search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண்மை"

    • அருப்புக்கோட்டையில் வேளாண் கருத்தரங்கம் நடந்தது.
    • ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.

    பாலையம்பட்டி

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மானிய திட்டங்கள் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.

    தேசிய தோட்டக்கலை வாரிய துணை இயக்குனர் ராஜா மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மானிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

    இதில் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.

    கருத்தரங்கில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியாரம்மாள், துணை இயக்குனர் வேளாண்மை (மத்திய அரசு திட்டம்) சுமதி, தோட்டக்கலை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், வேளாண்மை அறிவியல் நிலையம் பேராசிரியர் ராஜா பாபு, செல்வி ரமேஷ், தொழில் வல்லுநர் ராகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • விதை உற்பத்தி கண்காணிப்புக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • அனைத்து நடைமுறைகளையும் கடைபிடிக்க களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    ஈரோடு:

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள் ஒவ்வொரு ஆண்டும் உயர் விளைச்சல் தரும் பயிர் ரகங்கள் கண்டறிந்து வெளியிட்டு வருகின்றது.

    அவ்வாறு வெளி யிடப்பட்ட உயர் விளைச்சல் ரகங்களின் கருவிதைகளை கொண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்க ழகம், கோவை மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களில் விதைப்பண்ணைகள் அமைத்து வல்லுநர் விதை உற்பத்தி செய்து மாநில அரசு விதைப்பண்ணை களுக்கு விதை பெருக்கத்திற்காகவும் விவசாயிகளுக்கு சாகுபடிக்காகவும் வழங்கப்பட்டு வருகின்றது.

    இவ்வாறு அமைக்கப்படும் விதைப்பண்ணைகளை ஆய்வு செய்து வயல் ஆய்வு தரத்தினை துல்லியமாக கடைபிடித்து தரமான விதைகளை உற்பத்தி செய்வதை உறுதி செய்திடும் பொருட்டு வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு இக்குழு வானது விதைப்ப யிர் பூப் பருவம், அறுவடைப்பருவம் மற்றும் விதைக்குவியல், விதைசுத்தி ஆகிய நிலைகளில் ஆய்வு செய்து விதைத் தரத்தினை உறுதி செய்கின்றது.

    இந்நிலையில் நடப்பு பருவத்தில் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நிலக்கடலை பி எஸ் ஆர் 2 இரகம் வல்லு நர் நிலை விதை ப்பண்ணை அமை க்கப்பட்டு விதைப்ப யிர் பூப் பருவம் மற்றும் அறு வடை பருவ த்தில் உள்ளது.

    இவ்விதைப்ப ண்ணை யை தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தின் பயிர் இனப்பெ ருக்கம் மற்றும் மரபியல் துறையின் இயக்குநர் ரவிகே சவன்,

    பேராசிரியர் குமரேசன், பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சக்திவேல், பேராசிரியர்கள் உத்தராசு,

    அமுதா மற்றும் ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் அடங்கிய வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின்போது விதைப்பயிர் நடவு முறை, விதைப்பயிரில் பிற ரக கலவன்கள், பயிர் விலகு தூரம், குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர்.

    மேலும் தரமான வல்லுநர் விதைகளை உற்பத்தி செய்திட தேவையான அனைத்து நடைமுறைகளையும் கடை பிடிக்க களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பல இட ஆராய்ச்சி திடல்களான நிலக்கடலை, எள், கம்பு, சூரியகாந்தி மற்றும் மக்காச்சோளம் பயிர்களின் செயல்திறன் ஆய்வு செய்யப்பட்டது.

    • சிவகங்கை, காளையார்கோவில் வட்டாரங்களில் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.3.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மற்றும் காளையார்கோவில் வட்டாரங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல்துறை ஆகியவைகளின் திட்ட செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    வேளாண்மை-உழவர்நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் சிவகங்கை மாவட்டத்தில் 43 தரிசு நிலத்தொகுப்புகளில் 330 எக்டேர் பரப்பில் முட்புதர்கள் நீக்கி போர்வெல் அமைத்து மின் இணைப்புடன் கூடிய மின்மோட்டார் அமைத்தல், நுண்ணீர் பாசனம், சொட்டு நீர்பாசனம் அமைத்தல், பழக்கன்றுகள் நடவு செய்தல் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரும் திட்டத்தில் அரசு மானியமாக இதுவரை ரூ.3.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    இதில் ரூ.81 லட்சம் செலவிடப்பட்ட இரு தரிசு நில தொகுப்புகள் மாங்குடி மற்றும் மேலமருங்கூர் கிராமங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, திட்டப்பணிகளில் நிலுவை இனங்களை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நெல் தரிசில் உளுந்து சாகுபடி திட்டம் சிவகங்கை மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரூ.8 லட்சம் நிதி செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் உளுந்து விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதில் 30 ஏக்கர் பரப்பில் நெல் தரிசில் உளுந்து சாகுபடிக்கென மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக சிவகங்கை, காளை யார்கோவில் வட்டாரங்களில் சுந்தரநடப்பு மற்றும் பருத்திக் கண்மாய் கிராமங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    பசுமைப் போர்வை திட்டத்தில் பயன் தரும் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் ரூ.2.65 லட்சம் மரக்கன்றுகள் முழுமையாக ரூ.39.75 லட்சம் மானியத்தில் 531 எக்டேர் பரப்பில் நடவு செய்யப்பட்டுள்ளது. இதில் பருத்திக்கண்மாய் கிராமத்தில் நடவு செய்யப்பட்டுள்ள மகாகனி மற்றும் ரோஸ்உட் மரக்கன்றுகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    சிவகங்கை மாவட்டத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தென்னையில் காண்டாமிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த 50சதவீத மானியத்தில் இனக்கவர்ச்சி பொறிகள் 200 எண்கள் 1.94 லட்சம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கபட்டுள்ளது. இதில் பருத்திகண்மாய் கிராமத்தில் ஒரு ஏக்கர் பரப்பில் நிறுவப்பட்ட இனகவர்ச்சி பொறியை ஆய்வு செய்து பருத்தி கண்மாய் கிராமத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் பண்ணைக் கருவிகள், விசைத்தெ ளிப்பான் மற்றும் விதைப்பு செய்யும் கருவிகள் விவசாயி களுக்கு வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது இணை இயக்குநர் (வேளாண்மை) தனபாலன், துணை இயக்குநர்கள் பன்னீர்செல்வம் (வேளாண்மை), அழகுமலை (தோட்டக்கலைத்துறை), வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர்கள் இந்திரா, சண்முகநதி, வேளாண்மை, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள் வளர்மதி, செந்தில்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாரம்பரிய வேளாண்மையை முன்னெடுப்போம்.
    • சுமார் 5 மணி நேர உழைப்பில் நம்மாழ்வார் உருவப்படத்தை வரைந்தனர்.

    தஞ்சாவூர்:

    இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் 85 -வது பிறந்தநாளை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாரம்பரிய உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்று மணலில் நம்மாழ்வார் உருவப்படத்தை இலை தழைகள், பூக்களால் மணலில் வரைந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    இதில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் , அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் மாரியப்பன் ஆகியோர் துணையோடு மாணவர்கள் நம்மாழ்வார் ஓவியத்தை தத்ரூபமாக வரைந்தனர்.

    மேலும் வரையப்பட்ட நம்மாழ்வார் உருவப்படம் முன்பு மரம் வளர்ப்போம், சுற்றுச்சூழலை காப்போம் , சிறுதானிய உணவு வகைகளை உண்போம், பாரம்பரிய வேளாண்மையை முன்னெடுப்போம்.

    பிளாஸ்டிக்கை அறவே தவிர்ப்போம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இதில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் சுமார் 5 மணி நேர உழைப்பில் நம்மாழ்வார் உருவப் படத்தை வரைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • ரூ.2.80 லட்சம் கொள்ளை போனது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்தவர் பழனிச்சாமி (50). இவர் அம்மாபேட்டையில் உள்ள வேளாண் அலுவலகத்தில் அதிகாரியாக உள்ளார்.

    இவரது மனைவி தவமணி. இவர் பவானி அருகே தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் பவிஷ்கர் ஐதராபாத்தில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பழனிச்சாமியும், அவரது மனைவி தவமணியும் வேலைக்கு சென்று விட்ட னர். வீட்டில் பழனிச்சாமி யின் தாயார் மட்டும் இருந்துள்ளார்.

    பின்னர் சிறிது நேரத்தில் அவரும் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு மற்றும் கதவு கடப்பாறையால் நெம்பி உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடை ந்தார்.

    இது குறித்து பழனிச் சாமிக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டினுள் பேக்கில் இருந்த ரூ.2.80 லட்சம் கொள்ளை போனது தெரிய வந்தது.

    வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.

    இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்ட னர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.

    வீட்டில் பொருத்தப்பட்டி ருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது 3 பேர் இருசக்கர வாகனத்தில் பழனிச்சாமி வீட்டில் இருந்து செல்வது பதிவாகி இருந்தது.

    இதன் அடிப்படையில் கவுந்தப் பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த திருட்டில் பழனிச் சாமியின் நெருங்கியவர்கள் யாராவது ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பொலவக்காளிபாளையம் கிராமத்தில் வேளாண்மை கிராமியக் கலைநிகழ்ச்சி நடை பெற்றது.
    • விவசாயிகளும் வேளாண் துறை சார்ந்த அனைத்து விவரங்களையும் பெற்று பயனடைவார்கள்.

    கோபி:

    கோபி செட்டிபாளையம் வட்டாரத்தில் வேளா ண்மை உழவர் நலத்துறை மூலம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் பொலவக்காளி பாளையம் கிராமத்தில் வேளாண்மை கிராமியக் கலைநிகழ்ச்சி நடை பெற்றது.

    இந்நிகழ்ச்சியை கோபி செட்டிபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முரளி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசினார்.

    அப்போது வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள், வேளாண் இடு பொருட்கள், வேளாண் உபகரணங்களின் மானிய விவரங்கள் மற்றும் பல நவீன சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த செய்திகளை தெருமுனை கிராமியக் கலை நிகழ்ச்சிகள் மூலம் அனைத்து விவசாயிகள், பொதுமக்களுக்கு தெரிய படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    இதனால் கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் வேளாண் துறை சார்ந்த அனைத்து விவரங்களையும் பெற்று பயனடைவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வேளாண்மை கணக்கெடுப்பு பணியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மாநிலத்தில் 2- வது இடம் பெற்றுள்ளது என மாவட்டகலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
    • அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மாநிலத்திலேயே 2-வது இடம் பெற்றுள்ளது

    கள்ளக்குறிச்சி:

    வேளாண்மை கணக்கெடுப்பு பணியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மாநிலத்தில் 2- வது இடம் பெற்றுள்ளது என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    இந்தியா முழுவதும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின்  வழிகாட்டுதல்படி, வேளாண்மை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவ ட்டத்தில் வேளாண்மை கணக்கெடுப்பு பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நடைபெற்றது. இப்பணியில் சேகரிக்கப்படும் விவரங்களி ன்அடிப்படையில் புதிய வேளாண்மை வளர்ச்சி திட்டங்கள் உருவாக்கப்படும். முதல் முறையாக இணையமுகப்பு மற்றும் கைபேசி செயலி மூலம் மாவட்டத்தில் உள்ள 596 வருவாய் கிராமங்களுக்கான நில பதிவேடுகளில் உள்ள விவரங்களிலிருந்து நில உபயோகம், பாசன ஆதாரம், பரப்பு விவரம் தொடர்பான விவரங்கள் இணையவழி வாயிலாக சேகரிக்கப்பட்டுமுதல் கட்ட பணிகள் முடிவடைந்தது. இப்பணியில் அனைத்து அலுவலர்களும் சிறப்பாக மேற்கொண்டு செயல்பட்டதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மாநிலத்திலேயே 2-வது இடம் பெற்றுள்ளது. மேலும் 2-ம் கட்ட பணியாக ஒவ்வொரு தாலுக்காவிலும் பயிர்முறை மற்றும் நீர்ப்பாசன ஆதாரங்கள் போன்ற விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.அதனை தொடர்ந்து 3-ம் கட்ட பணியாக ஒவ்வொரு தாலுக்காவிலும்உபயோகப்படுத்தப்பட்ட உள்ளீடுகள், விளைச்சல், உபயோகிக்கப்பட்ட வேளா ண்உபகரணங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணிமேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதிய கட்டிடம் ,தானிய கிடங்கு அலுவலகம் கட்டபட்டது.
    • பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று விவசாயிகள் வலியுருத்துகின்றனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வேளாண்மை அலுவகம் 60, 70 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

    பழைய கட்டிடம் என்பதாலும் தானிய கிடங்கு சிறிய அளவு உள்ளதாலும் கடந்த அ,தி,மு,க ஆட்சியில் புதிதாக வேளாண்மை கட்டிடம் கட்ட இடம் பார்த்து வந்தனர்.

    பின்பு சூளகிரியில் இருந்து உத்தனபள்ளி சாலை செல்லும் வழியில் சூளகிரி காவல் நிலையம் அருகே அரசு இடம் இருந்தது. 5 அடி பள்ளமான இடத்தில் அவசர அவசரமாக ரூ.2 கோடி மதிப்பில் ஒருங்கினைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிடம் ,தானிய கிடங்கு அலுவலகம் கட்டபட்டது.

    பின்பு பழைய அலுவலகத்தில் இருந்து அனைத்து அலுவலக பொருட்களை ஏற்றி வந்து புதிய அலுவலகம் இயங்கி வந்தது. கழிவு நீர் கால்வாய் அருகே பள்ளத்தில் கட்ட பட்ட கட்டிடம் என்பதால் அனைத்து கழிவு நீர்களும் புதிய கட்டிட வளாகத்தில் புகுந்ததாலும், மழை வந்தால் அனைத்து மழை நீரும் வந்து சேர்வதால் அலுவலர்கள் ,விவசாயிகள் வர முடியாததாலும் மீண்டும் பழை ய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு அங்கு இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று விவசாயிகள் வலியுருத்துகின்றனர்.

    • திருச்செந்தூர் வட்டாரத்தில் சுமார் 1700 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
    • விவசாயிகள் பயிர்காப்பீடு பிரிமியமாக ஒரு ஏக்கர் நெல்பயிருக்கு ரூ.467 செலுத்த வேண்டும்.

    உடன்குடி:

    விவசாயிகளுக்கு திருச்செந்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கட சுப்பிர மணியன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    திருச்செந்தூர் வட்டா ரத்தில் தற்போது நவரை கோடை பருவத்தில் சுமார் 1700ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. புயல், வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களிலிருந்து பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் பொழுதும், பூச்சி நோய் தாக்குதலினால் பயிருக்கு சேதம் ஏற்படும் போதும், பூச்சி நோய் நிவாரணம் அளிக்கும பொருட்டு பயிர் காப்பீடுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2022-23 ஆண்டுக்கான பிரதம மந்திரி பயிர் காப்பீடு த்திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் இப்போ டோக்கியோ நிறுவனத்தால் நடத்தப் படுகிறது.

    இத்திட்டத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறாத அனைத்து விவசாயிகளுக்கும் ஓரே பிரிமியத்தொகை மற்றும் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டுத்திட்டத்தில் விவசாயிகள் தாங்கள் பிரிமியம் கட்டும் காலத்திற்கு ஏற்றவாறு விதைக்க இயலாத சூழ்நிலை, விதைப்பு பொய்த்தல், மகசூல் இழப்பு ஆகிய நிலைகளில் பயிர் இழப்பீடு பெற்றிட வாய்ப்புகள் உள்ளன.

    நவரை/கோடை பருவ நெல் பயிருக்கு பிரிமியம் செலுத்தினால் பயிர் அறுவடை பரிசோதனை அடிப்படையில் விதிமுறை களுக்கு ஏற்ப இழப்பீடு பெற வழி உள்ளது. விவசாயிகள் பயிர்காப்பீடு பிரிமியமாக ஒரு ஏக்கர் நெல்பயிருக்கு ரூ.467மட்டும் செலுத்த வேண்டும்.

    இதுகடன் பெறும் மற்றும் கடன்பெறாத சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகள் அனைவருக்கும் பொருந்தும். விவசாயிகள் பிரிமியக் கட்டணத்தை தொடர்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசியமயமா க்கப்பட்ட வங்கி கள் மற்றும் பொது இ சேவை மையங்களிலும் செலுத்தலாம்.

    இதுகுறித்து விவசாயி களிடையே கிரா மங்களில் வேளாண்துறை விரிவாக்க அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகள் மற்றும் திருச்செந்தூர் வட்டார வேளாண்அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேச்சு
    • பாரம்பரிய விதை கண்காட்சி நடந்தது

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் அரசு ஏந்திர கலப்பை பணிமனையில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பாக மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பாக பாரம்பரிய பயிர்கள் மற்றும் பாரம்பரிய விவசாயம் தொடர்பான கண்காட்சி நடைபெற்றது. அதில் நம்முடைய பகுதியில் விளையக்கூடிய பல்வேறு வகையான பயிர்கள் மற்றும் நம்முடைய பகுதியில் என்னென்ன வகையான முறைகளை கையாண்டு நாம் வேளாண்மை துறையில் செய்து வருகின்றோம்.

    அந்த முறைகளுக்கு தேவையான கருவிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண் பெருமக்கள் அறிய ரக பயிர்களை கொண்டு வந்து காட்சிப்படுத்தி உள்ளனர். நம்முடைய வாழ்க்கை முறை என்பது தட்பவெட்பம் போன்ற பல்வேறு பிரிவுகளால் அமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பகுதியை பொறுத்தவரை வெப்பமண்டலத்தில் அமைந்திருக்கக்கூடிய பகுதி.

    இந்த பகுதியில் கோடைகாலத்தில் உச்சபட்ச வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் ஆகும். குளிர்காலத்தில் குறைந்தபட்ச வெப்பம் 14 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. தற்பொழுது நாம் குளிர்காலத்தில் மையப் பகுதியில் உள்ளோம். இந்த பனிக்காலத்தில் நோய் தாக்குதல் என்பது சற்று குறைவாகவே இருக்கும். தை மாதம் என்பது நெல், சோளம், சிறுதானியங்களை அறுவடை செய்ய உகந்த காலம்.

    வேளாண்மை என்பது இன்றியமையாத ஒரு தொழில் இந்த தொழிலை நாம் வாழ்க்கை முறையாக பின்பற்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஐ.நா. அறிவிப்பை ஆதரிக்கும் விதமாக மத்திய அரசு வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை கொண்டு வர வேண்டும் என தமிழக ஏரி ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்
    • இந்தியாவில் வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்தவும், பாரம்பரிய உணவுகளை பாது–காக்கவும் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    திருச்சி:

    தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயி–கள் சங்க மாநில தலைவர் பூரா.விஸ்வநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-உலகெங்கும் வாழும் மக்கள் சர்க்கரை நோய், இதய நோய், வாத நோய், எலும்புருக்கி நோய் போன்ற தீராத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் நோய் எதிர்ப்பு சக்தி தரும் பாரம்பரிய உணவு உற்பத்தி இல்லாததே காரணம் என்பதை ஐ.நா. பொது சபை நடத்தியுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.

    அதைத்தொடர்ந்து அதி–கம் விவசாயத்தை மேற்கொள்ளும் நாடுகள் சிறு–தானிய உணவு பொருட்களை பயிர் செய்யும் ஆண்டாக 2023-ம் ஆண்டினை ஐ.நா. சபை அறிவித்துள்ளது வர–வேற்கத்தக்கது. கேழ்வரகு, கம்பு, வரகு, சின்ன சோளம், தினை, சாமை, குதிரைவாலி, கொள்ளு, எள்ளு, துவரை, கொத்தமல்லி போன்ற சிறுதானியங்கள் மனித உயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் வல்லமை கொண்டது.

    எனவே இந்தியாவில் வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்தவும், பாரம்பரிய உணவுகளை பாது–காக்கவும் பிரதமர் நடவ–டிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக 2023 ஆம் ஆண்டு சிறுதானிய ஆண்டாக ஐ.நா. பொது சபை அறிவிப்பை ஆதரிக்கும் விதமாக விவசா–யிகளின் நலன்கருதி இந்தி–யாவில் சிறுதானிய பயிர்களை உற்பத்தி செய்து தீராத பல நோய்களிலிருந்து நாட்டு மக்களையும், விவசாயிக–ளையும் காப்பாற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வேளாண்மைக்கு என தனி பட்ஜெட்டை கொண்டு வர–வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முசிறியில் வேளாண்மை பயிற்சி பெறும் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது
    • முகாமில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், எடுத்துரைக்கவும் பயிற்சி மேற்கொள்ளப்படும் என கல்லூரி மாணவிகள் கூறினர்.

    முசிறி:

    முசிறி வடுகப்பட்டியில் நாளந்தா வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பாக கிராமத்தில் தங்கி வேளாண் பயிற்சி பெறும் திட்டம் துவக்க விழா வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இளங்கலை வேளாண் மாணவி யோகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். வேளாண் கல்லூரி முதல்வர் சேகர் முன்னிலை வகித்தார். நகர மன்ற தலைவர் கலைச்செல்வி, துணை தலைவர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்

    . நிகழ்ச்சியில் முசிறி வேளாண் அலுவலர் பிரியங்கா, தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ், கிராம நிர்வாக அலுவலர் சௌந்தர்ராஜன், இணை பேராசிரியர் குணா, உதவி பேராசிரியர் கனகராஜ், உதவி பேராசிரியர் சீபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 75 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சி முகாமில் முசிறி வட்டாரத்தில் உள்ள வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், எடுத்துரைக்கவும் பயிற்சி மேற்கொள்ளப்படும் என கல்லூரி மாணவிகள் கூறினர்.முடிவில் இளங்கலை வேளாண் மாணவி நந்திதா நன்றி கூறினார்.


    ×