search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிப்பிட வசதி"

    • பொதுமக்கள் பலர் தங்க ளுக்கு தேவையான புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று படித்து விட்டு கொண்டு வந்து வைப்பதும் பழக்கமாக வைத்துள்ளனர்
    • பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனித்தனி கழிப்பறை வசதி செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும்

    அந்தியூர்

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே சிவசக்தி நகர் பகுதியில் நூலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நூலகத்துக்கு வெள்ளையம்பாளையம் புதுப்பாளையம் அண்ணா மடுவு, காட்டூர், கந்தம்பா ளையம், பள்ளிய பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமா னோர் வந்து புத்தகங்களையும், பொழுதுபோக்கு கதைகளையும் படித்து செல்கிறார்கள்.

    இங்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என வாசகர்கள் ஏராளமானோர் தினமும் வந்து அங்கேயே அமர்ந்து படித்து செல்கிறார்கள். மேலும் பொதுமக்கள் பலர் தங்க ளுக்கு தேவையான புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று படித்து விட்டு கொண்டு வந்து வைப்பதும் பழக்கமாக வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் அங்கேயே அமர்ந்து படித்து செல்லும் பெண்கள்மற்றும் போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவ, மாணவிகள் பலர் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை படித்து வருகிறார்கள். மேலும் அவர்கள் அங்கேயே மதிய உணவு எடுத்து வந்து படித்து விட்டு பின் வீட்டுக்கு செல்கின்றார்கள்.

    அந்த நூலக வளாகத்தில் கழிப்பிட வசதி இல்லாததால் தேர்வுக்கு படிப்பவர்கள் மற்றும் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு நூலக அமைந்துள்ள பகுதியில் கழிப்பிட வசதி இல்லாததால் பஸ் நிலை யத்திற்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளது.

    எனவே இங்கு வரும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனித்தனி கழிப்பறை வசதி செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என்று வாசகர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • நிகழ்ச்சிக்கு செஞ்சி ரோட்டரி சங்கத் தலைவர் பாஸ்கர் செய லாளர் மைக்கேல் ஜெரால்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • பேரூராட்சி கவுன்சிலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    செஞ்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் செஞ்சி ரோட்டரி சங்கம் மற்றும் 9-வதுவார்டு கவுன்சிலர் ஆகியோர் பங்களிப்புடன் ரூ15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடம் திறப்பு விழா நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறுபான்மை யினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு புதிய கழிவறை கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு செஞ்சி ரோட்டரி சங்கத் தலைவர் பாஸ்கர் செய லாளர் மைக்கேல் ஜெரால்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர்கள் செஞ்சி விஜய குமார் வல்லம் அமுதா ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் அரங்கஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன் , பேரூராட்சி உதவி செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் கார்த்திக், பேரூ ராட்சி துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல் மணி மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அதிகாரிகளுக்கும்,பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநக ராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு ஊருடையார்புரம் பொதுமக்கள் தமிழர் விடுதலைக்களம் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊருடை யார்புரம் பகுதியில் பொதுப்பயன்பாட்டில் உள்ள கழிப்பிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

    15-வது வார்டு நதிபுரம் பகுதியில் நீண்ட நாட்களாக நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி சீரான குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது திடீரென பொது மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மேயர் மாநகராட்சி கமிஷனரை நேரில் சந்தித்து மனுக்களை கொடுத்து விட்டு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • அருப்புக்கோட்டை பஸ் நிலையத்தில் கழிப்பிட வசதி இல்லாததால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
    • ஏற்கனவே இருந்த நகராட்சி கழிப்பிடம் சேதம் அடைந்து மோசமான நிலையில்உள்ளது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் மதுரை சாலையில் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து 50-க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 1000-க்கும் மேற்பட்டபயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்த பஸ் நிலையத்தில் ஏற்கனவே இருந்த நகராட்சி கழிப்பிடம் சேதம் அடைந்து மோசமான நிலையில்உள்ளது.இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திறந்தவெளியில் சிறுநீர், மலம் கழித்து வருகின்றனர்

    இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    உடனடியாக நகராட்சி நிர்வாகம் புதிய பஸ் நிலையத்தில் கழிப்பிட வசதி செய்து தருமாறு பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    ×