ஏர்வாடி அரசு பள்ளியில் கழிப்பிட வசதி- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.அதனடிப்படையில் இன்று ஏர்வாடி பள்ளிக்கூட கழிப்பிட வசதி கட்டிட அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிட பணியை தொடங்கி வைத்தார்.
ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டிய காட்சி.
ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டிய காட்சி.
Published on

நெல்லை:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.

அதனடிப்படையில் இன்று ஏர்வாடி பள்ளிக்கூட கழிப்பிட வசதி கட்டிட அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிட பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நாங்குநேரி தொகுதி பொறுப்பா ளர் அழகிய நம்பி, மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, ஏர்வாடி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ரீமா பைசல், மாவட்ட பொதுச்செயலாளர் நம்பிதுரை, ஏர்வாடி தி.மு.க. செயலாளர் சித்திக், ஏர்வாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியைகள், ஏர்வாடி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com