search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண்மை கணக்கெடுப்பு பணியில்  கள்ளக்குறிச்சி மாவட்டம் மாநிலத்தில் 2 - வது இடம்: மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்
    X

    வேளாண்மை கணக்கெடுப்பு பணியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மாநிலத்தில் 2 - வது இடம்: மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்

    • வேளாண்மை கணக்கெடுப்பு பணியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மாநிலத்தில் 2- வது இடம் பெற்றுள்ளது என மாவட்டகலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
    • அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மாநிலத்திலேயே 2-வது இடம் பெற்றுள்ளது

    கள்ளக்குறிச்சி:

    வேளாண்மை கணக்கெடுப்பு பணியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மாநிலத்தில் 2- வது இடம் பெற்றுள்ளது என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    இந்தியா முழுவதும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் வழிகாட்டுதல்படி, வேளாண்மை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவ ட்டத்தில் வேளாண்மை கணக்கெடுப்பு பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நடைபெற்றது. இப்பணியில் சேகரிக்கப்படும் விவரங்களி ன்அடிப்படையில் புதிய வேளாண்மை வளர்ச்சி திட்டங்கள் உருவாக்கப்படும். முதல் முறையாக இணையமுகப்பு மற்றும் கைபேசி செயலி மூலம் மாவட்டத்தில் உள்ள 596 வருவாய் கிராமங்களுக்கான நில பதிவேடுகளில் உள்ள விவரங்களிலிருந்து நில உபயோகம், பாசன ஆதாரம், பரப்பு விவரம் தொடர்பான விவரங்கள் இணையவழி வாயிலாக சேகரிக்கப்பட்டுமுதல் கட்ட பணிகள் முடிவடைந்தது. இப்பணியில் அனைத்து அலுவலர்களும் சிறப்பாக மேற்கொண்டு செயல்பட்டதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மாநிலத்திலேயே 2-வது இடம் பெற்றுள்ளது. மேலும் 2-ம் கட்ட பணியாக ஒவ்வொரு தாலுக்காவிலும் பயிர்முறை மற்றும் நீர்ப்பாசன ஆதாரங்கள் போன்ற விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.அதனை தொடர்ந்து 3-ம் கட்ட பணியாக ஒவ்வொரு தாலுக்காவிலும்உபயோகப்படுத்தப்பட்ட உள்ளீடுகள், விளைச்சல், உபயோகிக்கப்பட்ட வேளா ண்உபகரணங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணிமேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×