம் மதிப்பீட்டில் நவீன பூங்கா, கழிப்பறை வசதியை வெங்கடேசன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
    • இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டியராஜன் தலைமை தாங்கினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி பகுதியில் உள்ள மஞ்சமலை நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சமுதாய கழிப்பறை வசதி மற்றும் பேரூராட்சி அருகே உள்ள வேளார் தெருவில் ரூ.14.60 லட்சம் மதிப்பீட்டில் நவீன சிறுவர் பூங்கா அமைக்கப் பட்டு உள்ளது.

    இதனை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டியராஜன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராமராஜ், செயல் அலுவலர் தேவி, திமுக மாவட்ட அவை தலைவர் பால சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நகர் செயலாளர்கள் மனோகரவேல் பாண்டியன், ரகுபதி, அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்த ராஜ், துணை சேர்மன் சுவாமிநாதன், ஒன்றிய சேர்மன் பஞ்சு அழகு, ஒன்றிய துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், விளையாட்டு மேம்பாட்டு அணி பிரதாப், இளைஞரணி சந்தனகருப்பு, அணி அமைப்பாளர்கள் யோகேஷ், தவசதிஷ், ராகுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சிக்கு செஞ்சி ரோட்டரி சங்கத் தலைவர் பாஸ்கர் செய லாளர் மைக்கேல் ஜெரால்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • பேரூராட்சி கவுன்சிலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    செஞ்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் செஞ்சி ரோட்டரி சங்கம் மற்றும் 9-வதுவார்டு கவுன்சிலர் ஆகியோர் பங்களிப்புடன் ரூ15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடம் திறப்பு விழா நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறுபான்மை யினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு புதிய கழிவறை கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு செஞ்சி ரோட்டரி சங்கத் தலைவர் பாஸ்கர் செய லாளர் மைக்கேல் ஜெரால்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர்கள் செஞ்சி விஜய குமார் வல்லம் அமுதா ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் அரங்கஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன் , பேரூராட்சி உதவி செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் கார்த்திக், பேரூ ராட்சி துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல் மணி மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.
    • அதனடிப்படையில் இன்று ஏர்வாடி பள்ளிக்கூட கழிப்பிட வசதி கட்டிட அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிட பணியை தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.

    அதனடிப்படையில் இன்று ஏர்வாடி பள்ளிக்கூட கழிப்பிட வசதி கட்டிட அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிட பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நாங்குநேரி தொகுதி பொறுப்பா ளர் அழகிய நம்பி, மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, ஏர்வாடி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ரீமா பைசல், மாவட்ட பொதுச்செயலாளர் நம்பிதுரை, ஏர்வாடி தி.மு.க. செயலாளர் சித்திக், ஏர்வாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியைகள், ஏர்வாடி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    நாட்டிலேயே முதல்முறையாக ‘பயோ டாய்லெட்’ வசதியுடன் போலீசாருக்கு நிழற்குடை கோவையில் நிறுவப்பட்டுள்ளது. #Biotoilet
    கோவை:

    போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபடும் போலீசார் ரோட்டின் நடுவே காலை முதல் இரவு வரை பணியாற்ற வேண்டும்.

    அப்போது கழிவறைக்கு செல்ல வேண்டும் என்றால் அருகே உள்ள நிறுவனங்கள் போன்றவற்றுக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக பெண் போலீசார் அதிகமாக சிரமப்படுகிறார்கள்.

    இதுபோன்ற சிரமங்களை தவிர்க்க கோவையில் போக்குவரத்து போலீசாருக்கு ‘பயோ டாய்லெட்’ வசதியுடன் நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது. அவினாசி சாலையில் அரசு மருத்துவ கல்லூரி சிக்னலில் இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    நாட்டிலேயே முதல்முறையாக ‘பயோ டாய்லெட்’ வசதியுடன் போலீசாருக்கு நிழற்குடை கோவையில் நிறுவப்பட்டுள்ளது. டைடல் பார்க்கில் உள்ள சில நிறுவனங்கள் ஒன்றிணைந்து இதை வடிவமைத்து தந்துள்ளனர். இதன் மொத்த செலவு ரூ.1.25 லட்சம் ஆகும்.

    வாகன புகையில் இருந்து போலீசார் தங்களை காத்துக் கொள்ளும் வகையில் கண்ணாடி அறையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி அறையில் அமர்ந்து கொண்டு போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபடலாம். இரவு நேரங்களிலும் லைட் உள்ளிட்ட வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் இதே போன்று நிழற்குடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  #Biotoilet
    தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் படுக்கை வசதியுடன் கூடிய குளு,குளு ஏ.சி. பஸ்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் முழு மூச்சாக நடந்து வருகின்றன. #DeluxeBus
    கரூர்:

    தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரவை விட செலவு கூடுதலாக உள்ளதால் அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. சேவை நோக்குடன் இயக்கப்படுவதால் நஷ்டம் தவிர்க்க முடியாததாக இருப்பதாக அரசு வட்டாரங்கள் உறுதிபட தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே தனியாருக்கு இணையாக நவீனங்கள் புகுத்தப்படாமல் இருப்பதும் போக்குவரத்து கழக நஷ்டத்துக்கு காரணியாக உள்ளது. தனியார் மூலம் படுக்கை வசதியுடன் குளு, குளு ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அரசு போக்குவரத்து கழகம் மூலம் படுக்கை வசதியுடன் கூடிய பஸ் இயக்கப்பட்டு பின்னர் அது நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மீண்டும் தற்போது படுக்கை வசதியுடன் கூடிய குளு,குளு ஏ.சி. பஸ்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் முழு மூச்சாக நடந்து வருகின்றன. தமிழகத்தில் 2,000 புதிய பஸ்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன.

    அதில் 100 பஸ்கள் படுக்கை வசதியுடன் 3 வகையாக தயாராகின்றன. முழுக்க முழுக்க ஏ.சி. மற்றும் படுக்கை வசதியுடன் ஒரு வகையும், கீழே சாய்வாக உட்காரும் சீட்டுகள், மேலே படுக்கை வசதியுடன் இன்னொரு வகையும், படுக்கை வசதி மற்றும் கழிப்பறை வசதியுடன் மற்றொரு வகையும் என 100 பஸ்கள் விதவிதமாக தயாராகின்றன. இவை அனைத்தும் நவீன முறையில் வடிவமைக்கப்படுகிறது.

    பெங்களூரில் உள்ள தனியார் பஸ் பாடிகட்டும் நிறுவனம் மூலம் படுக்கை வசதியுடன் கூடிய குளு,குளு ஏ.சி. பஸ்கள் பாடி கட்டப்பட்டு வருகின்றன. புதிதாக பாடி கட்டப்பட்ட இந்த வகை பஸ் ஒன்று சமீபத்தில் கரூர் மண்மங்கலம் போக்குவரத் துக்கழக பணிமனைக்கு வரவழைக்கப்பட்டது. அந்த பஸ்சினை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பஸ்கள் எப்போது இயக்கப்படும் என அமைச்சரிடம் மாலை மலர் நிருபர் கேட்டபோது கூறியதாவது:-


    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணப்படி அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நவீனமாகிறது. ஜெயலலிதா அறிவித்த 2,000 பஸ்களும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் தயாராகின்றன. சாதாரண பஸ்களும் மழை பெய்தால் ஒழுகாது. ரூப் ஒரே மோல்டிங்கில் வடிவமைக்கப்படுகிறது. அதேபோன்று தீ விபத்து ஏற்பட்டால் பயணிகள் இருக்கையில் தீப்பிடிக்காமல் இருக்கும் வகையில் சீட்டுகள் அமைக்கப்படுகிறது. அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் இருக்கும் சீட்டுகளின் சாய்வு முன்பைவிட அதிகப்படுத்தப்படுகிறது. இதனால் பயணிகள் இன்னும் சொகுசாக தூங்கியபடி பயணிக்கலாம்.

    படுக்கை வசதி, ஏ.சி. வசதியுடன் தயாராகும் பஸ்கள், சாதாரண பஸ்கள் அனைத்தும் இன்னும் 3 மாதங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அதுவும் நிச்சயம் நிறைவேறும். தனியாருக்கு இணையாக இல்லாமல் அதையும் மிஞ்சும் வகையில் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #MRVijayabaskar #DeluxeBus
    ×