search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் வட்டார விவசாயிகள் பயிர் இழப்பீட்டை தவிர்க்க உடனடியாக காப்பீடு செய்யுங்கள்-வேளாண்மை உதவி இயக்குனர் வேண்டுகோள்
    X

    திருச்செந்தூர் வட்டார விவசாயிகள் பயிர் இழப்பீட்டை தவிர்க்க உடனடியாக காப்பீடு செய்யுங்கள்-வேளாண்மை உதவி இயக்குனர் வேண்டுகோள்

    • திருச்செந்தூர் வட்டாரத்தில் சுமார் 1700 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
    • விவசாயிகள் பயிர்காப்பீடு பிரிமியமாக ஒரு ஏக்கர் நெல்பயிருக்கு ரூ.467 செலுத்த வேண்டும்.

    உடன்குடி:

    விவசாயிகளுக்கு திருச்செந்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கட சுப்பிர மணியன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    திருச்செந்தூர் வட்டா ரத்தில் தற்போது நவரை கோடை பருவத்தில் சுமார் 1700ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. புயல், வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களிலிருந்து பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் பொழுதும், பூச்சி நோய் தாக்குதலினால் பயிருக்கு சேதம் ஏற்படும் போதும், பூச்சி நோய் நிவாரணம் அளிக்கும பொருட்டு பயிர் காப்பீடுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2022-23 ஆண்டுக்கான பிரதம மந்திரி பயிர் காப்பீடு த்திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் இப்போ டோக்கியோ நிறுவனத்தால் நடத்தப் படுகிறது.

    இத்திட்டத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறாத அனைத்து விவசாயிகளுக்கும் ஓரே பிரிமியத்தொகை மற்றும் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டுத்திட்டத்தில் விவசாயிகள் தாங்கள் பிரிமியம் கட்டும் காலத்திற்கு ஏற்றவாறு விதைக்க இயலாத சூழ்நிலை, விதைப்பு பொய்த்தல், மகசூல் இழப்பு ஆகிய நிலைகளில் பயிர் இழப்பீடு பெற்றிட வாய்ப்புகள் உள்ளன.

    நவரை/கோடை பருவ நெல் பயிருக்கு பிரிமியம் செலுத்தினால் பயிர் அறுவடை பரிசோதனை அடிப்படையில் விதிமுறை களுக்கு ஏற்ப இழப்பீடு பெற வழி உள்ளது. விவசாயிகள் பயிர்காப்பீடு பிரிமியமாக ஒரு ஏக்கர் நெல்பயிருக்கு ரூ.467மட்டும் செலுத்த வேண்டும்.

    இதுகடன் பெறும் மற்றும் கடன்பெறாத சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகள் அனைவருக்கும் பொருந்தும். விவசாயிகள் பிரிமியக் கட்டணத்தை தொடர்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசியமயமா க்கப்பட்ட வங்கி கள் மற்றும் பொது இ சேவை மையங்களிலும் செலுத்தலாம்.

    இதுகுறித்து விவசாயி களிடையே கிரா மங்களில் வேளாண்துறை விரிவாக்க அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகள் மற்றும் திருச்செந்தூர் வட்டார வேளாண்அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×