search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண் திட்டங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    வேளாண் திட்டங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு

    • சிவகங்கை, காளையார்கோவில் வட்டாரங்களில் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.3.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மற்றும் காளையார்கோவில் வட்டாரங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல்துறை ஆகியவைகளின் திட்ட செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    வேளாண்மை-உழவர்நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் சிவகங்கை மாவட்டத்தில் 43 தரிசு நிலத்தொகுப்புகளில் 330 எக்டேர் பரப்பில் முட்புதர்கள் நீக்கி போர்வெல் அமைத்து மின் இணைப்புடன் கூடிய மின்மோட்டார் அமைத்தல், நுண்ணீர் பாசனம், சொட்டு நீர்பாசனம் அமைத்தல், பழக்கன்றுகள் நடவு செய்தல் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரும் திட்டத்தில் அரசு மானியமாக இதுவரை ரூ.3.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    இதில் ரூ.81 லட்சம் செலவிடப்பட்ட இரு தரிசு நில தொகுப்புகள் மாங்குடி மற்றும் மேலமருங்கூர் கிராமங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, திட்டப்பணிகளில் நிலுவை இனங்களை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நெல் தரிசில் உளுந்து சாகுபடி திட்டம் சிவகங்கை மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரூ.8 லட்சம் நிதி செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் உளுந்து விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதில் 30 ஏக்கர் பரப்பில் நெல் தரிசில் உளுந்து சாகுபடிக்கென மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக சிவகங்கை, காளை யார்கோவில் வட்டாரங்களில் சுந்தரநடப்பு மற்றும் பருத்திக் கண்மாய் கிராமங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    பசுமைப் போர்வை திட்டத்தில் பயன் தரும் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் ரூ.2.65 லட்சம் மரக்கன்றுகள் முழுமையாக ரூ.39.75 லட்சம் மானியத்தில் 531 எக்டேர் பரப்பில் நடவு செய்யப்பட்டுள்ளது. இதில் பருத்திக்கண்மாய் கிராமத்தில் நடவு செய்யப்பட்டுள்ள மகாகனி மற்றும் ரோஸ்உட் மரக்கன்றுகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    சிவகங்கை மாவட்டத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தென்னையில் காண்டாமிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த 50சதவீத மானியத்தில் இனக்கவர்ச்சி பொறிகள் 200 எண்கள் 1.94 லட்சம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கபட்டுள்ளது. இதில் பருத்திகண்மாய் கிராமத்தில் ஒரு ஏக்கர் பரப்பில் நிறுவப்பட்ட இனகவர்ச்சி பொறியை ஆய்வு செய்து பருத்தி கண்மாய் கிராமத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் பண்ணைக் கருவிகள், விசைத்தெ ளிப்பான் மற்றும் விதைப்பு செய்யும் கருவிகள் விவசாயி களுக்கு வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது இணை இயக்குநர் (வேளாண்மை) தனபாலன், துணை இயக்குநர்கள் பன்னீர்செல்வம் (வேளாண்மை), அழகுமலை (தோட்டக்கலைத்துறை), வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர்கள் இந்திரா, சண்முகநதி, வேளாண்மை, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள் வளர்மதி, செந்தில்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×