search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாங்கண்ணி"

    • சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் புனித வெள்ளி வழிபாடு நடந்தது.
    • இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் சார்பில் புனித வெள்ளி வழிபாடு நடந்தது. ஆலய பங்குதந்தை பாஸ்கர் டேவிட் தலைமை வகித்தார். தொன்போஸ்கோ ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் தாளாளர் ஆரோக்கியம், பள்ளி முதல்வர் ஆல்பிரட், நிர்வாகிகள் சார்லஸ், பிரபு, ரோஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கீழ ஈரால் பங்குத்தந்தை அலெக்ஸ் கலந்து கொண்டார்.

    சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மாதா ஆலய தலைவர் அந்தோணிராஜ், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் பரலோகராஜ், முன்னாள் தலைவர்கள் ஜெயராஜ், அந்தோணிராஜ், முன்னாள் செயலாளர்கள காமராஜ், அருள் பால்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி ஆலயம் சார்பில் குருத்தோலை பவனி நடந்தது.
    • பெண்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக வந்து அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தை வந்தடைந்தனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி ஆலயம் சார்பில் குருத்தோலை பவனி நடந்தது. பாதிரியார் பாஸ்கர் டேவிட் தலைமை தாங்கினார். தொன்போஸ்கோ பள்ளி தாளாளர் ஆரோக்கியம், முதல்வர் ஆல்பிரட், நிர்வாகிகள் சார்லஸ், பிரபு, ரோஷன் முன்னிலை வகித்தனர். வி.வி.ஆர்.நகரில் இருந்து பெண்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக தூத்துக்குடி- ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வந்து அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தை வந்தடைந்தனர். பின்பு மாதா கோவிலில் ஜெபம் செய்யப்பட்டது. இதில் மாதா கோவில் தலைவர் அந்தோணிராஜ், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் பரலோக ராஜ், முன்னாள் தலைவர் ஜெயராஜ், முன்னாள் செயலாளர் காமராஜ், நிர்வாகி அருள் பால்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • சென்னை-கன்னியாகுமரி வழித்தடத்தில் அதிக ரெயில்களை இயக்க வேண்டும்.
    • விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

    நாகர்கோவில்:

    தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், கூடுதல் மேலாளர் மல்லையா, முதன்மை ரெயில்வே இயக்குநர் நீனு ஆகியோரை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்து மனு அளித்தார்.

    குமரி, நெல்லை, விருது நகர், மதுரை போன்ற தென்மாவட்ட மக்கள் கல்வி, வேலை, வியாபாரம், மருத்துவம், உறவுகளை சந்திப்பது மற்றும் சுற்றுலா சம்மந்தமாக அதிக அளவில் மக்கள் சென்னை, கன்னியாகுமரி வழித்தடத்தில் பயணிப்ப தால், போதிய ரெயில்கள் இல்லா ததால் மக்கள் கார்களி லும், பேருந்துகளிலும் சென்று பெரும் சிரமம் அடைவதோடும் சாலை விபத்துகள், உயிரிழப்புகள் மற்றும் அதிக பண விரயம் ஏற்படும். எனவே சென்னை-கன்னியாகுமரி வழித்தடத்தில் அதிக ரெயில் களை இயக்க வேண்டும்.

    ஐதராபாத்-தாம்பரம் சார்மினார் ரெயிலை கன்னி யாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். இதனால் தென் மாவட்டங்களில் வசித்து வரும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மக்களுக்காகவும் தமிழக தென் மாவட் டங்களில் வசிக்கும் மக்களுக்கும் ஐதராபாத் சென்று வர நேரடி ரெயில் சேவை முக்கியமானது எனவே ஐதராபாத்-தாம்பரம் ரெயிலை கன்னி யாகுமரி வரை நீட்டிக்க வலியுறுத்தினார்.

    தஞ்சை பெரிய கோவில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் போன்ற மும்மத சுற்றுலாத் தலங்கள் செல்வதற்கு திண்டுக்கல், மதுரை, நெல்லை, தூத்துக் குடி, கன்னியாகுமரி வழித்த டத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை திருவனந்தபுரம்-வேளாங் கண்ணி மறுமார்க்கமாக ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணியளவில் வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திங்கள் காலை திருவனந்தபுரம் வந்து சேரும்படி இயக்க வலியுறுத்தினார். அதற்கு ஏதுவாக சென்னை சென்ட்ரல் நாகர்கோவில் ரெயிலை, திருவனந்தபுரம் வரை நீட்டிக்க வேண்டும். வாரத்தில் மூன்று நாள் இயக்கப்படும் தாம்பரம்-நாகர்கோவில் இரவு நேர இரயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும்.

    கொரோனா காலத்திற்கு முன்பாக பயணிகள் ரெயிலாக இயக்கப்பட்ட மதுரை - புனலூர் ரெயில் தற்போது விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திற்கு முன்பாக பள்ளியாடி, குழித்துறை மேற்கு, ஆரல்வாய்மொழி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று சென்றதை சுட்டிக் காட்டி மக்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் இந்த ரெயில் நிலையங்களில் மதுரை-புனலூர் விரைவு வண்டி நின்று செல்ல வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

    இதனை கேட்ட தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மேற்குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் மதுரை - புனலூர் விரைவு ரெயில் நின்று செல்ல வழிவகை செய்யப்படும் என உறுதியளித்தார். மேலும் அனந்தபுரி மற்றும் நாகர்கோவில்- மும்பை விரைவு ரெயில்களின் நிறுத்தங்களை குறைக்கா மல் அதிவிரைவு ரெயிலாக மாற்றி இயக்கவும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை விடுத்தார்.

    கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களையும் மேம்படுத்தி, அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தர வேண்டுமென்றும் கூறி னார்.

    கன்னியாகுமரி மாவட் டத்தில் மக்கள் ரெயில் தண்ட வாளங்களை கடந்து செல்ல ஏதுவாக மேம்பாலங்கள் அமைத்து தர வேண்டுமென வலியுறுத்தினார். குறிப்பாக கப்பியறை பஞ்சாயத்து, பள்ளியாடி அருகில் இணைப்பு பாலம் குழித்துறை மேம்பாலம், நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தின் அருகில் ஊட்டால் மொடு ரெயில்வே கிராஸிங்கில் மேம்பாலம் மற்றும் குழித்துறை மேற்கு கடந்தான் கோடு இணைப்பு பாலமும் உடனடியாக அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    கோரிக்கையின் மீது தேவையான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    • ரெயில் மொத்தம் நான்கு சேவைகள் மட்டும் அதாவது ஆகஸ்ட் மாதம் 17, 24, செப்டம்பர் 3, 7 ஆகிய நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டது.
    • குமரி மாவட்டம் வழியாக இயக்கப்பட்ட சிறப்பு எரயில் காலஅட்டவணை மோசமாக இருந்து சிறப்பு எரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று காத்திருப்போர் பட்டியல் உடனே இயங்கியது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட பயணிகள் வேளாங்கண்ணி கோவில் திருவிழாவை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு வாராந்திர ரெயிலை ரெயில்வேத்துறை அறிவித்து இயக்கியது.

    இந்த ரயில் ஒவ்வொரு புதன்கிழமையும் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை வேளாங்கண்ணி சென்று விட்டு மறுமார்க்கமாக வேளாங்கண்ணியிலிருந்து வியாழக்கிழமை புறப்பட்டு வெள்ளிக்கிழமை திருவனந்தபுரம் சென்றடையுமாறு இயக்கப்படுகின்றது. இந்த ரெயில் மொத்தம் நான்கு சேவைகள் மட்டும் அதாவது ஆகஸ்ட் மாதம் 17, 24, செப்டம்பர் 3, 7 ஆகிய நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டது.

    பயணிகள் மத்தியில் உள்ள வரவேற்பை பொறுத்து பின்னர் இந்த ரெயிலின் சேவை நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சி யது. இந்த ெரயிலின் சேவை நீட்டிப்பு செய்யாமல் செப்டம்பர் 7-ந் தேதியுடன் முடிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் கேரளா பயணிகள் பயன்படும் படியாக எர்ணா குளத்திலிருந்து கோட்டயம், கொல்லம், செங்கோட்டை, விருதுநகர், மானாமதுரை, திருச்சி வழியாக வேளாங் கண்ணிக்கு சிறப்பு ரெயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயிலின் கால அட்டவணையை எந்த ஒரு பயணிகளுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாமல் வெகு நேர்த்தியாக அமைக்கப்பட்டு கேரளாவுக்கு சாதகமாகவும் அமைக்கப்பட்டு இந்த ரெயிலின் சேவை நவம்பர் மாதம் முடியும் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    ஆனால் குமரி மாவட்டம் வழியாக இயக்கப்பட்ட சிறப்பு எரயில் காலஅட்டவணை மோசமாக இருந்து சிறப்பு எரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று காத்திருப்போர் பட்டியல் உடனே இயங்கியது.

    கன்னியாகுமரி மாவட் டத்திலிருந்து திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களுக்கு ெரயிலில் செல்ல தற்போது திருச்சி சென்று விட்டு இங்கிருந்து அடுத்த ெரயிலில் பயணிக்கலாம். ஆனால் இங்கிருந்து செல்லும் ெரயிலில் திருச்சி சென்றால் அங்கிருந்து எந்த ஒரு இணைப்பு ெரயிலும் இல்லை. இதைப்போல் நாகர்கோவிலில் இருந்து தஞ்சாவூருக்கு தற்போது நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா தினசரி ெரயிலும், கன்னியாகுமரி புதுச்சேரி வாராந்திர ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு ெரயில்களும் நடு இரவு நேரங்களில்தான் தஞ்சாவூர் பயணம் செய்கிறது. இந்த ெரயில்களில் தஞ்சாவூர் சென்றால் கூட அடுத்து மேற் கொண்டு பயணம் செய்ய எந்த ஒரு இணைப்பு ெரயில் வசதியும் இல்லை. இவ்வாறு இணைப்பு ெரயில் கூட இல்லாத நிலையில் குமரி மாவட்டத்திலிருந்து ெரயில் மார்க்கம் பயணிகள் பயணம் செய்ய முடியாமல் பேருந்துகளில் பயணம் செய்யும் நிலை உள்ளது.

    குமரி மற்றும் நெல்லை மாவட்டத்திலிருந்து தற்போது திருச்சி வழியாக செல்லும் ரெயில்கள் எல்லாம் நடு இரவு நேரங்களில் தான் செல்லுமாறு கால அட்டவணை அமைக் கப்பட்டு இயக்கப்படுகிறது.

    இதனால் திருச்சிக்கு பயணிகளுக்கு வசதியாக நேரத்தில் செல்ல எந்த ஒரு இரவு நேர ெரயிலும் தற்போது இல்லை. கொச்சு வேலியிருந்து நாகர்கோவில், திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு ெரயில் அறிவிக்கப்பட்டால் இந்த ெரயில் திருச்சிக்கு அதிகாலை 4 மணிக்கு செல்லுமாறு காலஅட்டவணை அமைக்கப்படும்.

    இவ்வாறு இயக்கப்பட்டால் தென்மாவட்டங்களிலிருந்து திருச்சிக்கு செல்லும் பயணிகளுக்கு நல்ல முறையில் ஓர் ெரயில் வசதி கிடைக்கும்.

    நாகப்பட்டினத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு புதிய ரெயில்பாதை அமைத்து வேளாங்கண்ணியில் புதிய ரெயில் நிலையம் கட்டுவதற்கு வேளாங்கண்ணி கோவில் சார்பாக ஒரு கோடி ரூபாய் ரெயில்வேத்துறைக்கு அளிக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் வேளாங்கண் ணிக்கு புதிய ெரயில்கள் இயக்குவதில் ரெயில்வேத்துறை தொடர்ந்து மறுத்து வருகிறது. வேளாங்கண்ணிக்கு செல்லும் தென்மாவட்ட பயணிகள் பயன்படும் விதத்தில் திருவனந்த புரத்திலிருந்து நாகர் கோவில் வழியாக வேளாங் கண்ணிக்கு இயங்கும் சிறப்பு ரெயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இருந்த நிலையிலும் அதனையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றனர்.
    • மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் தங்கள் பகுதிகளில் இருந்து நடை பயணமாக வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உலக புகழ் பெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு தினமும் வருவர்.

    இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பெரிய தேர் பவனி வருகிற 7-ந் தேதி நடைபெற உள்ளது. 8-ந் தேதி மாதாவின் பிறப்பு பெருவிழா நடைபெற உள்ளது.

    இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் தங்கள் பகுதிகளில் இருந்து நடை பயணமாக வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    அதன்படி கடந்த சில நாட்களாக திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தஞ்சை வழியாக வேளாங்கண்ணிக்கு நடை பயணமாக சென்று வருகின்றனர்.

    சிறிய மற்றும் பெரிய அளவில் சப்பரங்களை இழுத்துக் கொண்டு பின்னால் மினி லாரியில் ஒலிபெருக்கியில் மாதாவின் பாடல்களை ஒலிக்க விட்டவாறு செல்கின்றனர்.

    தஞ்சையில் மழை பெய்வதும், வெயில் அடிப்பதுமாக மாறி மாறி பருவநிலை காணப்படுகிறது.

    இருந்த நிலையிலும் அதனையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். 

    • சாயல்குடியில் வேளாங்கண்ணி ஆலய தேர் பவனி விழா நடந்தது.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்பவனியில் பங்கேற்றனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் 10 நாள் திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தினமும் மாலையில் ஆலய வளாகத்தில் ஜெபமாலை ஜெபித்து பவனியை வழிநடத்தி திருப்பலியில்பங்கேற்றனர்.

    திருப்பலிக்கு முன் ஒப்புரவு அருள் சாதனம் வழங்கப்பட்டது. திருப்பணியை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மின் ஒளி அலங்காரத்தில் அன்னை ஆரோக்கிய மாதா சாயல்குடி வீதிகளில் நகர்வலம் வந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு சாயல்குடி பங்குத்தந்தை பாஸ்கர் டேவிட் தலைமை தாங்கினார்.தொன் போஸ்கோ சி.பி.எஸ்.இ. பள்ளி தாளாளர் ஆரோக்கியம், முதல்வர் ஆல்பிரட், பங்கு தந்தைகள் சார்லஸ், பிரபு முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை மாதா கோவில் நிர்வாக தலைவர்- செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் காமராஜ் தொம்மை செபஸ்டியன் ஆகியோர் செய்து இருந்தனர். சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகள் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்பவனியில் பங்கேற்றனர்.

    • இது குறித்து மூர்த்தி வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • இதையடுத்து சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆர்ச்சில் பூவைத்தேடி கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் பழைய இருசக்கர வாக னங்கள் வாங்கி விற்பனை செய்யும் கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் 68 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மோட்டார்சைக்கிளை எடுத்து ஓட்டிச் சென்று பார்ப்பதாக கூறி மாய மானார்.

    இது குறித்து மூர்த்தி வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் செல்போன் டவர் கொண்டு இருப்பிடத்தை அறிந்தனர். விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 68 வயதான குமார் என்பதும், காரைக்காலில் வீடு எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்தது. அதை தொடர்ந்து காரைக்காலுக்கு சென்ற போலீசார் குமாரை கைது செய்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா ஆகஸ்டு 29-ந்தேதி தொடங்குகிறது.
    • 110 கிலோ மீட்டர் வேகத்தில் மின்பாதையில் ரெயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது.

    வெளிப்பாளையம் :

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    இதை தொடர்ந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கடந்த 2010-ம் ஆண்டு வேளாங்கண்ணிக்கு அகல பாதையில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

    கொரோனா தொற்று காரணமாக வேளாங்கண்ணி-நாகை இடையே ரெயில் சேவை கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 24-ந் தேதி நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு 2½ ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இருப்பினும் வேளாங்கண்ணிக்கு ரெயில் இயக்கப்படவில்லை. இந்த வழித்தடத்தில் உள்ள தண்டவாளத்தில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டிருந்ததால் ரெயில் சேவை தொடங்கப்படவில்லை.

    இதை தொடர்ந்து மண் சரிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில் தண்டவாளத்தின் இருபுறங்களிலும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வந்தது. இதற்கிடையில் இந்த வழித்தடத்தை மின் பாதையாக மாற்றும் பணியும் நடந்து வந்தது.

    சீரமைப்பு பணிகள் மற்றும் மின்பாதை அமைக்கும் பணி முடிவடைந்ததையொட்டி ரெயில்வே தொழில்நுட்ப பிரிவினர் இரண்டு முறை சோதனை செய்தனர். மேலும் 110 கிலோ மீட்டர் வேகத்தில் மின்பாதையில் ரெயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது.

    இதையடுத்து நாகை-வேளாங்கண்ணி மின் பாதையில் 29-ந்தேதி முதல் ரெயில்கள் இயக்கப்படும் என திருச்சி ரெயில்வே கோட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 2½ ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு புதிதாக அமைக்கப்பட்ட மின் பாதையில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ரெயில் என்ஜின் டிரைவர்கள், நாகை ரெயில் நிலைய மேலாளர் பிரபாகரன் ஆகியோருக்கு நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்க செயலாளர் அரவிந்குமார் மற்றும் சங்கர் ஆகியோர் சால்வை அணிவித்தனர்.

    வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா அடுத்த மாதம்(ஆகஸ்டு) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் வேளாங்கண்ணிக்கு மின்பாதையில் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது பயணிகள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×